miswakஆசிர்  

இஸ்லாமிய அடிப்படையில் மிஸ்வாக் செய்யும் முறை

வாயில் ஏற்படக் கூடிய வாய்த் துர்வாடை மற்றும் பற்களில் மஞ்சற்காவி படிதல் போன்றவற்றை நீக்குவதற்காகவே மிஸ்வாக் இஸ்லாத்தின் ஒரு அங்கமாக செயற்படுகின்றது. இதனை எவ்வாறு கையாள வேண்டும் என்பதற்கும் ஷரீஆவில் ஒழுங்குமுறைகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

01. பற்களின் அகலப் பகுதியை குச்சியால் தடவ வேண்டும். மாறாக நீளப் பகுதியைப் பயன்படுத்தக் கூடாது. காரணம் நீளப் பகுதியைப் பயன்படுத்துவதால் பற்களோடு இணைந்த முரசு, தசைகள் பிய்ந்து விடக் கூடும்.

02. பற்களின் ஓரங்களிலும் சட்டிப் பற்களின் பக்கமாகவும் தொண்டையின் ஆரம்பப் பகுதிகளிலும் இலகுவாகத் தடவ வேண்டும்.

03. வலது பக்கமாக ஆரம்பித்து பற்களின் கீழிருந்து மேலாக செய்ய வேண்டும்.மேலும் பற்களிலும் நாவிலும் மிஸ்வாக் செய்வது விரும்பத்தக்கதாகும். இதற்கு பின்வரும் ஹதீஸ் ஆதாரமாக திகழ்கின்றது.

‘நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்த போது அவர்கள் தங்களது நாவினிலே மிஸ்வாக் செய்து கொண்டிருந்தார்கள்’
அறிவிப்பாளர் – அபூமூஸா (ரழி)
ஆதாரம் – புகாரி முஸ்லிம்

மிஸ்வாக் செய்யும் போது வலது கையின் விரல்களை பயன்படுத்த வேண்டும். குறிப்பாக சின்ன விரலையும் நடு விரலையும் சுட்டு விரலையும் மிஸ்வாக்கின் மேற்பகுதியிலும் மோதிர விரலையும் பெரு விரலையும் மிஸ்வாக்கின் கீழ்ப் பகுதியிலும் வைத்துப் பிடித்துப் பற்களைச் சுத்தம் செய்ய வேண்டும். (அல் மஹல்லி)

மிஸ்வாக்கின் மற்றுமொரு முறையாவது
‘நான் நபி (ஸல்) நீளம் அன்றி பற்களின் அகலப் பகுதியால் மிஸ்வாக் செய்வார்கள்’
அறிவிப்பாளர் – ஆயிஷா (ரழி)
ஆதாரம் – ஆபூநுஅயிம்

இவ்வாறு ஷரீஆவில் பல முறைகள் கூறப்பட்டுள்ளது போன்றே நவீன பல் வைத்தியத் துறையிலும் பல முறைகள் கூறப்பட்டுள்ளன அவற்றைப் பின்வரும் ஒழுங்கில் பார்ப்போம்.

வைத்தியக் கண்ணோட்டத்தில் பல் துலக்கும் முறை.

சீரிய பல் துலக்கும் முறையானது அது பற்களில் இருந்து dental plaque ஐ முற்றாக குறைந்த நேரத்தில் பல்இமுரசு போன்ற பாகங்களுக்கு எவ்விதத் தீங்கையும் உருவாக்காமல் நீக்கக் கூடிய முறையாகும். பல்வேறுபட்ட பல் துலக்கும் முறைகள் காணப்படுகின்றன. அவை பற்தூரிகையின் இயக்கத்தின் திசையை வைத்து வகைப்படுத்தப்படுகின்றன.

1)  Horizontal Brushing
மிகவும் எளிமையானதும் பொதுவாக எல்லோராலும் மேற்கொள்ளப்படுகின்ற முறையாகும்.
பற்தூரிகையின் தலைப்பகுதி செங்கோணத்தில் (900) பற்களுடன் இருக்குமாறு வைக்கப்பட்டுஇபற்தூரிகையானது கிடைத்திசையில் முன் பின்னாக அசைக்கப்படுகின்றது.
வாயை திறந்த நிலையில் பல்லின் மேற்பரப்பும் மற்றும் வாய்க்குள்ளான பரப்பும் வாயை மூடிய நிலையில் பற்களின் கன்னத்தை பரப்பும் சுத்தப்படுத்துகின்றன.

2) Vertical Brushing
மேற்கூறப்பட்ட முறையை ஒத்ததாகும். ஆனால் பற்தூரிகையின் அசைவு மேலும் கீழுமானதாக அமைந்துள்ளது.

3)  Vibratory Technique
பற்தூரிகையின் தலைப்பகுதி முரசுகளுடன் பற்களுடன் ஒரு அகன்ற கோணத்தில் தொடுமாறு பற்களின் வேர்ப்பக்கமாக இருந்து வைக்கப்படுகின்றது. பின்னர் பர்தூரிகை இன்னுமொரு இடத்திற்கு நகர முடியாத அளவிற்கு இ ஒரு மென்மையான அழுத்தத்துடன் அதிர்வை உண்டாக்க கூடியதாக செய்யப்படுகின்றது.

4) Roll Technique
மேலுள்ள முறையை ஒத்ததாகும். ஆனால் பற்தூரிகையானது கண்ணப்பக்கத்தில் இருந்து மேற்பரப்பு மற்றும் அண்ணம்ஃநாக்குப் பக்கமாக நகர்த்தப்படுகின்றது.

5) Characters Technique
பற்தூரிகையின் தலைப்பகுதி பற்களின் மேற்பரப்புப் பக்கத்தை நோக்கி அதனுடைய தூரிகைகள் இருக்குமாறு ஒரு அகன்ற கோணத்தில் பற்களின் வேர்ப்பக்கமாக இருந்து வைக்கப்படுகின்றது. பின்னர் பற்தூரிகையானது முன்-பின்னமாக ஒரு சுழட்சி அசைவுடன் அசைக்கப்ப்டுகின்றது. இந்த முறையானது இரண்டு பற்களுக்கு இடையிலுள்ள முரசு கரைந்திருப்பவர்களுக்கு உகந்த முறையாகும். இதனால் இரண்டு பற்களுக்குமிடையில் சேரும் அழுக்குகளை நீக்க முடியும்.

6)    Bass Technique
பற்தூரிகையின் தலைப்பகுதியானது தூரிகைகள் முரசிற்கும் பற்களுக்கும் இடையிலுள்ள இடைவெளிக் கானினுள் செல்லுமாறு ஓர் அகன்ற கோணத்தில் வேர்ப் பகுதியை நோக்கி வைக்கப்படுகின்றது. பின்னர் பற்தூரிகையானது முன்பின்னாக சிறு அசைவுகளாக அசைக்கப்படுகின்றது.இந்த முறையினால் பற்களின் மேலுள்ள மட்டுமல்லாது முரசிற்கு உள்ளாகவுள்ள pடயஙரந உம் நீக்கப்படுகின்றது.

7) Modified Bass Technique
மேலுள்ள முறையை ஒத்தது. ஆனால் முன்பின்னாக அசைவுகளின் பின்னால்
பற்தூரிகையின் தலைப்பகுதி சுழட்சி முறையான அசைவாக பற்களின் மேற்பரப்புப் பக்கத்தை நோக்கி அசைக்கப்படுகின்றது.

மேற்கூறப்பட்டவாறு பல்வேறு வகையான முறைகள் இருந்தாலும் பல ஆய்வுகளின் படி அவற்றிற்கிடையே கிடையே  Plaque ஐ நீக்குந் தன்மையில் அவ்வளவு பெரிதான வேறுபாடு காணப்படவில்லை. 1986 இல்  Fransden என்பவர் இதுபற்றிக் கூறும் போது பற்களையும் வாயையும் சுத்தமாக வைத்திருப்பதென்பது இ புதிதான பல் துலக்கும் முறைகளை விட ஒரு குறித்த முறையை கையாளுபவர் எவ்வளவு கச்சிதமான முறையில் அதை மேற்கொள்கின்றார் என்பதிலேயே தங்கியுள்ளது.

எத்தனை வகையான பல் துலக்கும் முறைகள் இருந்தாலும் எந்த வகையிலும் ஒன்று மற்றொன்று உயர்வானதாக இல்லை.எனவே யார் எந்த முறையில் பல் துலக்கினாலும் உரிய முறையில் துலக்குவதே சிறந்தது.

(தொடரும்)
தொகுப்பு – உம்மு ஷைமா அஸ்ஸாலிஹாத்