மஃஹதுஸ்ஸுன்னா அந்நபவிய்யா மகளிர் அரபுக் கல்லூரியின் 2014 புதிய மாணவிகளை வரவேற்றலும் பரிசளிப்பு நிகழ்வும்

unnamed (1)பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: காத்தான்குடி மஃஹதுஸ்ஸுன்னா அந்நபவிய்யா மகளிர் அரபுக் கல்லூரியின் 2014 புதிய மாணவிகளை வரவேற்றலும் பரிசளிப்பு நிகழ்வும் இன்று 31-12-2013 செவ்வாய்க்கிழமை மாலை மஃஹதுஸ்ஸுன்னா அந்நபவிய்யா மகளிர் அரபுக் கல்லூரி வளாகத்தில் அக் கல்லூரியின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.சீ.எம்.றிஸ்வான் மதனி தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது கல்லூரி நாட்களில் விடுமுறை எடுக்காமல் கல்லூரிக்கு வருகைதந்த 12 பன்னிரண்டு மாணவிகளும், முன்மாதிரிமிக்க மாணவிகளாக தெரிவு செய்யப்பட்ட மூன்று 3 மாணவிகளும்,தேர்ச்சி அறிக்கையில் 90 தொன்;ணூற்றுக்கு மேல் புள்ளிகளை பெற்ற 15 பதினைந்து மாணவிகளும் அதிதிகளினால் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் 2014 புதிய மாணவிகளுக்கும் அன்பளிப்புகள் வழங்கி வைக்கப்பட்டன.

மஃஹதுஸ்ஸுன்னா அந்நபவிய்யா மகளிர் அரபுக் கல்லூரி உப அதிபர் அஷ்ஷெய்க் எம்.எம்.எம்.அன்ஸார் மக்கியின் நெறியாள்கையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அவுஸ்திரேலியாவில் வசிக்கும் பொறியியலாளர் அல்ஹாஜ் யூ.எல்.எம்.காசிம் கலந்து கொண்டதோடு கௌரவ அதிதிகளாக (டுபாய்) ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் எம்.எம்.அப்துர் ரஹீம், நஸீலா பவுன்டேஸன் நிறுவனத்தின் ஸ்தாபகத் தலைவர் அல்ஹாஜ் ஐ.எல்.எம்.அக்பர் உட்பட மஃஹதுஸ்ஸுன்னா அந்நபவிய்யா மகளிர் அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் செய்னுலாப்தீன் மதனி,மஃஹதுஸ்ஸுன்னா அந்நபவிய்யா மகளிர் அரபுக் கல்லூரி நிர்வாக சபை தலைவர்,செயலாளர் ,உறுப்பினர்கள்,ஆசிரிய ஆசிரியர்கள் ,ஊர் பிரமுகர்கள் புதிய மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

இங்கு மஃஹதுஸ்ஸுன்னா அந்நபவிய்யா மகளிர் அரபுக் கல்லூரி மாணவிகளின் ஆற்றல்களை பிரதிபலிக்கும் வகையில் திலாவதுல் குர் ஆனும் மொழிபெயர்ப்பும்,தமிழ்ப் பேச்சு,அறபுப் பேச்சு,கஸீதா போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

இக் கல்லூரியில் தற்போது 114 மாணவிகள் கல்வி பயிலுவதுடன் 2014 இவ் வருடம் 25 மாணவிகள் புதிதாக சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s