சகல பொலிஸ் நிலையங்களையும் இணைக்கும் VPN வலையமைப்பு நேற்று முதல் ஆரம்பம்

sri_lanka_policeகொழும்பு: இலங்கையிலுள்ள சகல பொலிஸ் நிலையங்களையும் ஒன்றிணைக்கும் நவீன VPN (Virtual Private Network) வலையமைப்பு நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்க ப்பட்டது. புதிய வலையமைப்பை பொலிஸ் மா அதிபர் என். கே. இளங்ககோன் பொலிஸ் தலைமையகத்தில் வைத்து ஆரம்பித்து வைத்ததோடு வீடியோ தொலைபேசி அழைப்பினூடாகவும் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவருடன் உரையாற்றினார்.

இந்த நிகழ்வின் போது உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு நவீன வசதியுடன் கூடிய கையடக்க தொலைபேசிகளும் வழங்கப்பட்டன. 4 இலக்கங்களுடன் கூடிய அழைப்பு இலக்கமுடைய இந்த தொலைபேசிகளினூடாக பாதுகாப்பான முறையில் தகவல் பரிமாறும் வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்போது பொலிஸ் இன்ஸ் பெக்டர்கள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் போன்றவர்களுக்கு கைபேசிகள் வழங்கப்பட்டன. டெலிகொம், மொபிடெல் மற்றும் ஜே. ஐ. ரி. நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் புதிய வலையமைப்பு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இங்கு உரையாற்றிய பொலிஸ் மா அதிபர் என். கே. இளங்ககோன் கூறியதாவது:-

பொலிஸ் தினத்துடன் ஒட்டியதாக மக்களுக்கு வழங்கும் சேவைகளை மேலும் செயற்திறன் மிக்கதாக மேம்படுத்தும் நோக்குடன் இந்த நவீன தகவல் வலையமைப்பு அறிமுகப்படுத்தப்படுகிறது. VPN தொழில்நுட்பத்தினூடாக இலங்கையிலுள்ள 438 பொலிஸ் நிலையங்களும் ஒரே வலையமைப்பில் இணைக்கப்படுகிறது. இதுவரை 361 பொலிஸ் நிலையங்கள் இதில் உள்வாங்கப்பட்டுள்ளதோடு எஞ்சிய பொலிஸ் நிலையங்கள் விரைவில் இதில் இணைக்கப்படும்.

இந்த நடவடிக்கையினூடாக பொலிஸின் நிர்வாக நடவடிக்கைகள் இலகுவாவதோடு மக்களுக்கு மேலும் சிறந்த சேவையை வழங்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தும் நடவடிக்கைக்கும் குற்றத்தடுப்பு செயற்பாட்டிற்கும் இந்த புதிய தொழில்நுட்ப வலையமைப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஏPN தொழில் நுட்பத்தினூடாக சந்தேக நபர்களின் விரல் அடையாளங்களை பொலிஸ் நிலையங்களுக்கு அனுப்பி துரிதமாக பரீட்சித்து பெறுபேறுகளை பெறலாம். தொல் வாய்ப்பு மற்றும் தேவைகளுக்காக பொது மக்களுக்கு விரல் அடையாளங்களை வழங்கும் நடவடிக்கைக்கான காலம் குறைவடையும்.

இது தவிர சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளை கொழும்புக்கு வரவழைக்காது தொர்புகொள்ளவும் எந்த புதிய தொழில் நுட்பம் உதவுகிறது. வீடியோ அழைப்பினூடாக தொடர்புகொள்ளவும் வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் இன்ஸ்பெக்டர் பதவியில் இருந்து உயர் பதவி வரையுள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு கையடக்கத் தொலைபேசிகளும் வழங்கப்பட்டுள்ளன. இதனூடாக உயர் பொலிஸ் அதிகாரிகளை கட்டணமின்றி துரிதமாக தொடர்புகொள்ள முடியும் தொலைபேசிக்கான செலவும் குறையும்.

ஏPN தொழில்நுட்பம் அறிமுகப் படுத்தப்படுவதன் மூலம் ஆவணங்களுக் காக செலவிடும் பெருமளவு செலவும் குறையும்.

பொலிஸாரினால் மக்களுக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய சேவைகளை மேலும் சிறப்பாக முன்னெடுக்க இந்த புதிய தொழில் நுட்ப வலையமைப்பு பெரும் வாய்ப்பாக அமையும். சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரத்ன கூறியதாவது:-

மக்களுக்கு நெருக்கமான சேவை வழங்குவதற்கு இந்த புதிய தொழில்நுட்பம் உதவியாக இருக்கும். பொலிஸ் சுற்று நிருபங்கள் உத்தரவுகளை அச்சிட்டு பொலிஸ் நிலையங்களுக்கு அனுப்பாது புதிய தொழில் நுட்பத்தினூடாக அனுப்ப முடியும். உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு வீடியோ தொலைபேசி அழைப்புகளையும் பெறலாம் என்றார்.

டெலிகொம் நிறுவன பிரதம தொழில் முயற்சி அதிகாரி கீர்த்தி பெரேரா கூறியதாவது:-

பொலிஸ் அதிகாரிகளுக்கு மிகவும் நவீனரக கைபேசிகள் வழங்கப்பட்டுள்ளன. 10 இலக்கங்களுக்குப் பதிலாக 4 இலக்கங்களுடைய அழைப்பு இலக் கங்களுடன் கூடியதாக வடிவமைக்கப் பட்டுள்ள இந்த கைபேசிகள் முதற் தடவையாகவே இங்கு அறிமுகப் படுத்தப்படுகிறது என்றார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s