miswakஆசிர் 

நோன்பாளியான ஒருவர் மிஸ்வாக் செய்வது பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம்.

இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்களது கூற்றுப்படி சூரியன் மதிய நேரத்தை அடைந்ததன் பின்னால் நோன்பாளியான ஒருவர் மிஸ்வாக் செய்வது மக்ரூஹ் ஆகும். காரணம் நோன்பாளியின் வாயில் இருந்து வெளிவரக் கூடிய வாடை அல்லாஹ்விடத்தில் மிக விருப்பமானதாகும்.சிலவேளை மிஸ்வாக் செய்வதனால் அவ்வாடை நீங்கி விட முடியும் (நைலுல் அவ்தார்)

இமாம் ஷாபிஈ (ரஹ்) மேற்சொன்ன தமது கூற்றிற்கு கீழ்வரும் நபி மொழியை ஆதாரமாகக் கூறுகின்றார்கள்

நோன்பாளியின் வாயில் இருந்து வரக்கூடிய வாடை அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியை விட மணமுள்ளதாக இருக்கின்றது

அறிவிப்பாளர் – ஆபூ ஹுரைரா (ரழி)

ஆதாரம் – புகாரிமுஸ்லிம்

வாய்வாடை நீங்குவது என்பதில் உலமாக்கள் மத்தியில் பல கருத்துப் பிராயங்கள் உள்ளன. இவ்வடிப்படையில் சிலர் கூறுகின்றனர் நோன்பாளியான ஒருவர் நேர வரையறை இன்றி எப்பொழுதும் மிஸ்வாக் செய்ய முடியும். இதற்குப் பின்வரும் ஹதீஸ் ஆதாரமாக அமைகின்றது. ‘ரசூல் (ஸல்) அவர்கள் நோன்பு காலத்தில் நேர வரையறை இன்றி மிஸ்வாக் செய்ததை நான் பார்த்தேன்.

அறிவிப்பாளர் – ஆமிர் இப்னு ரபீஆ (ரழி)

ஆதாரம் – அஹ்மத்இதிர்மிதிஇஆபூதாவூத்

நோன்பாளி செய்கின்ற நற்செயல்களில் மிஸ்வாக்கும் ஒன்று என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

அறிவிப்பாளர் – ஆயிஷா (ரழி)

ஆதாரம் – இப்னு மாஜாஹ்

இது எவ்வாறு இருந்தாலும் வாயில் ஏற்படும் வாடையினால் பிறர் அருவருப்படைவார்கள் என்ற நிலை ஏற்படுமானால் நேர வரையறை இன்றி மிஸ்வாக் செய்வதே உசிதமானதாகும்.

மிஸ்வாக் செய்வதினால் ஏற்படும் பலாபலன்கள்

மிஸ்வாக் செய்வதினால் வைத்திய ரீதியிலும் ஆன்மீக லௌகீக ரீதியிலும் பல பலாபலன்கள் ஏற்படுகின்றன அவற்றை சுருக்கமாகப் பார்ப்போம்.

01. இறை திருப்தி கிடைக்கிறது.
02. சுன்னாவை பின்பற்றிய நன்மை கிடைக்கிறது.
03. வாயை சுத்தப்படுத்துகிறது.
04. பற்களை வெண்மையாக்கிறது.
05. பற்சூத்தையை அகற்றுகின்றது.
06. தூர்வாடையை அகற்றுகின்றது.
07. மரண தருவாயில் கலிமாவை மொழிய இலக்குவாக்கின்றது.
08. இளமையில் நரைஇமுதுமை ஏற்படாமல் பாதுகாக்கின்றது.
09. அறிவு வளர்ச்சியடைகின்றது.
10. செமிபாட்டிற்கு வழிகோளுகின்றது.
11. தலை வலி நீங்குகின்றது.
12. சலித் தொல்லை அகழ்கின்றது.
13. பார்வையைக் கூர்மையாக்கின்றது.
14.கருங்குஷ்டம்இவெண்குஷ்டம் ஏற்படாமல் பாதுகாக்கின்றது.
15. விரைவாக ஓமோன் சுரக்கின்றது.
மேலும் எழுபதிற்கும் அதிகமான பலாபலன்கள் மிஸ்வாக் மூலமாக ஏற்படுகின்றது என்பதாக இஸ்லாமிய ஆய்வாளர்கள் கூறுகின்றனர். (சுனன் அல்குப்ரா, சுன்னதுஸ் ஸிவாக், ஷரகுல் முகத்தப், முக்னி, மகல்லி, ஆநதுத் தாலிபீன், இர்ஷாததுஸ்சாதீ ஷரகுல் புகாரி மிர்காதுல் மபாதீஹ்)

மிஸ்வாக் செய்ய வேண்டிய நேரங்கள் ஃ சந்தர்ப்பங்கள்

வுழூ செய்யும் நேரம்
தொழுகையில் ஈடுபடும் நேரம்
குர்ஆன் ஓதும் நேரம்
தூக்கத்திலிருந்து எழும் சந்தர்ப்பம்
வாய் மாற்றமடையும் நேரம்
ஸஜ்தா திலாவத்இஸஜ்தா ஷூக்ர் செய்யும் நேரம்
மஸ்ஜிதில்இவீட்டில் நுழையும் நேரம்
(இஹ்யா உலுமுத்தீன்,நைலுல் அவ்தார், ஷரகுல் முகத்தப், உம்முல் காறி, மிர்க்காதில் மாபாதீஹ்)

(தொடரும்)

தொகுப்பு – உம்மு ஷைமா அஸ்ஸாலிஹாத்