காத்தான்குடி: ஹிஸ்புல்லாஹ் ஹெப்பி கிட்ஸ் பாலர் பாடசாலை மற்றும் ஹிஸ்புல்லாஹ் பாலர் பாடசாலை ஆகியவற்றின் 2014 வருடாந்த பாலர் விளையாட்டு விழா 12-10-2014 இன்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
ஹிஸ்புல்லாஹ் ஹெப்பி கிட்ஸ் பாலர் பாடசாலையின் தலைவர் எம்.எஸ்.எம்.அப்துல்லாஹ் ஜேபி தலைமையில் இடம்பெற்ற இவ் பாலர் விளையாட்டு விழாவில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டார்.
இதன் போது விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றிய பாலர்களுக்கும் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களுக்கும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் சான்றிதழும்,பரிசில்களும்,கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
இங்கு பாலர் பாடசாலை சிறுவர் சிறுமிகளின் ஆற்றல்களை பிரதிபலிக்கும் பலூன் உடைத்தல்,இசைக்கு தொப்பி மாற்றுதல்,மரம் நடுதல்,யானைநடை,கயிறுஇழுத்தல்,வினோத உடை ,சங்கீதகதிரை,இரட்டை நடை ,நீர் நிறப்புதல் ,அஞ்சல் ஓட்டம் போன்ற பல்வேறு பாலர் விளையாட்டுக்கள் இடம்பெற்றன.
இவ் விளையாட்டு விழாவில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக்,காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர்,காத்தான்குடி நகர சபை உறுப்பினர்களான பாக்கீர்,சல்மாஅமீர் ஹம்ஸா,காத்தான்குடி பிரதேச கோட்டக்கல்வி அதிகாரி எம்.ஏ.சி.எம்.பதுர்தீன்,பொலிஸ் அதிகாரிகள்,காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவர் மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா (பலாஹி),புதிய காத்தான்குடி சமுர்த்தி முகாமையாளர் எம்.ஏ.எம்.சுல்மி,காத்தான்குடி மத்ரஸது பாத்திமதுஸ்ஸஹ்றாவின் தலைவர் மௌலவி ஏ.எல்.ஆதம் லெப்பை (பலாஹி),சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் தலைவர் இல்மி அஹமட் லெவ்வை உட்பட ஹிஸ்புல்லாஹ் ஹெப்பி கிட்ஸ் பாலர் பாடசாலை மற்றும் ஹிஸ்புல்லாஹ் பாலர் பாடசாலை ஆகியவற்றின் பிரதிநிதிகள்,ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.