பல்கலைக்கழக மாணவியின் ‘உயிர்’ பதறப் பதற பறிக்கப்பட்ட சோகம்!

studentஎம்பிலிப்பிட்டிய: எம்பிலிப்பிட்டிய பஸ் தரிப்பிடத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள கட்டடம் ஒன்றிலிருந்து 22 வயதான பல்கழைக்கழக மாணவி ஒருவரின் சடலம் இன்று (24) மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆயிரம் கனவுகள் இலட்சியங்கடன் வாழ்ந்து கொண்டிருந்த அந்த யுவதியின் உயிர் அவரது காதலன் என சந்தேகிக்கப்படும் இராணுவ சிப்பாய் ஒருவிரனாலேயே காவு கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் மிகுந்த வேதனை தரும் ஒன்றாகவே உள்ளது. தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் கல்வித் துறையிலும் ஆயிரம் கனவுகளுடன் அந்த யுவதி வாழ்ந்திருக்கக் கூடும். ஆனால்இ அவரின் உயிர் இன்று சில நிமிடங்களில் பதறப் பதற அவரது காதலனால் பறிக்கப்பட்டுள்ள செய்தியானது முள்ளில் போட்ட சேலையை இழுத்து எடுப்பது போன்றதொரு வேதனைமிக்க உணர்வையே ஏற்படுத்துகிறது.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் ஆற்றுகை மற்றும் முன்கலை பிரிவில் இரண்டாம் ஆண்டில் கல்வி கற்று வரும் இந்த மாணிவியின் குடும்பம் சாதாரணமானது. தனது பிள்ளையைப் படிப்பித்து அவர் முன்னேறி தங்களுக்குப் பெயர் சொல்லும் ஒரு பிள்ளையாக அவர் வரவேண்டுமென்ற பெற்றோரின் கனவுக் கொட்டை இன்று கூரிய ஆயுதம் ஒன்றினால் சரிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு கஷ்டங்களைத் தாங்கியபடியே அந்த யுவதியின் பெற்றோரும் அவரைப் படிப்பித்திருப்பார்கள். அந்த யுவதியும் அவ்வாறானதொரு நிலைமையிலேயே தனது பல்கலைக்கழக கல்வியைத் தொடர்ந்திருப்பார். அவரது 22 வயதில் 17 வருட கல்விக்கும் இன்று சமாதி கட்டப்பட்டு விட்டது.

காதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்களே இந்த யுவதியின் கொலைக்கு காரணமென சந்தேகிக்கப்படுகிறது. இளம் வயதிலேயே அனைத்தையும் தொலைத்து முடிந்து போயுள்ள இந்த யுவதியின் வாழ்க்கை பலருக்கும் படிப்பினையாகவும் ஓர் எச்சரிக்கையாகவும் அமையட்டும்.

id

student

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s