miswak_vஆசிர்

மிஸ்வாக் பற்றி வலியுறுத்தும் நபிமொழிகளும் அதன் சட்டங்களும் அதனால் ஏற்படும் பலாபலன்களும்

1) எனது சமூகத்திற்கு சிரமம் இல்லையென்றிருந்தால் ஒவ்வொரு தொழுகைக்கும் வுழு செய்வது போன்று மிஸ்வாக் செய்யுமாறும் ஏவியிருப்பேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : சைனப் பின்த் ஜஹ்ஷ் (ரழி)

ஆதாரம் : அஹ்மத்

2) மிஸ்வாக்கை நீங்கள் கட்டாயம் கடைப்பிடித்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அது வாயைத் துப்பரவு செய்யக் கூடியதாகவும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை ஈட்டித் தரக் கூடியதுமாக இருக்கின்றது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரழி)

ஆதாரம் : அஹ்மத்

3) மிஸ்வாக் சம்பந்தமாக குர்ஆனிய வசனங்கள் இறங்கி விடுமோ என்று பயந்து விடுமளவு நபி (ஸல்) அவர்கள் மிஸ்வாக் பற்றி கூறிக் கொண்டிருந்தார்கள்.

அறிவிப்பாளர் : ஆயிஷா (ரழி)

ஆதாரம் : அத்தர்கீபு வத்தர் ஹீபு

4) மிஸ்வாக் செய்வதன் காரணமாக எனது சட்டிப் பற்கள் விழுந்து விடுமோ என்று நான் அஞ்சுகின்றளவு ஜிப்ரீல் அலை அவர்கள் மிஸ்வாக் பற்றி வலியுருத்திக் கொண்டே இருந்தார்கள்.

அறிவிப்பாளர் : உம்மு சலமா (ரழி)

ஆதாரம் : தபரானி

5) வெளியில் இருந்து வீட்டிற்குள் நுழைந்தால் நபி (ஸல்) முதலாவது செயலாக மிஸ்வாக் செய்வார்கள்.

அறிவிப்பாளர் : ஆயிஷா (ரழி)

ஆதாரம் : இப்னு மாஜா

மேற்கூறப்பட்ட நபி மொழிகள் மூலமாக நாம் விளங்குவது –

Ø யாருக்கு மிஸ்வாக் எனும் அமல் சிரமமற்றதாக உள்ளதோ அவர் ஒவ்வொரு தொழுகைக்கும் மிஸ்வாக் செய்வது வரவேற்கத்தக்கதாகும்.

Ø எமது வாயையும் அதன் உள்ளுறுப்புக்களையும் நோய் ஏற்படா வண்ணம் துப்பரவாக வைத்திருக்க மிஸ்வாக் உறுதுணையாக அமைவதுடன் இறை திருப்தியை ஈட்டித் தருகின்றது. எனவே இவ் அமல் அவசியமாகும்.

Ø நேரடியாகக் குர்ஆனில் கூறப்படவில்லை என்பதற்காக கவனயீனமாக இருந்து விடல் கூடாது.

Ø பற்களின் கறைகள் நீங்குகின்ற அளவு அழுத்தமாக மிஸ்வாக் செய்ய வேண்டும் என்பதையும் விளங்க முடிகின்றது.

Ø சமூக மற்றும் குடும்ப நலன்களை உளமாற மனம் விட்டு பேசி மகிழ வீட்டிலோ ழச சமூகத்திலோ நுழையும் போது மிஸ்வாக் செய்து வாயை துப்பரவு செய்ய வேண்டும். இதுவே நாகரீக வாழ்க்கையின் வழிமுறையாகும்.

மிஸ்வாக் பற்றிய இஸ்லாமிய சட்டம்

இஸ்லாமிய சட்ட வரையறையில் மிஸ்வாக் பற்றி பல கருத்து அபிப்பிராயங்கள் நிலவுகின்றன.

* இமாம் ஆபூ ஹாமித் அல் இஸ்பிராயினி (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்-தொழுகையில் மிஸ்வாக் செய்வது வாஜிபாகும்.

* தொழுகைக்காக மிஸ்வாக் செய்வது வாஜிப் என்றாலும் இதனை விடுவதனால் தொழுகை முறிந்து விடாது என்பது இமாம் மாவுறுதி (ரஹ்) அவர்களின் கருத்தாகும்.

* இமாம் இஸ்ஹாக் இப்னு ராகவைகி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் வேண்டும் என்று மிஸ்வாக் செய்வதனை விடுவதனால் தொழுகை செல்லுபடியற்றதாக அமையும்.

* இமாம் நவவி (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள் மிஸ்வாக் செய்வது வாஜிப் அல்ல மாறாக அது ஒரு சுன்னத்தான அமலே ஆகும்.

* இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்களது கருத்துப்படியும் மிஸ்வாக் என்பது சுன்னத்தான அமலே அன்றி வேறில்லை. இதனையே வலியுறுத்தி இமாம் அபூ ஹனீபா (ரஹ்)இ இமாம் மாலிக் (ரஹ்)இ இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) ஆகியோரும் கூறுகின்றனர் (நைலுல் அவ்தார்இஷரகுல் முகத்தப்இபத்குல் பாரி)

எனவே பெரும்பான்மையான உலமாக்களது கருத்துப்படி மிஸ்வாக் என்பது சுன்னத்தான அமலே அன்றி வாஜிபில்லை. இதனை பின்வரும் ஹதீசின் வார்த்தை பிரயோகம் தெளிவுபடுத்துகின்றது. ‘எனது சமூகத்திற்கு சிரமம் இல்லை என்று இருந்தால் வுழூ செய்கின்ற ஒவ்வொரு தடவையும் மிஸ்வாக் செய்யுமாறு ஏவி இருப்பேன்’

அறிவிப்பாளர் : ஆபூ ஹுரைரா (ரழி)

ஆதாரம் : அஹ்மத் இ நசாஈ இ மாலிக்)

(தொடரும்)

தொகுப்பு – உம்மு ஷைமா அஸ்ஸாலிஹாத்