அதிகரித்து வரும் கடும்போக்கு சிங்கள தீவிர வாதம்!

pothu pala senaaஇர்ஷாத் றஹ்மத்துல்லா 

கொழும்பு: இலங்கையில் இனப் பிரச்சினையினை தீர்த்து சகல இன மக்களும் அமைதியாக வாழ வேண்டும் என்பதில் அரசாங்கமும், சர்வதேச சமூகமும் எடுத்துவரும் முயற்சிகளுக்கு தற்போது இலங்கையில் உருவாகியுள்ள கடும்போக்கு சிங்கள தீவிர வாத அமைப்பான பொதுபலசேனவின் முனைப்புக்கள் கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

ஹலால் தொடக்கம் முஸ்லிம் பெண்களின் ஹபாயா வரை தமது பிழையான கருத்துக்களை கூறிவந்த ஞான சார தேரர் வரம்பு மீறி மதகுரு என்ற நிலையிலிருந்து விலகி காடத்தனமான கடும் போக்கு செயற்பாடுகளில் இறங்கியிருப்பது பலரலாலும் கண்டனத்துக்குரியது.

அண்மையில் கொழும்பில் இடம் பெற்ற செய்தியாளர் மாநாட்டுக்குள் பலவந்தமாக நுழைந்த ஞானசாரர் அங்கிருந்த சிங்கள மற்றும் முஸ்லிம் மதத் தலைவர்கைளை அவமானப்படுத்தியதுடன், முஸ்லிம்களை இழிவுபடுத்தும் முறையில் கருத்துக்களை கூறியது தொடர்பில் சர்வதேச புலம் பெயர் முஸ்லிம்கள் தமது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். இலங்கை வரலாற்றில் முஸ்லிம் ஒரு பொதும் நாட்டை பிளவுபடுத்தும் எண்ணத்தை கொண்டிருந்ததில்லை. அதே போல் நாட்டை காட்டி கொடுத்துவிட்டு அதே நாட்டில் வாழுவதும் அந்த முஸ்லிம்களின் பண்பாடுமில்லை. அரசியல் லாபங்களுக்காக சிலர் செய்யும் குசும்புத்தனத்தினை வைத்துக் கொண்டு முழு முஸ்லிம் சமூகத்தின் மீது கடுமைாயன சினத்தை வெளியிடுவதும் அங்கீகாரத்துக்குட்படுத்த முடியாது. 

pothu pala senaa

ஈட்டை கடித்த மாட்டைக்கடிக்கும் நிலைக்கு பொதபலசேனாவின் ஞானசாரதேரர் மாறியுள்ளார். அண்மையில் சிலாவத்துறைக்கு சென்று திரும்பியதன் பின்னர் மிருகங்கள் இருக்க வேண்டிய இடத்தில் மனிதர்கள் இருக்கலாகாது என்று கூறி்ய கருத்து புலிகளினால் அனைத்தையும் இழந்த வடக்கு முஸ்லிம்களை இன்னும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 20 வருடங்கள் இந்த முஸ்லிம்கள் இழந்தவையினை ஈடுசெய்ய முடியாத நிலையில் எவ்வளவோ முயற்சிகளுக்கு மத்தியில் வடக்கில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தினை மகிவும் சவால்களுக்கு மத்தியில் அமைச்சர் றிசாத் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக், உள்ளிட்ட பெயர் குறிப்பிடப்படும் ஒரு சில முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தமது தனிப்பட்ட செல்வாக்கின் மூலம் சில வீடுகளை இந்த மக்களுக்கு பெற்றுக் கொடுக்க முனைகின்ற போது, கௌதம புத்தர் போதித்த மனித நேயத்தை விட மிருக உணர்வுகளுக்கு முன்னுரிமையளிக்கும் பொதுபலசேனாக்கள் மேற்கொண்டுவரும் விசமத்தனமான பிரசாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க நாம் தவறுவோமெனில் எமது இலங்கை நாட்டில் முஸ்லிம்கள் தமது அடையாளங்களை தமது கைகளினாலேயே அழிக்கக் கூடிய துர்ப்பாக்கிய நிலையேற்பட்டுவிடுமோ என்ற அச்ச உணர்வு நாளுக்கு நாள் மேலோங்கியிவருகின்றது.

இலங்கை அரசாங்கம் நடைமுறைக்கு கொண்டுவந்துள்ள கட்டறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பறிந்துரையினை இன்று மையப்படுத்தி சர்வதேச முஸ்லிம் நாடுகள் கடந்த ஜெனிவா அமர்வின் போது இலங்கை அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கியதை இந்த பொதுபலசேனாவும், அதற்கு பின்னின்று இயக்கும் இனவாதத்தின் கரங்களும் புறிந்து கொள்ளாத நிலையில் உள்ளதா ? அல்லது தெரிந்தும் முஸ்லிம்களை மடையர்களாக நினைத்து செயற்படுகின்றனரா ?என்ற கேள்வி எழுந்துமுள்ளது.

இனி முசலி பிரதேச செயலகப்பிரிவில் மீள்குடியேறியுள்ள மக்கள் தொடர்பில் முசலி பிரதேச செயலாளர் கேதீஸ்வரன் அவர்கள் தெளிவான விளக்கத்தை கலகொட ஞானசாரருக்கு அவணங்கள் சகிதம் விளக்கப்படுத்தியுள்ள போதும் முரண்டுபிடிக்கும் முட்டாள் போன்று சொன்னதையே திருப்பி சொல்லும் பணியினை அவர் செய்ய ஆரம்பித்துள்ளார்.

யுத்தத்தின் பின்னர் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணி இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு சென்று இடம் பெயர்ந்த தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் அரசாங்கத்தின் கிராம அதிகாரி முதல் அரச அதிபர் வரையிலும் உள்ள அதிகாரிகளுடன் கலந்துரையாடி இறுதியாக தனது பரிந்துரையினை செய்தது. அதன் அடிப்படையில் அந்தந்த மாவட்ட அரசாங்க அதிபர்கள் ஊடக இந்த மீள்குடியேற்றத்துக்கான காணிகளை பெற்றுக் கொள்வதற்கு உரிய அரச பொறிதுமுறைகளை அமுல்படுத்திவருகின்றன.இந்த காணி பெறுகை குழுவில் அரசாங்க அதிபர்கள்(உரிய மாவட்டம் மற்றும் வெளிமாவட்ட). பிரதேச செயலாளர்கள், வனபரிபாலன அதிகாரிகள், சுற்றாடல் அமைச்சின் அதிகாரிகள், கடற்படை, பொலீஸ் அதிகாரிகள் என பல்தரப்பினரும் அங்கத்துவம் பெறுகின்றனர்.

இவர்களும் இந்த பிரதேசங்களுக்கு நேரடியாக சென்று காணிகளை அடையாளப்படுத்தி அரசாங்கத்தின் காணிவிடுவிப்பு சுற்று நிரூபத்திற்கமைய அதனை விடுவித்து, காணிக் கச்சேரி வைத்து (அனுமதியிணை காணி அமைச்சிடம்) அதன் பின்னர் பிரதேச மக்களின் அங்கீகாரத்துடன் பகிர்ந்தளிக்கும் நடை முறையினை முன்னெடுத்துவருகின்ற போது இந்த நிர்வாக கட்டமைப்பு தெரியாக ஞானசார தேரர் அரசஙாகத்திற்கு சேறு பூசும் பிரசாரத்தை முன்னெடுத்துவருவது தொடர்பில் அரசாங்கம் இனியும் மௌனம் சாதிக்க முடியாது என்பது ஏகோபித்த எல்லோரது கருத்தாகும்.

அநியாயத்தை கண்டு அவற்றை தடுப்பதற்கு முயற்சிகமால் தொடர்ந்து அதற்கு இடம் கொடுக்கின்ற போது இன்னும் அது இனவாதிகளுக்கு சின்ம சொற்பனமாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை்.அவளப்பட்ட ஒரு சமூகத்தின் விடிவுக்கு யாரெல்லாம் துாய உணர்வுடன் அவர்களின் விடிவுக்காக உதவி செய்ய முன்வருகின்றார்களோ அவர்களுக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி கிட்டும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை .சதிகாரர்கள் அறியாத மறுபுரத்தை இறைவன் நன்கறிவான்.முஸ்லிம்களாகிய நாம் இறைவனிடம் அழமான பிரார்த்தனைகளை செய்வதுடன் சதிகளை முறியடிக்கும் வழிகள் குறித்தும் நடவடிக்கையெடுக்க வேண்டும்……….

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s