பாடசாலையையும் பாடசாலை சமூகத்தையும் சீரழிக்கும் வகையில் அமைந்த அதிபரின் மோசமான செயற்பாடுகள்.

DSC00017AK-42-

காத்தான்குடி:காத்தான்குடி மட்அல்-அமீன் மகா வித்தியாலயத்தின் பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள்,பெற்றோர்கள்,நலன்விரும்பிகளால் கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்தின் மாகாண கல்விப் பணிப்பாளருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதம்.
ஐயா,
பாடசாலையையும் பாடசாலை சமூகத்தையும்
சீரழிக்கும் வகையில் அமைந்த அதிபரின் மோசமான செயற்பாடுகள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடியில் அமைந்துள்ள மட்-மம-அல்-அமீன் மகா வித்தியாலயம் கடந்த 50 வருடங்களாக மிகவும் சிறப்பாக இயங்கிவருகின்றது. புதிய காத்தான்குடியில் பெண் மாணவிகளின் கல்வித் தேவையை பூரணமாக நிறைவேற்றும் வகையில் அமைந்த இப்பாடசாலையானது பல கல்விமான்களையும் நற்பிரஜைகளையும் உருவாக்கியுள்ளது.

2011.09.27 ஆம் திகதி முதல் இன்றுவரை அதிபராக கடமையாற்றும் MM. கலாவுதீன் அவர்கள் எமது பாடசாலையையும் பாடசாலை சமூகத்தையும் சீரழிக்கும் வகையில் அமைந்த பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்துவருகிறார்.

இதனை பெற்றோற்கள், நலன்விரும்பிகள் மற்றும் பாடசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் ஆகிய நாங்கள் அவதானித்து அறிந்துகொண்டு பல தடவைகள் நாம் பல ஆலோசனைகளையும் அறிவுறுத்தல்களையும் அதிபருக்கு வழங்கியிருந்தோம். ஆனால் அவையொன்றுமே பலனளிக்காத போதுதான் தங்களின் மேலான கவனத்திற்கு இவ்விடயத்தை கொண்டுவருகின்றோம்.

கீழ் குறிப்பிடப்படும் விடயங்களை கவனத்திற்கொண்டு இவ்வதிபரை உடனடியாக இடமாற்றம் செய்யுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம். தவறும்பட்சத்தில் அதிபரை வெளிறே;றுவதற்கு வேறுவழிகளை கையாளவேண்டிய நிலையேற்படும் என்பதை கவலையோடு தெரிவித்துக் கொள்கின்றோம்.

அதிபர் MM.கலாவுதீனின் மோசமான செயற்பாடுகள்

01.    கடந்த 2012ம் ஆண்டில் இவ்அதிபரின் மகன் இரவுவேளைகளில் பாடசாலை கணனி ஆய்வுகூடத்திற்று வந்து அங்குள்ள கணனிகளை தனது தேவைகளுக்கு பயன்படுத்தியுள்ளார். மட்டுமன்றி அங்குள்ள கணனிகளின் முக்கியமான பாகங்களையும் திருடிச்சென்றுள்ளார். இது சம்பந்தமாக கணனி ஆய்வுகூடத்திற்கு பொறுப்பாக இருந்த APM. ஜலால்தீன் ஆசிரியர் அதிபரிடம் முறையிட்ட போது அதற்கு எதுவித நடவடிக்கையும் எடுக்காது உரிய ஆசிரியர் APM. ஜலால்தீன் அவர்களை உடனடியாக வேறுபாடசாலைக்கு இடமாற்றம் செய்தார்.

02.    சென்ற 2012, 2013ம் ஆண்டுகளில் புதிய மாணவர்களை பாடசாலைக்கு சேர்த்தலின்போது பெற்றோர்களால் அன்பளிப்பாக அதிபரிடம் வழங்கப்பட்ட ரூபா 91000.00 நிதியில் இருந்து பாடசாலை மாணவர்களுக்கென செய்யப்பட்ட 15 மேசைகள் 15 கதிரைகள் என்பவற்றிற்கு ரூபா 47200.00 பணம் செலவு செய்யப்பட்டுள்ளது. மீதிப் பணத்திற்கு என்ன நடந்தது என்பது பற்றி இதுவரைக்கும் எமக்கு தெரிவிக்கப்படவில்லை.

03.    பாடசாலையில் CANTEEN நடத்துவதற்கு TENDER CALL பண்ணாது தன் சுயநலத்திற்காக தரமற்ற ஒருவரை நியமித்துள்ளார். இலாபத்தை மட்டும் நோக்காக கொண்டு செயற்படும் இவர் தரமற்ற, பழுதான உணவுப் பொருட்களை தயாரித்து வழங்கிய வேளையில் நாம் பல தடவகைள் நேரடியாக கண்டுபிடித்து அதிபரிடம் முறையிட்ட போதும் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. CANTEEN உரிமையாளரான ALM. மக்பூல் அதிபரின் வீட்;டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்கு பயன்படுத்தப்படுவதோடு பாடசாலை நாட்களில் அதிபரின்  அவரது இரு பிள்ளைகளுக்கும் இலவசமாக காலை உணவு வழங்கிவருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

04.    பாடசாலைக்குச் சொந்தமான தொலைபேசியை தனது சொந்த தேவைக்காக பாடசாலை அல்லாத நேரங்களில் பயன்படுத்திவருகிறார். அத்துடன் பாடசாலை அல்லாத நேரங்களில் பாடசாலைக்குள் வந்து பாடசாலையிலுள்ள FAN- LIGHT- TV- INTERNET ஆகியவைகளை தொடராக ஒவ்வொரு நாளும் பல மணித்தியாலங்கள் பயன்படுத்துகிறார். இவரோடு வேறு பாடசாலை ஆசிரியர் ஒருவரும் வருவதையும் அவதானிக்கின்றோம். இதன் காரணமாக மின் கட்டணம் தொலைபேசிக் கட்டணம் அதிகமாக வருவதை நாங்கள் அறிகிறோம். இதற்கு மின் பட்டியல், தொலைபேசி பட்டியலை பார்வையிடுமாறு வேண்டுகிறோம்.

05.    இங்கு கற்கும் எமது பிள்ளைகளின் உளநிலை பாதிக்கும் வகையில் பலதடவைகள் செயற்பட்டுள்ளார். மாணவிகள் தவறுகள் செய்கின்ற போது மோசமான வார்த்தைகளை கொண்டு (வாடி, போடி என) ஏசுவதும் (காலை வெட்டுவேன் என) அச்சுறுத்துவதும் பாடசாலை நேரத்தில் பாடசாலையை விட்டு வெளியே துரத்திவிடுவதும், மாணவிகளை வகுப்பில் அவமானப்படுத்தி ஒதுக்கிவைப்பதும் பெற்றோர்களாகிய எங்களுக்கு பெருத்த மனவேதனையைத் தருகிறது.

06.    பாடசாலை மாணவி ஒருவர் டுநயஎiபெ ஊநசவகைiஉயவந கேட்டு காலையில் வந்தபோது பிற்பகல் 5.30 மணிக்கு வருமாறு கூறியிருக்கின்றார். பிற்பகல் 5.30 மணிக்கு வந்தபோது எக்காரணமும் இல்லாமல் இரவு 7.15 மணிவரை தாமதிக்க வைத்துள்ளார் வீடு வந்து சேராத இம்மாணவியை தேடி வந்த இம்மாணவியின் பெற்றோர் அதிபருக்கு தகாத வார்தைகளால் ஏசிவிட்டு பிள்ளையை அழைத்துச் சென்றுள்ளார்.

07.    எமது பிள்ளைகளின் நலன் சம்பந்தமாக நாம் பாடசாலைக்குச் சென்று அதிபரிடம் கதைக்கின்றபோது எங்களை அவமானப்படுத்துவதும், நான் உங்களின் கால், கையை வெட்டுவேன் என்று கூறுவதும், 119இற்கு ஊயடட பண்ணி உங்களை பொலிஸில் அடைப்பேன் என்று கூறுவதும் பலதடவைகள் நடைபெற்றுள்ளது.

08.    இப்பாடாசலையில் கற்பிக்கும் ஆண் ஆசிரியர் ஒருவர் மாணவிகளுடன் பாலியல் து’;பிரயோக வார்த்தைகளை அடிக்கடி பிரயோகித்துள்ளார். இது தொடர்பாக ஏனைய ஆசிரியர்களாலும் மாணவிகளாலும் முறைப்பாடு செய்யப்பட்ட போதும் எதுவித நடவடிக்கைகளும் எடுக்காதிருப்பது எங்களுக்கு பெருத்த சந்தேகத்தை ஏற்படுததியுள்ளது.

09.    இங்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் பலர் அதிபரின் செயற்பாடுகளால் வெகுவாகப் பாதிக்கபபட்டுள்ளார்கள். தனது மோசமான நடவடிக்கைகளுக்கு ஒத்துப் போகாத ஆசிரியர்கள் மேல் வீண்பழி சுமத்துவதும் அவர்களை இடமாற்றம் செய்வதும் பல தடவைகள் நடைபெற்றுள்ளன. அத்தகைய சில செயற்பாடுகளை மட்டும் இங்கு குறிப்பிடுகின்றோம்.

1)    அதிபரின் மகன் கணனி Pயுசுவுளு திருடியது தொடர்பாக ஆசிரியர் APM. ஜலால்தீன் விளக்கம் கேட்டபோது அவருக்கு எதிராக செயற்பட்டு உடனடியாக அவரை இடமாற்றம் செய்தார்.
2)    மாணவிகள் தொடர்பான தனிப்பட்ட விடயங்களில் அதிபர் நேரடியாக சம்பந்தப்பட்டபோது பெண் ஆசிரியைகளான நாங்கள் அவர்களின் விடயங்களைக் கவனிக்கிறோம் அதுதான் பொருத்தமாக இருக்கும் எனச் சொல்லியதற்காக, மிகத்திறமை வாய்ந்த திருமதி அனீசா பிர்தௌஸ் ஆசிரியை மீது சம்பந்தமில்லாத குற்றச் சாட்டுக்களை சுமத்தி மனம் புண்படச் செய்து ஆசிரியர் தொழில் இருந்தே நீங்கிச் செல்வதற்கு காரணமாக அமைந்து விட்டது. தற்போது இவ்ஆசிரியை தனியான முநவெ யுஉயனநஅல என்ற ஆங்கில கல்வி நிறுவனமொன்றை ஆரம்பித்து சுமார் 1500 மாணவர்களைக் கொண்டு சிறப்பாக நடாத்திவருகின்றார்.
3)    முன்னாள் அதிபர் சுபைர் சேர் காலமான வேளையில் பதில் அதிபராக கடமையேற்று மிகச் சிறப்பான முறையில் பாடசாலை நிறுவாகத்தை நடாத்திவந்த யுடுஆ.பாயிஸ் டீ.ளுஉ ஆசிரியர் அவர்கள் பாடசாலையை முன்னெடுப்பது தொடர்பாக பல ஆரோக்கியமான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் வழங்கிய போது, தன்னை மிஞ்சிவிடுவார் என்ற எண்ணத்தில் அவ் ஆலோசனைகளை ஏற்காது தனக்கு இடைஞ்சலாக இருக்கின்றார் என ழுககiஉந ல் முறைப்பாடு செய்து அவரையும் இடமாற்றம் செய்தார்.
4)    இதே போன்று தற்போது இங்கு கற்பிக்கும் பல ஆசிரியர்களின் திறமையான செயற்பாடுகளை ஜீரணிக்க முடியாத அதிபர், அவர்கள் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாக வீணான குற்றச்சாட்டுக்களை ஆசிரியர்கள் மீது சுமத்துவதும் மாணவர்கள் முன்பாக அவர்களை அவமானப்படுத்துவதும், ஆசிரியர்கள் இல்லாதபோது வகுப்பறைக்குச் சென்று மாணவிகளிடம் ஆசிரியர்கள் தொடர்பாக பிழையான கருத்துக்களை சொல்வதுமான செயற்பாடுகளால் இவ்வாசிரியர்கள் மனமுடைந்து இடமாற்றம் பெற்றுச்செல்வதற்கு ஆயத்தமாக இருக்கின்றனர்.
10.    இடமாற்றம் பெற்றுச் சென்ற APM. ஜலால்தீன் (நூலக ஆசிரியர்) அவர்கள் புரிந்துவந்த LIBRERY நிருவாகம் செயலிழந்துபோயுள்ளதோடு அவரின் மேற்பார்வையின் கீழ் மிக சிறப்பாக இயங்கி வந்த கணனி ஆய்வுகூடமும் தற்போது இழுத்து மூடப்பட்டுள்ளது. அதே போன்று விஞ்ஞான பட்டதாரியான ALM.பாயிஸ் Bse ஆசிரியரும் இடமாற்றம் பெற்றுச் சென்றதன் பின்னர் இதுவரை பொருத்தமான விஞ்ஞான ஆசிரியர் இல்லாததன் காரணமாக எமது பிள்ளைகளை வுரவைழைn வகுப்புகளுக்கு விஞ்ஞான பாடம் கற்க அனுப்பவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.
11.    பாடசாலை தொடர்பான விடயங்களில் நிறைந்த அர்ப்பணிப்போது செயற்படக்கூடிய பல ஆசிரியர்கள் இருந்தும் வேறு பாடசாலை ஆசிரியரான ஆஐஆ.சமீம் என்பவரை பாடசாலைக்குள் கூட்டிவந்து பாடசாலையின் முக்கிய ஆவணங்களை கையாள்வதும் மாணவிகள் தொடர்பான விடயங்களில் நேரடியாக தலையிட வைப்பதும் (2012ல் ழுஃடு யுனஅவைழைn  வழங்கியது) அதிபரின் தொடரான நடவடிக்கைகளாக காணப்படுகின்றன.
12.    1000 பாடசாலை திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ள எமது பாடசாலையும் குநநனநச ளுஉhழழட களில் இருந்து எமது பாடசாலைக்கு இவ்வருடம் (2014) இல் சேர வருகின்ற மாணவர்களில் வசதி குறைந்த மாணவர்களை சேர்க்காது தனக்குத் தெரிந்த பெற்றோர்களின் பிள்ளைகளை சேர்த்துவிட்டு ஏனைய மாணவர்களை புறக்கணித்து வருகின்றார். இது அடிப்படை கல்வி உரிமை மீறலாகும்.
13.    100வீதம் பெண் மாணவிகள் படிக்கின்ற எமது பாடசாலையில் ஆண் PH உத்தியோகத்தர்களை அடிக்கடி அழைத்து வகுப்புக்கள் நடாத்துவதும் தடுப்பூசி, சொட்டு மருந்து ஆகியன இவர்களாலேயே வழங்கப்படுவதும் பெற்றோர்களாகிய எங்களுக்கு கடுமையான விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
14.    பாடசாலை நிருவாக செயற்பாடுகளுக்கு மிகவும உறுதுணையாக இருக்கின்ற முகாமைத்துவக் குழு உறுப்பினர்களின் பங்குபற்றுதல் இல்லாமல் தனக்கு வேண்டிய ஒருசிலரோடு மட்டும் பேசி மிக முக்கியமான தீர்மானங்களை எடுப்பதும் முகாமைத்துவக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்படுகின்ற தீர்மானங்களை தனது விருப்பப்படி மாற்றியமைப்பதும் அத்துடன் ஆசிரியர் சங்க கூட்டங்களைகூட உரிய காலங்களிலோ நேர ஆவகாசத்துடனோ கூட்டப்படாமையால் ஆசிரியர்கள் தங்களது கருத்துக்களை சொல்வதற்கு முடியாமல் இருப்பதாகவும் தெரியவருகிறது. இதன் காரணமாக முழு மொத்த ஆசிரியர்களும் வெறுப்படைந்த நிலையில் காணப்படுவதால் எங்கள் பிள்ளைகளின் கல்வி இதனால் பாதிக்கப்படுமோ என்ற அச்சம் எங்களுக்கு உருவாகியுள்ளது.
15.    பாடசாலைக்கு மிகவும் உறுதுணையாகவும் அபிவிருத்தியில் மிகவும் பாடுபட்டுவருகின்ற SDC-SDS உறுப்பினர்களோடும் தற்போது அதிபர் மிகவும் முரண்பாட்ட நிலையில் காணப்படுகின்றார்.
1)    SDC-SDSஉறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் வியாபாரிகளாக இருப்பதன் காரணமாக அவர்களுக்கு பொருத்தமான நேரத்தில் கூட்டங்களை கூட்டாது அதிபருக்கு விருப்பமான நேரத்தில் கூட்டுவதும் உரிய அழைப்புக்கள் உரிய கால அவகாசத்துடன் வழங்கப்படாமல் இருப்பதும் தொடர்ந்தேர்ச்சியாக நடந்துவருகிறது.
2)    மாதாந்தம் SDS-SDC கூட்டங்கள் நடாத்தப்படுவதில்லை அத்துடன் எடுக்கப்படுகின்ற தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தாமல்விடுவதும் தீர்மானங்களை தனக்கேற்றவாறு பின்னர் மாற்றியமைப்பதும் செயலாளர் தனது கடமைகளை செயற்படுத்த முற்படுகின்றபோது அதனை தடுத்துநிறுத்துவதும் தொடர்ச்சியாக காணப்படுகின்றது.
3)    2012 முதல் 2015ம் ஆண்டுவரை செயற்படுவதற்கு உரித்துள்ள SDCஉறுப்பினர்களை தனக்கு பிடிக்காததனால் தான் நினைத்தபடி SDC ஐ கலைக்க முடியுமெனவும் அவர்கள் பாடசாலைக்குள் வருகை தந்தால் அவர்களின் காலை வெட்டுவேன் எனவும் அச்சுறுத்தியிருக்கின்றார். இது தொடர்பாக SDC உறுப்பினர்களால் பொலிஸில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது.
16.   SDC யினதோ அல்லது பாடசாலை முகாமைத்துவ குழுவினதோ எந்தவிதமான தீர்மானமும் இன்றி 2014ம் ஆண்டுக்கான CANTEEN CALL பன்னாது தனது நெருங்கிய உறவினர் ஒருவருக்கு வழங்கியிருப்பது அவரின் தன்னிச்சையான செயற்பாட்டை காட்டுகிறது.

பிரதிகள்
1.    கௌரவ அல்ஹாஜ் MLAM ஹிஸ்புழ்ழாஹ் MA MP  பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர்
2.    ஆளுனர், ஆளுனர் அலுவலகம், கிழக்கு மாகாணம், திருகோணமலை
3.    செயலாளர், கல்வி அமைச்சு, கிழக்கு மாகாணம், திருகோணமலை
4.    வலயக் கல்விப் பணிப்பாளர், மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம், ஏறாவூர்
5.    பிரதேச கல்விப் பணிப்பாளர், பிரதேச கல்விப் பணிமனை, காத்தான்குடி.
6.    கௌரவ அல்ஹாஜ் சிப்லி பாறூக் Eng , மாகாணசபை உறுப்பினர், கிழக்கு மாகாணசபை.
7.    தலைவர்-செயலாளர், கல்விக்குழு, காத்தான்குடி.
8.    தலைவர்-செயலாளர், பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், காத்தான்குடி.
9.    அதிபர், மட்-மம-அல்-அமீன் மகா வித்தியாலயம், காத்தான்குடி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s