மக்கா: அல்லாஹ்வின் புனித ஆலயத்திலிருக்கும் அல்லாஹ்வின் வீட்டை (பைத்துல்லாஹ்-கஃபா) மேலால் போர்த்தப்படும் ஆடைக்கு ‘கிஸ்வா’ என அழைக்கப்படுகிறது. இந்த கிஸ்வா தயாரிப்புக்கு 22 மில்லியன் சவுதி றியால்கள் செலவாகின்றன. இரு ‘ஹரங்களினதும் காவலன்’ என அழைக்கப்படும் மன்னர் அப்துல்லாஹ்வின் பொருப்பின் கீழ் இந்த ‘கிஸ்வா’ ஆடையும் உள்ளடங்குகின்றன.
‘கிஸ்வா’ ஆடையைத் தயாரிக்க எட்டு மாதகாலங்கள் தேவைப்படுகின்றன. மக்கா நகரின் அஜ்யாட் பிரதேசத்தில் கிஸ்வா தொழிற்சாலையில் கிஸ்வா தயாரிக்கப்பட்டு வருகின்றது. தரம் வாய்ந்த பட்டுத்துணிகளால் தயாரிக்கிப்படும். கிஸ்வா ஆடைத் தொழிற்சாலையில் 200 வடிவமைப்பாளர்கள் பனியாற்றி வருகின்றனர்.
ஆடையைத் தயாரித்தல், மை பூசுதல், நூல் வேலை செய்தல், வடிவமைத்தல், பூ வேலைகள் மேற்கொள்ளல் போன்ற வேலைப்பாடுகளைக் கொண்டமைக்கப்படும் கஸ்வா துணி, அமைக்கப்பட்டிருக்கும் தரமான ஆய்வுகூடத்தில் வடிவமைத்து தரப்படுத்தப்படுகிறது. இவ்வாறான பணிகளுக்கு புதிதாக 21 பேர் உள்வாங்கப்பட்டிருக்கின்றனர்.
கிஸ்வா நூல் வேலைகளில் ஈடுபடும் தொழிலாளர்கள்
நூல் வேலைகள் தங்கத்தாலும், வெள்ளியாலும் வடிவமைக்கப்படுகின்றன. தங்கத்தால் வடிவமைக்கப்பட்டுள்ள நூல் வேலைகள் 120 Kg நிறையையுடையதாகவும், வெள்ளியைக் கொண்டு வடிவமைக்கும் எழுத்துக்கள் 100 Kg நிறையைக் கொண்டதாகவும் இருக்கும். இவற்றிற்கான தங்க, வெள்ளி நூல்கள் இத்தாலி நாட்டிலிருந்து கொள்வனவு செய்யப்படுகிறது.
கிஸ்வா ஆடையின் தரத்தை மேலும் மிகச் சிறந்த நவீன முறையில் அமைப்பதற்கு மன்னர் அப்துல்லாஹ் மேலும் விருப்பம் தெரிவித்தமைக்கு இணங்க, உலக நாடுகளுக்கு கிஸ்வா அதிகாரிகள் சிலர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கஃபாவின் தோற்றம் கி.பி. 1920
இவர்கள் ஜப்பான், அமெரிக்கா, கனடா, சீனா, இத்தாலி மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்து, நவீன ஆடை தயாரிப்புக்களில் பிரபல்யமடைந்த தொழிநுட்பக் கருவிகளை ஆராய்ந்து கொள்வனவு செய்யும் நோக்கில் அனுப்பப்ட்டிருக்கின்றனர்.
பிரதி வருடமும் ஹஜ் காலத்தில் புதிய கிஸ்வா கஃபதுலலாஹ்வுக்கு அணிவிக்கப்படும். புனித தினமான துல்ஹஜ் 9ம் நாள், அரபா தினத்தில் ஹாஜிகள் அரபாவில் தரிக்கின்ற நேரத்தில் புதிய கிஸ்வா அணிவிக்கப்படும்.
கிஸ்வா ஆய்வும், தயாரிப்பும் (கானொளி)
முன்னாள் சவுதி மன்னர் அப்துல் அஸீஸ் அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க, 1927ம் ஆண்டிலிருந்து கிஸ்வா ஆடை சவுதி ஆரேபியாவில் மக்கா நகரில் உள்ள கிஸ்வா தொழிற்சாலையில் அமைக்கப்பட்டு வருகின்றன.
இதற்கு முன்னர் சூடான், இந்தியா, எகிப்து மற்றும் ஈராக் ஆகிய நாடுகளிலிருந்தே கிஸ்வா தருவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.