காத்தான்குடி வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய மாமனிதர் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் ஸ்தாபகர் மர்ஹூம் அஷ்ஷஹீட் அஹ்மட் லெப்பை ஹாஜியாரின் வாழ்வும் பணியும் நூல் வெளியீட்டு விழா

unnamed (8)பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் ஸ்தாபகரும், முன்னாள் காத்தான்குடி பிரதேச சபையின் தவிசாளரும்,மூத்த அரசியல் வாதியும் ,சமூக சேவையாளரும் ,காத்தான்குடி வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய மாமனிதர் மர்ஹூம் அஷ்ஷஹீட் அஹ்மட் லெப்பை ஹாஜியார் மறைந்து 25 ஆண்டுகள் கடந்த நிலையில் அவரின் தியாக வாழ்வையும் ,ஈடிணையற்ற பணிகளையும் நினைவு கூறும் முகமாக காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் வெளியிடும் அஷ்ஷஹீட் அஹ்மட் லெப்பை ஹாஜியாரின் வாழ்வும் பணியும் நூல் வெளியீட்டு விழா காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் எம்.ரீ.எம். ஹாலித் ஜேபி தலைமையில் 28-03-2014 நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றது. 

இதன் போது அஷ்ஷஹீட் அஹ்மட் லெப்பை ஹாஜியாரின் வாழ்வும் பணியும் நூலின் முதற்பிரதி ஜாமியதுல் பலாஹ் அறபுக்கல்லூரியின் அதிபர் சங்கைக்குரிய ஷைகுல் பலாஹ் அஷ்ஷேய்க் அப்துல்லாஹ் றஹ்மானி , பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் பிரதித் தலைவர் சட்டத்தரணி ஏ.எல்.அப்துல் ஜவாத் ஆகியோரினால் நிகழ்வின் பிரதம அதிதி மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும் , பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வுக்கு வழங்கி வெளியீட்டு வைக்கப்பட்டது.

இங்கு நூல் நயவுரையை தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் மொழித்துறைத் தலைவர் கலாநிதி றமீஸ் அப்துல்லாஹ் நிகழ்த்தினார்.

இதில் மர்ஹூம் அஷ்ஷஹீட் அஹ்மட் லெப்பை ஹாஜியார் தொடர்பான நினைவுச் சொற்பொழிவை ஜாமியதுல் பலாஹ் அறபுக்கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளரும் ,இந் நூல் ஆசிரியருமான கவிமணி மௌலவி எம்.எச்.எம்.புகாரி பலாஹி நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக், காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர், காத்தான்குடி பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் ஏ.சி.அஹமட் அப்கர், காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபையின் ஆயட் காலத் தலைவர் தலைவர் மௌலவி ஐ.எல்.எம்.முஸ்தபா பஹ்ஜி, காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் தலைவரும், தென்கிழக்கு பல்கலைக்கழக அரபு இஸ்லாமிய கற்கை பீடத்தின் பீடாதிபதியுமான அஷ்ஷெய்க் எம் அலியார் றியாதி ,முன்னாள் காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் மர்சூக் அஹமட் லெப்பை, உற்பத்தி ஊக்குவிப்பு அமைச்சின் மக்கள் தொடர்பாடல் அதிகாரி யூ.எல்.எம்.என். மூபீன், மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் வர்த்தகர்களின் நலன்புரி அமைப்பின் தலைவர் கே.எம்.எம்.கலீல் ஹாஜியார் ஜேபி, அல் மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரியின் பொதுச் செயலாளர் அஷ்ஷேய்க் மும்தாஸ் மதனி, சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் தலைவர் இல்மி அஹமட் லெவ்வை, சம்மேளன உப தலைவர் சுபைர், செயலாளர் மௌலவி றமீஸ் ஜமாலி, பொருளாளர் அப்துல்லாஹ் உட்பட அதன் உறுப்பினர்கள், உலமாக்கள் முக்கியஸ்ரகள், கல்வியலாளர்கள், புத்திஜீவிகள் , ஊடகவியலாளர்கள் , ஊர் பிரமுகர்கள் , கலை இலக்கிய வாதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

குறிப்பு: மர்ஹூம் அஷ்ஷஹீட் அஹ்மட் லெப்பை ஹாஜியார் 1988ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6 ஆறாம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு கடத்தப்பட்ட ஒரு சகோதரனை மீட்பதற்காக காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அறபுக் கல்லூரியில் பெரியார்களுடன் ஆலோசனை நடாத்தி இஷாத் தொழுகையையும் முடித்துக்கொண்டு வுழூவுடன் வீடு திரும்பும் வழியில் வன்முறையாளர்களின் துப்பாக்கி ரவையினால் சுடப்பட்டு ஷஹீதானார். (இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்) தனது இறுதி மூச்சுவரை அவர் பொது மக்களுக்காகவே வாழ்ந்தார். அன்றைய தினம் இஷா தொழுகையை நிறைவேற்றி அவர் இறையச்சத்துடன் அஷ்ஷஹீட் என்ற நாமத்துடன் வீர மரணமானார் என்பது குறிப்பிடத்தக்கது. 

This slideshow requires JavaScript.

2 thoughts on “காத்தான்குடி வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய மாமனிதர் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் ஸ்தாபகர் மர்ஹூம் அஷ்ஷஹீட் அஹ்மட் லெப்பை ஹாஜியாரின் வாழ்வும் பணியும் நூல் வெளியீட்டு விழா”

 1. காத்தான்குடியில் பிறந்து வளர்ந்து முழு இலங்கை முஸ்லிம்களுக்கும், மாற்றுச் சமய சமூகத்தினருக்கும் முன்மாதிரியான ஒரு சமூகத் தலைவராக வாழ்ந்து மறைந்த மதிப்புக்குரிய அஷ்ஷஹீட் அல்ஹாஜ் அஹமட் லெவ்வை அவர்களின் வாழ்க்கை பற்றி சமகால மற்றும் எதிர்கால சந்ததிகளின் வாசிப்புக்காக வெளியிடப்பட்டிருக்கும் இவ்வரலாற்று நூல் வரவேற்புக்குரிய விடயமே என்பதில் மாற்றுக் கருத்துக்கள் எவருக்கும் இருக்காது.

  எனினும் இத்தகைய ஒரு உத்தம நிகழ்வில் ‘அத்தர் போத்தலில் துளி மலம் கலந்தது போல்’ மண்ணின் மைந்தன் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவை முதன்மைப்படுத்தி விழாவை நடாத்தியுள்ளதுதான் பெரும் வேதனையையும் கவலையையும் அளிக்கிறது.

  ஏனெனில், நாம் பெருமையோடு நினைவு கூறும் பெருந்தகை அஷ்ஷஹீட் அல்ஹாஜ் அஹமட் லெவ்வை அவர்கள் அரசியலையும், சமூகப் பணியினையும் கனவான்தனமாகவும், முழுக்க முழுக்க அல்லாஹ்வுக்குப் பயந்த மார்க்கக் கடமையாகவும் தனது வாழ்நாளில் நிறைவேற்றியிருந்தார். ஆனால் அவரது பெருவாழ்வு கூறும் உயர்நூலின் முதல் பிரதியை அரசியலில் மாறாக் கறைபடிந்த வரலாறுடைய இரு கரங்கள் ஏந்தியதுதான் கவலைக்குரியது.

  இந்தக் கரங்களை விடவும் தூய்மையான கரங்கள் விழா ஏற்பாட்டாளர்களான சம்மேளனத்தாருக்கு கிடைக்காமல் போனது வேதனைக்குரியது. முஸ்லிம் சமூக அரசியல் என்ற பெயரில் அத்தனை அயோக்கியத்தனத்தையும், தில்லுமுல்லுகளையும் அன்று தொட்டு இன்று வரை அப்பட்டமாகச் செய்து கொண்டிருக்கும் அரையமைச்சர் ஹிஸ்புல்லாதானா முதற்பிரதியைப் பெற இவர்களுக்குக் கிடைத்தார்?

  அஷ்ஷஹீட் அல்ஹாஜ் அஹமட் லெவ்வை அவர்கள் முஸ்லிம் அரசியலின் தனித்துவ அடையாளத்தை தூக்கி நிறுத்துவதற்காக காத்தான்குடி மண்ணில் அத்திவாரமிட்டவர். ஆனால், இங்கு நின்று கொண்டிருக்கும் முதற்பிரதி பெற்றவரோ அந்தத் தனித்துவ அரசியல் இன்று சின்னா பின்னமாகிப் போயுள்ள வரலாற்றைத் தொடக்கி வைத்தவர் என்ற சிறுமைக்குரியவர் என்ற பேருண்மையை நாடே நன்கறியும்.

  அஷ்ஷஹீட் அல்ஹாஜ் அஹமட் லெவ்வை அவர்கள் மார்க்கத்திற்கு விரோதமான கருத்துக்களை வெளிப்படுத்திவர்களுக்கு எதிராகக் குரல் கொடுத்து அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாக்களையும் ஒன்று திரட்டி ‘பத்வா’ வழங்கச் செய்து தௌஹீத் எனும் தூய ஈமானியக் கொள்கையைப் பாதுகாப்பதற்காக துணிச்சலுடன் குரல் கொடுத்தவர். செயற்பட்டவர். ஆனால், மத்தியில் நின்று கொண்டிருக்கும் முதற்பிரதி பெற்றவரோ இன்று காத்தான்குடிச் சமூகத்தில் இடம்பெறும் அத்தனை வகையான மார்க்க விரோத சிந்தனைகளையும், செயற்பாடுகளையும் தனது அற்பத்தனமான அரசியலுக்காக கபடத்தனமாக போசாக்களித்து வளர்த்து வருபவர் என்பதனையும் நாம் மறந்து விட முடியாது.

  அஷ்ஷஹீட் அல்ஹாஜ் அஹமட் லெவ்வை அவர்களோ மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள காத்தான்குடி, ஏறாவுர், ஓட்டமாவடி போன்ற முப்பெரும் பிரதேச முஸ்லிம்களின் ஒற்றுமைக்காக அர்ப்பணத்துடனும் தியாகத்துடனும் தொண்டாற்றியவர். ஆனால், இந்த முதற்பிரதி பெறும் அதிதியோ சுழற்சி முறை நாடாளுமன்றப் பிரதிதித்துவம் குறித்து மறைந்த மா தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் மற்றும் ஊர்மக்கள் முன் தான் வழங்கிய சத்திய வாக்குறுதியை மீறி தனது அரசியல் பதவியை பாதுகாத்துக் கொள்வதற்காக இம்மாவட்ட முஸ்லிம் பிரதேச மக்களின் ஒற்றுமையைச் சிதறடித்து இன்று வரை சீரழித்து அதன் மூலம் கடந்த 25 வருடங்களாக பிரதேசவாதம் பேசி அரசியல் ஆதாயம் பெற்று வருபவர்.

  அஷ்ஷஹீட் அல்ஹாஜ் அஹமட் லெவ்வை அவர்கள், காத்தான்குடி மக்கள் வங்கியை பயங்கரவாதிகள் கொள்ளையடித்துச் சென்றபோது எந்தவொரு பதவியும் அதிகாரமும் இல்லாத நிலையில் தனி மனிதனாக நின்று அர்ப்பணத்துடனும், தியாகத்துடனும் செயற்பட்டு மக்களின் இழப்புக்களை மீட்டுக் கொடுத்தவர். ஆனால், மேடையில் காணப்படும் இவ்விழாவின் பிரதம அதிதியோ இஸ்லாமிய வங்கி என்ற பெயரில் ஒன்றை காத்தான்குடியில் அறிமுகப்படுத்தி திறப்புவிழாச் செய்து அதில் ஏழை மக்களினதும், சமூகப் பொது நிறுவனங்களினதும் பெருந்தொகைப் பணத்தை பணத்தை முதலீடு செய்ய வைத்து அதே மக்கள் வழங்கிய பதவி அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களின் பணத்தை தனது மனைவிக்கு கடனாக வழங்கி இன்றுவரைக்கும் திருப்பிச் செலுத்தாமல் ஏப்பமிட்டுக் கொண்டிருப்பவர்.

  அஷ்ஷஹீட் அல்ஹாஜ் அஹமட் லெவ்வை அவர்கள் சம்மேளனம் என்ற தாய் நிறுவனம் சுதந்திரமாக இயங்க வேண்டும் என்பதற்காக பல்வேறு வளங்களையும் தேடிக் கொடுக்கப்பாடுபட்டவர். ஆனால், அவரது தூய வாழ்க்கைச் சரிதையின் முதற்பிரதியைப் பெற்றுக் கொண்ட பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவோ சுனாமிப் பேரனர்த்தத்தின் பின்னர் சம்மேளனத்தினால் அமானிதமாக வைப்பீடு செய்யப்பட்டிருந்த பெருந்தொகை நிதியை வீட்டுத்திட்டம், காணிக் கொள்வனவு என்ற நாமங்களில் அநியாயமாக இழக்கப்படுவதற்கு அத்திவாரமாக இருந்தவர் என்பதை விழா ஏற்பாட்டளர்களாலும் மறுக்க முடியாது.

  அஷ்ஷஹீட் அல்ஹாஜ் அஹமட் லெவ்வை என்ற மாமனிதரோ, தான் பொதுப்பணி அல்லது அரசியல் பணியைச் செய்கின்றபோது பொதுநிதியிலிருந்து ஒரு சதத்தைக்கூட தனது பொருளாதாரத்தில் சேர்ந்து விடக்கூடாதென்ற கண்டிப்பான கனவான்தனத்தோடு வாழ்ந்தவர். ஆனால், நீங்கள் இவ்விழாவின் காதாநகராக நடுநாயகமாகக் காட்டி தரும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவோ, சமூகப் பணி என்ற பெயரிலும் அரசியலைப் பயன்படுத்தியும் கோடி கோடியாக மோசடியான முறையில் செல்வம் சேர்த்திருப்பவர்.

  அஷ்ஷஹீட் அல்ஹாஜ் அஹமட் லெவ்வை அவர்களோ தனது சமூக அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி தானோ, தனது குடும்பமோ எவ்வித நன்மைகளையும் அடைந்து விடக்கூடாது என்ற உயர்ந்த இலட்சியத்தோடு கண்ணுங்கருத்துமாக இருந்து வாழ்ந்து முடித்தவர். ஆனால், இந்த விழாவின் நட்சத்திரமோ மக்கள் வழங்கிய அரசியல் அதிகாரத்தை மாத்திரம் பயன்படுத்தியே தானும் வளமாக வாழ்ந்து கொண்டு, தனது குடும்பத்தவர்களையும் ஆடம்பரமாகவும், உல்லாசமாகவும் வாழச் செய்திருப்பவர்.

  அஷ்ஷஹீட் அல்ஹாஜ் அஹமட் லெவ்வை அவர்களோ எச்சந்தர்ப்பத்திலும் உண்மையைப் பேசி நீதிக்காகவும், நியாயத்திற்காகவும் நேர்மையாகக் குரல் கொடுத்தவர். ஆனால், இவரோ அற்ப சொற்ப அரசியல் சுய இலாபங்களுக்காக பொய்யும், புரட்டும், அவதூறுகளையும் கூறி அநியாயத்திலேயே வாழ்ந்து கொண்டிருப்பவர்.

  அஷ்ஷஹீட் அல்ஹாஜ் அஹமட் லெவ்வை அவர்களோ பயங்கரவாத அச்சுறுத்தல்கள் நிறைந்த காலத்திலும் கூட முஸ்லிம்களின் உரிமைக்காகவும் பாதுகாப்புக்காகவும் உயிரையும் பணயம் வைத்து குரல் கொடுத்தவர். ஆனால், இந்த முதற்பிரதி பெறும் பிரமுகரோ பல்வேறு சந்தர்ப்பங்களிலும் சமூகத்தின் நலன்களைத் தாரை வார்த்து காட்டிக் கொடுப்புக்களைச் செய்தவர். தம்புள்ளை பள்ளிவாயல் பௌத்த மதத் தீவிரவாதிகளால் தாக்கப்பட்ட சமயம் முழு முஸ்லிம் சமூகமும் ஆழ்ந்த கவலையில் இருந்த வேளையில் ‘பள்ளிவாயலின் ஒரு தகரத்திற்குக்கூட எந்த ஒரு சேதமும் ஏற்படவில்லை. எல்லாமே ஊடகங்கள் பிரச்சாரம் செய்யும் பொய்’ என பகிரங்கமாகவே அறிக்கை வழங்கியவர்.

  அஷ்ஷஹீட் அல்ஹாஜ் அஹமட் லெவ்வை அவர்களோ பள்ளிவாயல் சொத்துக்களை பாதுகாப்பதில் மிகவும் உறுதியாகத் தொழில்பட்டவர். ஆனால், இந்த முதன்மைப் பிரமுகரோ தனக்காகவும், தனது சகாக்களுக்காகவும் பள்ளிவாயல்களின் காணிகளையே அரச காணிகள் என நீதிமன்றங்களிலும், பொது மேடைகளிலும் தெரிவித்து கபளீகரம் செய்து கொண்டிருப்பவர்.

  அஷ்ஷஹீட் அல்ஹாஜ் அஹமட் லெவ்வை அவர்களோ நாகரீக ஜனநாயக முறையில் மாற்றுக் கருத்துக்களை எதிர்கொண்டு அரசியல் புரிந்தவர். ஆனால், பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவோ மாற்றுக் கருத்துக்களையும், மாற்று அரசியலாளர்களையும் அடக்குவதற்காகவும், அரசியல் பதவிகளை வென்றெடுப்பதற்காகவும் தொடர்ச்சியான வன்முறைகளை மேற்கொண்டு வருபவர்.

  அஷ்ஷஹீட் அல்ஹாஜ் அஹமட் லெவ்வை அவர்களோ எமது இஸ்லாமிய மத கலாசார விடயங்களை எந்த சந்தர்ப்பத்திலும் எவருக்காகவும் விட்டுக் கொடுக்காமல் இஸ்லாத்தின் காவலராக இந்த மண்ணின் கண் வாழ்ந்து மறைந்தவர். ஆனால், அவரது வாழ்க்கைச் சரிதை நூல் வெளியீட்டு விழாவில் முதற்பிரதி பெறும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவோ அடுத்தவர்களை தற்காலிகமாகவேனும் சந்தோசப்படுத்த வேண்டும் என்பதற்காக சாமியார்களைகூட முதுகு வளைத்து கைகூப்பி வணங்கும் மார்க்க விரோத செயல்களில் ஈடுபட்ட வரலாறுடையவர்.

  இப்படியாக, ஒரு முன்மாதிரியான கனவானாகவும் சமூக இலட்சியத்திற்கான அர்ப்பணத்துடனும் மார்க்க வரையறை வழுவாதும் வாழ்ந்து மறைந்த ஒரு மாமனிதனின் வரலாற்று நூல் வெளியீட்டுக்கு இது போன்றதொரு பிற்போக்கான, போக்கிரித்தனம் நிறைந்த, நயவஞ்சகம் கொண்ட, வாக்குறுதியை மீறிய, மக்களின் வைப்புப் பணத்தை ஏப்பமிட்ட ஒருவரை முதன்மைப்பிரதி பெறுவதற்காக அழைப்பதென்பது அந்த உன்னத மனிதரை அவமதிக்கும் செயலாகும் என நான் நம்புகின்றேன்.

  -புவி எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

  1. காத்தான்குடி வாழ் இஸ்லாமிய சகோதரர்களே! வார உரைகல் பிரதம ஆசிரியரின் விமர்சனத்தை பார்க்கும்போது இவர் எந்த அளவு ஒரு குறுகிய மனம் கொண்டவர் என்று தென்படுகிறது.ஒரு மனிதர் ஒரு தவறு செய்தால் தொடர்ந்தும் அதே தவறிலேதான் இருக்கணும் என்று நினைப்பது அதைவிட தவறாகும். இன்று உத்தமன் போல எழுதக்கூடிய இந்த பூவி எப்படி பட்டவர் என்பது இந்த ஊரே அறியும். சிறு பிராயம் தொட்டு இன்று வரை பணத்துக்காக கட்சி விட்டு கட்சி மாறுதல் , அதே பணத்துக்காக மார்க்கத்தை விற்றல்,அதே பணத்துக்காக சட்டத்தரணியிடம் ஆலோசனை பெற்று கடையில் களவெடுத்தல் இன்னும் …………

   இன்று அஹ்மத் லெப்பை ஹாஜியாரை பிரதி அமைச்சரை குறை கூறுவதற்காக புகழும் இவர் ஒரு காலத்தில் அதே அஹமத் லெப்பை ஹாஜியாரை தூற்றி எதிர்த்து நின்றவர். தெளிவாக சொன்னால், இவர் மௌலவி அப்துர் றஊப் மிஸ்பாஹியுடன் சேர்ந்து இருந்த காலத்தில் அரசியல் ரீதியாக மாத்திரமின்றி மார்க்க ரீதியாகவும் மாற்று கருத்துடையவராகவே இருந்தார். அவர் படுகொலை செய்யப்பட்ட பொது இவர் எங்கே சென்றார்? அவர் உருவாக்கிய சம்மேளனம் என்று போற்றிப்புகழும் இவர் தனது பத்திரிகையில் எங்காவது சம்மேளனத்தின் ஒரு நடவடிக்கையாவது நன்றாக எழுதியுள்ளாரா? அல்லது குறைதான் கூறாமல் இருந்துள்ளாரா? இந்த ஊரில் எந்த குழுவுடனோ அல்லது அமைப்புடனோ தொடர்ந்து நல்லுறவு பேணிய வரலாறு உண்டா? எந்தப்பக்கம் தனக்கு ஆதாயம் அதிகமாக உள்ளதோ அந்தப்பக்கம் வாலாட்டக்கூடிய ஒரு பிரானிதான் இவர்.
   ஒரு முஸ்லிம் என்றால் ஏனைய முஸ்லிம்கள் அவனின் நாவு மற்றும் கரங்களில் நின்றும் அச்சம் தீர்ந்து இருக்க வேண்டும். இந்த ஊரிலுள்ள ஒரு சாதாரண பாமர மகன் கூட இவரைக்கண்டால் மௌனியாகி விடுகிறான். பத்திரிகையில் எழுதி விடுவான் என்று பயப்படுகிறான்.
   இவர் சேர்ந்திருக்காத குழுதான் என்ன? டாக்டர் அஹ்மத் பரீட் , மௌலவி அப்துர் றஊப், அப்துல்லாஹ் பயில்வான்,பிரதி அமைச்சர்,சிறிசேன குரே,இறுதியாக pmgg.
   இவர் செய்யாத தொழில்தான் என்ன? நெசவு தொடக்கம் லாட்டரி சீட்டு வரை. இறுதியாக ஊடகம்.
   இவர் போன்றவர்களை வைத்துதான் தாங்கள் அரசியல் செய்யனும் என நினைக்கும் நமதூர் நல்லாட்சியாளர்களுக்கு இன்னும் நாம் வாக்களிக்க வேண்டுமா? சிந்தியுங்கள் சகோதரர்களே!
   அல்லாஹ் படைத்த ஒரு இன்சானை மலத்துக்கு உவமைப்படுத்தும் இவன் போன்றவர்களை நம் சமூகம் இன்னும் அங்கீகரிக்க வேண்டுமா?

   இது போன்ற கருத்துக்களுக்கு இடம் கொடுக்காமல் இருப்பது இணைய முகாமையாளர்கள் செய்யும் நற்செயலாகவே கருதப்படும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s