வங்கதேசத்தில் எழுந்த இஸ்லாமியப் புரட்சியால் பழமைவாய்ந்த விபச்சார விடுதிகள் மூடப்பட்டன!

dscf5865[1]– AF

டாக்கா: பங்களாதேஷில் இஸ்லாமிய அமைப்புக்களால் எழுந்த எதிர்ப்பு காரணமாக 200 ஆண்டு பழமையான விபச்சார விடுதி மூடப்பட்டுள்ளது. அண்மைக் காலமாக பங்களாதேஷில் இஸ்லாத்தை பின்பற்றுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதhலும், இஸ்லாமிய அமைப்புக்கள் இஸ்லாத்தை நடைமுறைப்படுத்துவதில் காட்டப்படும் ஆர்வம் காரணமாகவும் பங்களாதேஷில் இஸ்லாத்துக்கு எதிரான செயற்பாடுகள் குறைக்கப்பட்டு வருகின்றன.

இதனால் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் அங்கு 12க்கும் மேற்பட்ட விபச்சார விடுதிகள் மூடப்பட்டுள்ளன. இதில் தலைநகர் டாக்காவிற்கு வெளியே செயல்பட்டுவந்த பெரிய விடுதியான தன்பசாரும் அடங்கும்.

இந்நிலையில், நேற்று மீண்டும் தங்கைல் நகரில் இருந்த 200 ஆண்டு கால பழமை வாழ்ந்த கண்டபரா விபச்சார இல்லங்களும் காலி செய்யப்பட்டதால், அங்கு வாழ்ந்து வந்த 750க்கும் மேற்பட்ட விலைமாதுக்கள் வெளியேற்றப்பட்டனர்.

prostitude

கடந்த வாரம் இஸ்லாமிய மார்க்க அறிஞர்களும், தன்னார்வலர்களும் இவர்களைக் காலி செய்யக் கோரி அங்கு நடத்திய ஒரு ஊர்வலத்தைத் தொடர்ந்து உரிமையாளர்கள் இந்த முடிவை எடுத்திருக்கின்றனர்.

இங்கிருந்து வெளியேற்றப்பட்ட விலைமாதுக்களிடம் நகர மேயர் வன்முறை நடத்தினார் என்றும் இச்சம்பவத்தின் போது இவர்களது உடமைகள் பொதுமக்களினால் சூரையாடப்பட்டுள்ளது எனவும் விலைமாதுக்கள் குழுவின் தலைவி தெரிவித்துள்ளார்.

prostitude

உலகளவில் புகழ்பெற்ற கண்டப்பரா விபச்சார நகரில் உள்ளுர் மற்றும் வெளிநாட்டினவர்கள் வாடிக்கையாளர்களாக வந்து செல்வர்.

அநாதரவாக இங்கு வந்து சேரும் பெண்கள் மற்றும் பிரரால் கொண்டுவரப்படும் இளசுகள் இங்கு சிறு, சிறு கொட்டில்களாக அமைக்கப்பட்டிருக்கும் படுக்கையறைகளில் வசித்து விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். இக்கொட்டில்கள்தான் இவர்களுக்கு வீடாகவும், வரபேற்பறையாகவும், படுக்கையறையாகவும் இருந்து வந்தன.

16 வயதிலிருந்து, திருமணமான மற்றும் குழந்தைகள் பெற்றுக்கொண்டோரும் இங்கு விபச்சாரத்தில் ஈடுபட்டுவந்தனர். குடும்ப வறுமை, சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம், திருமணம் செய்து அல்லது காதலித்து கனவரால், காதலனால் ஏமாற்றப்பட்டவர்கள் என பல பெண்கள் இங்கு விலைமாதுகளாக விற்கப்பட்டு வந்தனர்.

prostitute

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s