டோஹா: எதிர்வரும் 2022 உலகக்கிண்ண கால்பந்தாட்டப்போட்டிகளை நடாத்தும் நாடாக கட்டார் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்ததைத் தொடர்ந்து, கட்டார் விழாக்கோலம் பூண்டுவருகின்றனது. எனினும் பீபாவின் உத்தியோகபூர்வ கண்காணிப்புக்கள் அண்மையில் கட்டாரில் இடம்பெற்றது.
இதன் போது கட்டார் 2022 உலகக்கிண்ண ஏற்பாட்டுக் குழுவினர், வெளிநாடுகளில் இருந்து குறித்த அபிவிருத்திக்கு வரவழைக்கப்பட்டிருக்கும் தொழிலாளர்கள் நலன்களில் அக்கரை செலுத்தத் தவறி இருப்பதாக கண்காணிப்பாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
– நேபாள் தொழிலாளர்களின் ஒப்பந்தப் பணம் சுரண்டப்படுவதாகவும், நவீன் நாட்களின் அடிமைகள் போன்று நடாத்தப்படுவதாகவும் நேப்பாள தொழிலாளர்கள் தெரிவித்திருக்கின்றனர.
– கடந்த ஜூன் மாதம் 4ம் திகதி தொடக்கம் ஓகஸ்ட் 8ம் திகதி வரை கட்டடப்பணிகளின் போது 44 தொழிலாளர்கள் விபத்தில் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
– ஓர் சிரேஷ்ட உலகக்கிண்ண ஒப்பந்தக்காரர்கள், தொழிலாளர்களை பலவந்தப்படுத்தி வேலை வாங்குகின்றனர்.
– தொழிலாளர்களுக்கு உரிய வேளையில் சம்பளம் கொடுக்கப்படுவதில்லை.
– சில தங்குமிடங்களில் குடிநீர் வசதிகள் தடைப்பட்டிருக்கின்றன.
இவை போன்ற காரணங்களை கண்காணிப்புக்குழுவினர் கட்டார் 2022 கால்பந்தாட்ட சம்மேளனத்திடம் முறையிட்டிருக்கின்றனது.
தாங்கள் எதிர்காலத்தில் பீபாவின் ஒப்பந்தங்களை அக்கறையுடன் பேணி செயற்படுவோம் என கட்டார் பீபா 2022 சம்மேளனம், கண்காணிப்பாளர்களிடம் வாக்குறுதியளித்திருக்கின்றனது.
ஓக்டோபர் முதல் வாரத்தில் நாம் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தது போல், பீபா 2022 போட்டிகளை நடாத்தும் நாடு எது என இறுதித் தீர்மானம் நிறைவேற்றப்பட இறுக்கின்றது.
அதற்கிடையில் கட்டாரிடமிருந்து குறித்த உலகக் கிண்ணத்தைப் பறித்தெடுக்க மேலத்தேய நாடுகள் போட்டி போட்டு வருகின்ற வேளையில் இந்தக் குற்றச்சாட்டுக்களையும் தற்பொழுது பீபா கண்காணிப்பாளர்கள் முன்வைத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.