வீர­கே­சரி இணை­யத்­தளம் ஏற்­பாடு செய்­த இலங்­கையின் தமிழ் வலைப்­ப­தி­வா­ளர்­க­ளுக்­கான #VOPL2013 மென்­பந்து கிரிக்கெட் சுற்­றுப்­போட்டித் தொடரில் #VOPL2013 – Youtube Youngsters அணியை வீழ்த்தி Twitter Tuskers சம்பியன்

11பழுலுல்லாஹ் பர்ஹான் 

கொழும்பு: வீர­கே­சரி இணை­யத்­தளம் ஏற்­பாடு செய்­த இலங்­கையின் தமிழ் வலைப்­ப­திவா­ளர்களுக்­கான #VOPL2013 மென்­பந்து கிரிக்கெட் சுற்­றுப்­போட்டித் தொடரில் பழனி விஜயகுமார் தலைமையிலான Twitter Tuskers அணி முஹமட் பவாஸ் தலைமையிலான Youtube Youngsters அணியை வீழ்த்தி சம்பியனானது. Twitter Tuskers அணி 6 பந்துகள் மீதமிருக்க 9 விக்கெட்டுகளால் அபார வெற்றி பெற்றது.

கொழும்பு 2, மலே கிரிக்கெட் மைதா­னத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற Twitter Tuskers அணி முதலில் களத்தடுப்பை மேற்கொள்ள தீர்மானித்தது. அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய  Youtube Youngsters அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக தனா மற்றும் யதுகுலன் ஆகியோர் களமிறங்கினர். யதுகுலன் எவ்வித ஓட்டமும் பெறாது அரங்கு திரும்ப மறுமுனையில் இருந்த மற்றுமொரு துடுப்பாட்ட வீரர் தனா 7 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

தொடர்ந்து கழம்கண்ட மொசிகரன் 7 ஏமாற்றமளிக்க அணித் தலைவர் பவாஸ் 18, மஹேந்திரன் (ஜயசூரிய) 27 ஓட்டங்களை பெற்று அணியின் ஓட்ட எண்ணிக்கையை வலுப்படுத்தினர்.  இறுதியில் 7 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 63 ஓட்டங்களை Youtube Youngsters அணி பெற்றுக்கொண்டது.

Twitter Tuskers அணியின் பந்து வீச்சாளர்களில் பழனி விஜயகுமார், கிசோர் தலா இரு விக்கெட்டுகளை கைப்பற்றினர். தொடர்ந்து 64 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட லகஷ்மி காந்த், பழனி விஜயகுமார் ஆகியேர் ஆரம்ப வீரர்களாக கழமிறங்கினர்.

7 ஓட்டத்துடன் பழனி ஆட்டமிழந்தார். தொடர்ந்து லகஷ்மி காந்துடன் கிசோர் இணைந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். லகஷ்மி காந்த் ஆட்டமிழக்காது 40 ஓட்டங்களையும்,  கிசோர் ஆட்டமிழக்காது 14 ஓட்டங்களையும் பெற்றனர். Youtube Youngsters அணியில் யாரும் பந்து வீச்சில் பெரிதாக சோபிக்க தவறியபட்டசத்தில் மொசிகரன் ஒரு விக்கெட்டை மாத்திரம் கைப்பற்றினார். 

Youtube Youngsters 4 Overs- 63 Runs- 5 Wickets
Twitter Tuskers 3 Overs- 65 Runs- 1 Wicket

Twitter Tuskers won by 9 wickets (with 6 balls remaining). #VOPL2013 season; Played at Colombo Malay cricket ground. 

Man of the match – Lakshmi Kanth (Twitter)
Man of series – Palani Vijaya kumar (Twitter)
Best bowler- Kishor (Twitter)
Best batsman – Lakshmi Kanth (Twitter)  

 

This slideshow requires JavaScript.

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s