அல்ஹிறா பழைய மாணவர்களால் கௌரவப்படுத்தப்பட்ட ஆசான்கள்!

alhira– எம்.எச்.எம். அன்வர்

காத்தான்குடி: ஓக்டோபர் 05, உலக ஆசிரியர் தினமாகும். இதனை முன்னிட்டு நாட்டின் பல இடங்களிலும் நிகழ்வுகள் இடம்பெற்றன. சற்று வித்தியாசமாக 22 வருடங்களின் பின்னர் தங்களுக்கு கற்பித்த ஆசிரியர்களை நினைவு கூர்ந்து கௌரவித்து அவர்களுடன் பசுமையான நினைவுகளை பகிர்ந்து கொண்ட நிகழ்வொன்று 08.10.2014 அன்று காத்தான்குடியில் இடம்பெற்றது.

காத்தான்குடி வரலாற்றிலே முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலையாகவும் பல கல்விமான்கள் அறிஞர்களை உருவாக்கிய பாடசாலையானதுமான அல்ஹிறா மகா வித்தியாலயத்தில் 1992 ம் ஆண்டில் கல்விகற்ற மாணவர்கள் ஒன்று சேர்ந்து தங்களுக்கு கற்பித்த ஆசிரியர்களை அழைத்து அவர்களை கௌரவப்படுத்தினர்.

பிஸ்மி குர்ஆன் பாடசாலையின் பணிப்பாளர் அஷ்ஷெய்ஹ் எம் பீ எம் பிர்தௌஸ் நளீமி கொழும்பு பல்கலைக்கழக சட்டத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் எம் ஏ எம் ஹக்கீம் கொழும்பு சுகாதார திணைக்களத்தில் கடமைபுரியும் வைத்தியர் எம்.ஐ.எம்.ஹபீப் முஹம்மட் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற இந்நிகழ்வானது கற்பித்த ஆசிரிகளுக்கு மனநிறைவினை அளித்துள்ளதாகவும் இவ்வாறான நிகழ்வுகள் ஏனைய மாணவர்களுக்கு முன்மாதிரியாக அமைந்துள்ளது எனவும் அங்கு உரையாற்றிய ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

alhira

நாம் எத்தகைய நல்ல நிலையில் இருந்தபோதிலும் எமக்கு பாடம் சொல்லித்தந்து உருவாக்கிய ஆசான்களை நினைவு கூறுவதும் அவர்களின் இன்பதுன்பங்கள் கஷ்ட நிலைகளின்போது தோழ் கொடுத்து உதவுவதும் இன்றைய காலத்தின் தேவையாகும்
தான் ஓய்வு பெற்றபின்னர் யாரும் என்னை கவனிப்பதோ கௌரவித்ததோ கிடையாது வரலாற்றில் தடம்பதிக்கவேண்டிய இந்நிகழ்வினை எனது வாழ்நாளில் மறக்கமாட்டேன் 22 வருடங்களின் பின்னர் எங்களை நினைவு கூர்ந்து இக்கூட்டத்தினை ஏற்பாடு செய்ததையிட்டு அல்லாஹ்
வுக்கு நன்றிகூறுவதாக தெரிவித்து அழுதுவிட்டார் ஓர் ஆசிரியர்.

alhira

மற்றொரு ஆசிரியர் தனதுரையில் நாம் எத்தகைய சந்தர்ப்பத்திலும் அல்லாஹ்விடம் ‘றப்பி ஸிந்னி இல்மா’ யா அல்லாஹ் எங்கள் அறிவை விருத்தியடையச்செய்வாயாக என அதிகம் பிரார்திக்குமாறு தெரிவித்தார்.

இவ்வாறான நற்சிந்தனைகள் மற்றும் ஆசிரியர்களின் சுவாரசியமான சம்பவங்களுடன் இந்நிகழ்வு இடம்பெற்றதுடன் ஏனையவர்களுக்கு ஒரு முன்மாதிரியாகவும் இடம்பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

katchi mohamed alhira

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s