‘பெருநாள் வாழ்த்துச் செய்திக்கு பதிலாக ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறேன்’ -இல்மி அஹமட் லெவ்வையின் பெருநாள் செய்தி

ILMI ahamed lebbeகாத்தான்குடி: வழமை போல வருடாந்த நோன்புப் பெருநாள் வாழ்த்துச்செய்தி எழுத பேனாவைத் துலக்கியபோது – அது சிவப்பு சாயங்களை பீச்சியது – கரங்கள் தடுமாற கண்களில் கண்ணீர் கசிய வாழ்த்துச் செய்திக்கு பதிலாக வருத்துச் செய்தி எழுதுவதுதான் ஈமானைச் சுமந்த இஸூலாமியனின் தீர்மானமாக இருக்க வேண்டும் என்று – எனது மனச்சாட்சி தீர்ப்பளித்தது.

என காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் தலைவரும் சமூக சேவையாளருமான இல்மி அஹமட் லெவ்வை தெரிவித்தார்.

ஆயிரக்கணக்கான இஸ்லாமிய உம்மாக்களின் ஜனாஸாக்கள் குருதியால் குளிபாட்டப்படுகிற போது இகபன் பிடவைக்கும் தட்டுப்பாட்டால் நம் ஈமானியங்கள் துடிக்கின்ற போதும் இகுடிப்பதற்கு பால்மா இல்லாமல் வயிற்றைப் பிழந்தெடுத்த பிஞ்சுக்குழந்தை கதருகின்ற போதும் சங்கியால் கட்டி சுடுமண்ணில் சித்திரவதைகள் நடக்கின்ற போதும் எப்படி நாங்கள் ஓரு ஈமானியனாக இருந்து கொண்டு

வாழ்த்து மடல் அனுப்ப முடியும் .. ?

அதனால் பெருநாள் ஆடைகளையும் பாதியாய் குறைத்து வருடந்தோரும் நான் நம் ஈமானிய உறவுகளுக்கு அனுப்பும் வாழ்த்துச் செய்தியையும் நிறுத்தி பெருநாள் களிப்புகளையும் என்னால் முடிந்த வரம்புக்குள் கட்டுப்படுத்தி
வாழ்த்துச்செய்திக்கு பதிலாக கண்ணீரால் குளிக்கும் காசாவுக்கு இதயத்தால் கொதிக்கும் வருத்தச் செய்தியாக அனுப்பி அழ்ழாஹ்விடத்தில் பிரார்த்திப்பதுதான் ஒர் அளவான ஆத்ம அறுதலைத்தருகின்றது.
எனவே எனது வாழ்த்துச் செய்தியை வழமையாய் வாசித்து பதிலை பகிர்ந்து கொள்ளும்; நீங்களும் துடிக்கும் நம் காசா மக்களுக்காக இருகரமேந்துங்கள் இதுவேனும் நம்மால் முடிந்த கூட்டுப் பொறுப்பாக இருக்கும் என வினயமான உங்களையும் கேட்டுக்கொள்கின்றேன்.அல்ஹம்துலில்லாஹ்!இவ்வாறு இல்மி அஹமட் லெவ்வை மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s