azeesஏ.சி.ஏ. அஸீஸ், புலனாய்வு அதிகாரி, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

ஒக்டோபர் 24ம் திகதியானது ஐக்கிய நாடுகள் தினம் என்றழைக்கப்படுகிறது.  ஐக்கிய நாடுகள் சபை பற்றி  கோர்பி அனான் அவர்கள் ‘மனித வரலாற்றில் முன் எப்போதையும் விட ஒரு பொதுவான எதிர்காலத்தை பகிர்ந்து கொள்ளும் நிலையில் இருக்கிறோம். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து சந்தித்தால்தான் அதை வெற்றி கொள்ள முடியும்.  அதற்காகத்தான் நண்பர்களே, நாம் ஐக்கிய நாடுகள் சபையைப் பெற்றிருககிறோம்’; எனக் கூறினார்.

சர்வதேச சட்டத்தில் ஒத்துழைப்பை உருவாக்குதல், சர்வதேச பாதுகாப்பு. பொருளாதார வளர்ச்சி, சமூக முன்னேற்றம், மனித உரிமைகள், உலக சமாதானத்தை அடைதல் ஆகிய திட்டவட்டமான இலக்குகளோடு உருவாக்கப்பட்ட ஒரு சர்வதேச நிறுவனமே ஐக்கிய நாடுகள் தாபனம்.

ஐக்கிய நாடுகள் சாசனம் 1945ம் ஆண்டு ஜூன் மாதம் 26ம் திகதி சென்பிரான்சிஸ்கோ நகரில் கைச்சாத்திடப்பட்டு, 1945 ஆம் ஆண்டு ஒக்;டோபர் மாதம் 24ம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வருமாறு இச்சாசனம் செயற்படு;த்தப்பட்டது என்பதை அனைவரும் அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.

உலகில் அங்கீகரிக்கப்பட்ட ஒவ்வொரு சுதந்திர நாடும் ஐ.நா.தாபனத்தில் அங்கத்துவம் பெற்றுள்ளன. 2006 ஜூன் 28ல் மாண்டி நீக்ரோ நாடு சேர்க்கப்பட்ட பின் தற்போது 192 உறுப்பு நாடுகள் அங்கத்துவ நாடுகளாக உள்ளன. அமெரிக்காவில் நியுயோர்க் நகரத்தில் சர்வதேச எல்லiயில் அதன் தலைமையகம் உள்ளது. ஐ.நாடுகள் சபையில் முக்கிய ஆறு அமைப்புக்கள் உள்ளன.

1.    பொதுச் சபை
2.    பாதுகாப்புச் சபை
3.    பொருளாதார, சமூக நிறுவனம்
4.    நம்பிக்கை பொறுப்பு சபை
5.    சர்வதேச நீதிமன்றம்
6.    பொதுச் செயலகம்

ஐ.நா.தாபனம் எத்தகைய பணிகளை செய்து கொண்டிருக்கிறது?

உலகில் நாடுகளுக்கிடையிலான முரண்பாடுகளால் யுத்தங்கள் பல்வேறு வடிவங்களில் தோற்றம் பெற்றுள்ளன. நாடுகளுக்கிடையிலான ஆக்கிரமிப்புக்கள் நடந்தேறி வருகின்றன. பல்லாயிரக்கணக்கான மனித உயிர்ச் சேதங்களும், வளங்களும் அளிக்கப்படுகின்றன. இவற்றுக்கு தீர்வு காண்பதற்காகவும், உலக சமாதானத்தை கொண்டு வருவதற்காகவும்  முன்முரமாக ஐ.நா. தாபனம் செயற்பட்டு வருகின்றது.

இன்று உலக நாடுகளிடையே தலைவிரித்து தாண்டபமாடுகின்ற பிரச்சினைகளான வறுமை, வேலையின்மை, சூழல் மாசுபடல், குற்றவியல் நடவடிக்கைகள், தீராத நோய்கள், புவி வெப்பமடைதல், இடப்பெயர்வு ஆகியவை தொடர்பில் செயலாற்றுவதற்கு சர்வதேச கூட்டு ஒத்துழைப்பு அவசியம் என்பதால் இதனை ஐ.நா.சபையினுடாக செய்து வருகின்றன.
ஐ.நாடுகள் சபையும் அதனோடு இணைந்த ஏனைய அமைப்புக்களும் வளர்முக நாடுகளுக்கு கடன் உதவி அளிப்பதன் மூலம் உதவி வருகின்றது.  அத்துடன் அகதிகளுக்காக  உதவுதல், உணவு உதவி வழங்கல். இயற்கை அனர்த்தங்களின் போது அவசர உதவிகளை வழங்கள். போன்றவறறை மிகவும் சிறப்பாக செய்து வருகின்றது.

ஐ.நா. சபையில் 2007 முதல் பொதுச் செயலாளராக இருப்பவர் தென்கொரியாவின் பாங்கிமூன். இவருக்கு முன் கானாவின்கோபி அனான் பொதுச் செயலாளராக இருந்தார்.   இத்தாபனத்தில் ஆறு உத்தியோகபூர்வ மொழிகள் உள்ளன. ஆங்கிலம், அராபிக். சீனம். பிரெஞ்சு, ரஸ்யன். ஸ்பானிஸ் போன்றவைகளாகும்.  
ஐ.நா.பாதுகாப்புச் சபை என்றால் என்ன?

உலக நாடுகளிடையே அமைதியையும், பாதுகாப்பையும் உத்தரவாதப்படுத்துவதற்காக பொறுப்புக் கொண்ட அமைப்பே பாதுகாப்புச் சபையாகும். ஐ.நாடுகள் பிற சபைகள், உறுப்பு நாடுகளுக்கு பரிந்துரைகள் மட்டுமே வழங்க முடியும். ஆனால் பாதுகாப்பு சபையானது பிற நாடுகளை கட்டுப்படு;த்தக்கூடிய முடிவுகளை எடு;க்க முடியும்.  ஐ.நா.சபையின் 25வது விதியின்படி  அவை பாதுகாப்பு சபையின் முடிவுகளை நிறைவேற்றியே ஆக வேண்டும்.

பாதுகாப்பு சபையில் 15 உறுப்பு நாடுகள் உள்ளன. அவற்றில் 5 நிரந்தர உறுப்பினர்கள்;. 10 தற்காலிக உறுப்பினாகள்;. சீனா, பிரான்ஸ், ரஸ்யா, இங்கிலாந்து அமெரிக்கா ஆகிய ஐந்து நாடுகளும் நிரந்தர உறுப்பினர்கள். இரண்டாம் உலகப் போரில் வெற்றியாளர்கள். உலகப் பிரச்சினைகளின் மீது எடுக்கப்படும் முடிவுகளை  தடைசெய்யும் வீட்டோ அதிகாரம்  இந்நாடுகளுக்கு உண்டு.  ஆனால் ஐ.நா.தாபனத்தின் பொதுநிறுவனங்களின் செயற்பாட்டு முடிவுகளை எதுவும் செய்ய முடியாது. ஆகவே தனக்கு பிடிக்காத ஒரு தீர்மானத்தை நிரந்தர உறுப்பு நாடுகள் தடை செய்யலாம். ஆனால் அதைப் பற்றிய விவாதத்தை தடை செய்ய முடியாது.  பொதுச் சபையால் வட்டார அளவில் உறுப்பு நாடுகளின் வாக்கெடுப்பால் தீர்மானி;க்கப்படும் பத்து நாடுகளும் இரண்டு ஆண்டுகளுக்கு  இருக்கலாம்.

ஒவ்வொரு மாதமும் பாதுகாப்பு சபை தலைமை அகரவரிசையில் தீர்மானிக்கப்படுகிறது. முக்கியமான பிரச்சினைகள் ஏற்படுகின்ற போது பாதுகாப்பு சபையானது துரித வேகத்தில்  செயற்பட இயலாமல் இருக்கிறது என்று குறை கூறப்படுகிறது.  இதற்கு சர்வதேச பொலிஸ்காரன் என வர்ணிக்கப்படுகின்ற  அமெரிக்காவின் தலையீட்டினையும், சர்வதேச விவகாரங்களில் தன்னிச்சையாக செயற்பட்டு வருவதையும் இங்கு குறிப்பிடலாம்.  

ஐ.நாடுகள் பொதுச் சபை என்றால் என்ன?

எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்ட மனித உரிமைகளையும், அடிப்படைச் சுதந்திரங்களையும் மேம்படுத்தவும், பாதுகாக்கவும் தனியாட்களுக்கும், குழுக்களுக்கும் சமுக அங்கங்களுக்கும்  உள்ள உரிமை மற்றும் பொறுப்பு பற்றிய பிரகடனம், பொதுச்சபைத் தீர்மானம் 53ஃ144 எடுத்துக் கூறுகின்றது.  உலகின் பலவகையான பிரச்சினைகளையும், அதன் தாக்கங்களையும் அறிந்து விவாதிக்கும் ஒரு அரங்கு என  ஐ.நாடுகள் பொதுச் சபை வர்ணிக்கப்படுகிறது.

இதன் முதல் அவைத் தொடர் 1946 ஜனவரி 10 அன்று லண்டனிலுள்ள வெஸ்ட்மினிஸ்டர் மையக்கூடத்தில் தொடங்கியது. அப்போது 51 உறுப்பு நாடுகள் இருந்தன. ஆனால் தற்போது 192 நர்டுகளும் உறுப்பினர்களே.
எல்லா உறுப்பு நாடுகளும் இந்த அவையின் அங்கத்தவர்களாகும். உறுப்பு நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரைக் கொண்டு ஆண்டுதோறும் கூட்டங்கள் இடம்பெறும.; ஒவ்வொரு கூட்டத் தொடரின் தொடக்கத்திலும் இருவாரங்கள் ஒவ்வொரு உறுப்பினர்களும் பேச வாய்ப்பு உண்டு. மரபாக பொதுச் செயலாளர் முதலில் உரையாற்றுவார்.
பொதுச் சபை நிறைவேற்றும் தீர்மானங்களுக்கு அந்த அவைத் தொடரில் பங்குபற்றி வாக்களிக்கும் நாடுகளின் மூன்றில் இரண்டு பங்கு முதன்மை அவசியம். விவாதிக்கப்படும் முக்கியமான பிரச்சினைகளி;ல் உலக அமைதி, பாதுகாப்பு  பற்றிய பரிந்துரைகள், ஐ.நா. அமைப்புக்களுக்கு உறுப்பினர் தேர்ந்தெடு;ப்பு, உறுப்பினர்களைச் சேர்த்தல், இடைநீக்கம். பற்றிய முடிவுகள் ஆண்டு நிதிநிலை அறிக்கை முதலியன அடங்கும். எல்லாப் பிரச்சினைகளும் பெரும்பான்மை வாக்குகளால் முடிவு செய்யப்படும். ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் ஒரு வாக்கு உண்டு.

ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினர்கள் ஐக்கிய நாடுகள் சபை பட்டயத்தின் உறுப்புரை 103 யிற்கு கட்டு;பபட்டவர் ஆவர். அதன் ஏற்பாடுகளுக்கமைய ஐக்கிய நாடுகள் சபை பட்டயத்தின் கீழான திறத்தவரின் கடமைகளுக்கு இடையே முரண்பாடு ஏற்படின் பாதுகாப்பு சபையினால் ஆக்கப்பட்ட கட்டுப்படுத்தும் தீர்மானங்கள் மீது உருவாக்கப்படும் கடப்பாடுகள் தொடர்பில் உறுப்பு அரசுகளிடையே முரண்பாடு ஏற்படின் ஏனைய சர்வதேச ஒப்பந்தங்கள் மீதான கடற்பாடுகளை விட ஐக்கிய நாடுகள் சபை பட்டயத்தின் கீழான கடமையே மேலோங்கும்.

  FM. பர்ஹான்