கடந்த காலங்களிலும் தற்பொழுதைய காலங்களிலும் எதிர் காலங்களிலும் சமூகத்தை வழிநடாத்துகின்ற அல்லது சமூகத்தை கொண்டு செல்கின்ற பாரிய பொறுப்பு தற்பொழுதைய சிறுவர்கள் மீது இருக்கிறது. குறிப்பாக பாடசாலை மாணவர்கள் இதில் உள்ளடக்கப்படுகின்றனர்.
இவர்கள் தாங்கள் கற்றுக்கொள்கின்ற கல்வி தொடர்பான ஒழுக்க விதிமுறைகள் போன்றவற்றினை பாடசாலையிலேயே சிறப்பாக கற்று அது ஆரம்பப்படியாக இருக்கின்ற இல்லத்தில் தாய் தந்தையர்கள் குறிப்பாக பாதுகாவலர்கள் மத்தியில் சிறந்த நற்பண்புள்ளவர்களாக வளர்ந்து அவர்கள் எதிர்காலத்தில் சிறந்த சமூகத்தில் நல்லவர்களாக வாழக்கூடிய ஒரு சந்தர்ப்பத்தை காட்டவேண்டியவர்கள் பெற்றோர்களும் பாதுகாவலர்களுமே இன்றைய சிறுவர்தின நன்நாளிலே உலகளாவிய ரீதியில் வாழ்கின்ற அனைத்து சிறுவர்களுக்கும் சிறுவர்தின நழ்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதோடு எதிர்காலத்திலும் எதிர்காலத் தலைவர்களாக மாற இருக்கும் இன்றைய நாள் சிறுவர்கள் குறிப்பாக சிறந்த கல்வியோடு சிறந்த நல்லொழுக்கம் உள்ள சிறுவர்களாக மாறுவதற்கு எல்லோரும் கைகோர்க்க வேண்டும் என அனைத்து சிறுவர்களிடமும் வேண்டிக்கொள்வதாக முன்னாள் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சரும் தற்போதைய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவருமான எம்.எல்.ஏம்.ஹிஸ்புல்லாஹ் சிறுவர் தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.