சத்திரசிகிச்சையின் போது 35 சிறுநீரக கற்கள் அகற்றப்பட்ட அதிசயம்: சம்மாந்துறையில் சம்பவம்!

n10[1]சம்மாந்துறை: சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் வைத்தியசாலையில் சிறுநீரக நோயாளி ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட சிறுநீரக சத்திரசிகிச்சையின் போது 35 சிறுநீரக கற்கள் அகற்றப்பட்டன. சிகிச்சையின் போது அகற்றப்பட்ட கற்களில் ஒன்று மான்கொம்பு வடிவில் அமைந்திருந்தது.

இவரின் குருதி இரத்தம் B வகையானது. இவ் வகை இனக் குருதியை வைத்தியசாலைகளில் பெறுவது கடினமாக இருந்ததால் ஒரு பைந் பகற் இரத்தத்தை மாத்திரம் நம்பி இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

கல்முனை அஷ்ரப் வைத்தியசாலை மயக்க மருந்தேற்றல் நிபுணரின் பூரண ஒத்துழைப்புடன் இந்த சிறுநீரக அறுவை சத்திர சிகிச்சையை மேற்கொண்டதாக சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் வைத்தியசாலை சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் ஏ. டபிள்யூ. எம். சமீம் தெரிவித்தார்.

நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி செய்யப்பட வேண்டிய இந்த சத்திர சிகிச்சைகளை எந்தவொரு வசதியும் இல்லாமல் சம்மாந்துறை வைத்திய சாலையில் செய்யப்பட்டுள்ளது.

சமீபகாலமாக சம்மாந்துறை பிரதேசத்தில் சிறுநீரக கல் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுவதாகவும் இது தொடர்பான ஆய்வு நடத்தப்பட வேண்டும் எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

n10-1[1]

இந்த சிறுநீரக கல் தொடர்பாக சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் வைத்தியசாலை சத்திரசிகிச்சை நிபுணர் டாக்டர் ஏ. டபிள்யூ. யு. எம். சமீம் இவ்வாறு தெரிவித்தார்.

இன்று சிறுநீரகத்தில் கற்கள் உருவாதல் அதிகரித்துள்ளது. இதனால் இளம்பராயத்தினர் இடுப்பு வலி, அடிவயிற்று வலி, சிறுநீர் கழிப்பதில் எரிவு மற்றும் அவ்வாறு கழிக்கும் போது இரத்தம் வருதல் போன்ற பல பிரச்சினைகளுக்கு ஆளாகின்றனர். இதற்கெல்லாம் மூலகாரணம் சரியாக நீர் அருந்தாமையே ஆகும். சராசரியாக ஒரு நாளைக்கு 3-4 லீற்றர் நீரை அருந்த வேண்டும். அது மிகவும் தூய்மையானதாக இருக்க வேண்டும்.

(நீர் அருந்துவதன் அவசியம் பற்றிய  முக்கியமான ஆக்கத்தை வாசகர்கள் https://yourkattankudy.com/2013/11/06/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95/   இதன் ஊடாக பார்வையிடலாம்)

யாழ்ப்பாணம், வவுனியா, அநுராதபுரம் போன்ற இடங்களில் நீரில் அதிகளவாக கல்சியம் படிந்து காணப்படுகிறது. அந் நீரை அப்படியே பருகாது அதனை சூடாக்கி அந் நீரில் காணப்படும் கல்சியத்தின் செறிவைக் குறைத்தே அருந்த வேண்டும்.

n10[1]

உங்களுக்கு தொடர்ச்சியாக குளிர் காய்ச்சல், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் மற்றும் இரத்தம் வெளியேறுதல் போன்ற அறிகுறிகள் காணப்பட்டால், உடனே வைத்தியரை நாடுங்கள். காரணம் அது பெரும்பாலும் சிறுநீரகத்தில் கல் உருவாகி இருப்பதற்கான அறிகுறிகளாக இருக்கலாம். இவ்வாறு இக் கல் உருவாகி சிறுநீர் அடைப்படுமானால், அதனை வைத்தியர்கள் Ultar Sound Scan  செய்து கற்கள் எந்த இடத்தில் அடைத்திருக்கின்றது என்பதனைக் கண்டறிந்து. அதற்கேற்ப சிகிச்சை அல்லது சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டு அச் சிறுநீரக கல்லினை சிறுநீரகத்திலிருந்து அகற்றுவார்கள்.

இதற்காக நீங்கள் பயப்படத்தேவையில்லை. ஆனால் அலட்சியமாக இருக்காதீர்கள். காரணம். நீங்கள் தொடர்ச்சியாக அதனை கவனிக்காமல் இருப்பீர்களேயானால், அது சிறுநீரில் பற்றீரியா தொற்றை ஏற்படுத்தலாம். இதனால் சிறுநீரகம் சார்ந்த பல விளைவுகளை நீங்கள் எதிர்காலங்களில் எதிர்கொள்ள நேரிடலாம்.

இதனை முற்றாக நீங்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டுமா? ஒரு நாளைக்கு 3-4 லீற்றர் வரைக்கும் நல்ல சுத்தமான நீரை அருந்துங்கள்.

இதனால் சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை மாத்திரமன்றி உங்கள் உடம்பில் ஏற்படும் பல நோய்களுக்கும் பிரச்சினைகளுக்கும் இலகுவான தீர்வினை நீங்களே பெற்றுக்கொள்ளலாம்.

– தினகரன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s