கிழக்கு: இலங்கையில் அரைவாசி மக்கள் நோன்பை விட்டு விட்டனர் புதன்கிழமை. கால்வாசிப்பேர் பெருநாள் தொழுகையும் தொழுதுவிட்டனர். இதற்கிடையில் நோன்பா-பெருநாளா என மக்கள் அலைமோதி இருந்தனர். இதற்கெல்லாம் காரணம் உலமாக்களே!
ஒன்று- கொழும்பு பிறைக் கமிட்டி
இரண்டாவது- கிண்ணியா ஜம்மயித்துல் உலமா
இதற்கிடையில் நீங்கள் பிறையை மறைத்து வானிலை சாஸ்திரங்களை எதிர்வு கூறியிருந்தீர்கள்.
இன்று பெருநாள் தொழுகையில் கலந்துகொள்ளும் பலர் நேற்று நோன்பை விட்டவர்களே என்ற கசப்பான உண்மையை நீங்கள் அறிவீர்களா?
ஆடம்பர குளிரூட்டப்பட்ட வாகனங்களில்லாமல், மண் மேடுகளிலும் ஏரிக்கரைகளிலும் குழுமியிருந்த மக்கள் கண்டதாக உறுதிப்படுத்தப்பட்ட ஷவ்வால் பிறையை சீ.. என்று தட்டிக் கழித்து விட்டீர்களா?
நீங்கள் என்ன தௌபாச் செய்தீர்கள்?
உங்களை விமர்சிக்கும் போது மாத்திரம் அல்லாஹ்வைப் பயந்துகொள்ளுங்கள் என ரீல் விட்டு பொதுமக்களை ஏமாற்ற நினைக்கும் நீங்கள் முதலில் அல்லாஹ்வைப் பயந்து கொள்ள வேண்டும்.
பள்ளிவாயல்கள் தாக்கப்படும்போது மாத்திரம் உங்களிடமிருக்கும் இந்த அசட்டுத் தைரியம் எங்கே போய்விடுகிறது?
பள்ளிவாயல்கள் தாக்கப்படும்போது மாத்திரம் ஏன் நீங்கள் இலங்கை வானொலியை உபயோகித்து கண்டன அறிக்கi விடுவதில்லை?
நட்சத்திர ஹோட்டல்களில் ‘பிரஸ் மீட்டிங்’ போடுவதில்லை?
பொதுமக்களுக்கு அல்லாஹ்வைப் பயப்படுவது எப்படி என்று தெரியும். எனவே ஊடகம் மூலமாக அறிக்கை விட்டால் மாத்திரம் தாங்கள் தப்பிவிட்டோம் என்று நினைக்க வேண்டாம்.
இன்னும் இந்நாட்டில் தலைப்பிறை தோன்றும் என்பதை மறக்வேண்டாம்.
பெருநாள் தினத்தன்று நோன்பை நோக்கச் செய்த நீங்கள் தௌபாச் செய்துகொள்ளுமாறு கிழக்கு மண்ணிலிருந்து தெரிவித்துக் கொள்கின்றோம்.