நோன்பு பெருநாள் (ஈதுல் பித்ர் ) சட்டங்கள்

-அப்துல் நாஸர் (ஜமாலி)

بسم الله الرحمن الرحيم

நோன்பு பெருநாள் என்பது ரமழான் மாதத்தில் நோன்பு நோற்று அதை அடுத்து வரும்  ஷவ்வால் மாதத்தின் முதலாவது நாளில்  கொண்டாடப்படும் நாளாகும். இந்நாளுக்குரிய சட்டங்கள் பின்வருமாறு,

01.நோன்பு பெருநாள் தொழுகை ஹிஜ்ரி 01 ம் ஆண்டு சட்டமாக்கப்பட்டது.  நபி ஸல்லள்ளாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் , மதீனா வந்த போது மதீனாவாசிகள் இரு நாட்களில் களியாட்டங்களில் ஈடுபடுபவர்களாக இருந்தார்கள்.அப்போது இவ்விரு தினங்களும் என்னவென நபி அவர்கள் வினவியபோது ஜாஹிலிய்யாக் காலங்களில் இவ்விரு தினங்களிலும் களியாட்டங்களில் ஈடுபடுவோம் என்றனர். அதற்கு நபியவர்கள் , அல்லாஹ் இவ்விரு தினங்களையும் விட சிறந்த இரு நாட்களை மாற்றித்தந்துள்ளான். அவைகள் ஈதுல் பித்ர் , ஈதுல் அழ்ஹா எனக்கூறியதாக  அனஸ் ரழியள்ளாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். (அபூதாவுத் 1134, அஹ்மத் 13622 , அந்நஸாஈ 1555 ) ஸீரா வரலாற்று ஆசிரியர்கள் நோன்பு பெருநாள் ஹிஜ்ரி 02ம் ஆண்டு சட்டமாக்கப்பட்டதாக கூறுகின்றனர்.( அத்தல்கீஸ் அல்ஹபீர் 2ஃ79 )

02. நோன்பு பெருநாள் தொழுகைக்கு செல்லுமுன் பேரீத்தம்பழம் போன்ற சிறு உணவுகளை உட்கொள்வது விரும்பத்தக்கது. ‘ நபி ஸல்லள்ளாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் நோன்பு பெருநாள் தினம் சில பேரீத்தம்பழங்களை சாப்பிடும் வரை தொழுகைக்கு செல்லமாட்டார்கள். என அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி : 953)

03. பெருநாள் தொழுகைக்கு சுப்ஹு தொழுகையின் பின் செல்வது சுன்னத்தாகும். சூரியன் உதித்து 15 நிமிடங்களுக்குப் பின் தொழுகை ஆரம்பிக்கப்பட வேண்டும். ‘ அப்துல்லாஹ் பின் புஸ்ர் ரழி அவர்கள் மக்களுடன் ஒரு பெருநாள் தினம் வெளியேறினார்கள். தொழுகை நடாத்தும் ஆட்சியாளர் பிந்திய போது அதைக் கண்டித்தார்கள். நபி ஸல்லள்ளாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் காலத்தில் இந்த நேரம் தொழுகையை முடித்திருப்போம். அது    ( சூரியன் உதித்து தடை செய்யப்பட்ட நேரம் சென்று ) ழுஹா என்ற சுன்னத்தான தொழுகையின் நேரம் என்று கூறினார்கள். ( அறிவிப்பாளர் தொடர் இல்லாமல் புகாரி : 1  306 அத்தொடருடன் அபூதாவுத் : 1137 இப்னு மாஜஹ் : 1317 ) இப்னு உமர் ரழி அவர்கள் நபி அவர்களின் பள்ளியில் சுப்ஹுத் தொழுதுவிட்டு திடலுக்குச் செல்வார்கள். ( முஸன்னப் இப்னி அபீபஹ் 5609 )  ‘ மக்கள் சுப்ஹுத் தொழுதுவிட்டு தங்களின் இடத்தில் அமர்ந்து பெருநாள் தொழுகையை எதிர்பார்பதை விரும்புகின்றேன் என இமாம் ஷாபியி (றஹ்); அவர்கள் கூறுகின்றார்கள்.          ( அல் உம்மு 1 ஃ 355 )

04.பள்ளிவாயல்களில் போதிய இட வசதி காணப்பட்டாலும் பெருநாள் தொழுகை , திடலில் நடாத்தப்படுவது நபி ஸல்லள்ளாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் சுன்னாவாகும். ‘நபி ஸல்லள்ளாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் திடலுக்குச் செல்பவர்களாக இருந்தார்கள். ( புஹாரி : 956 )

 நபியவர்களுக்குப் பின் தோன்றிய நான்கு கலீபாக்களும் (அபூபக்ர் , உமர் ,உஸ்மான் ,அலி ரழியள்ளாஹு அன்ஹும் ) பெருநாள் தொழுகையை திடலிலேயே நிறைவேற்றினார்கள். அதே போன்று பெரும்பாலான இஸ்லாமிய நகரங்களிலும் இதே நடை முறையே தொடர்ந்து காணப்படுகின்றது. ஆனால் மக்காவில் திடல் இல்லாத காரணத்தினால் மக்காவாசிகள் க.ஃபா பள்ளியில் தொழும் வழக்கம் இருந்தது.மக்காவில் காணப்படும் நடைமுறைகளைத் தீர்ப்பின்போது  கவனத்தில் எடுக்கும் இமாம் ‘hபிஈ அவர்கள், பள்ளியில் போதிய இடம் இருந்தால் அதுவே சிறந்தது எனக் கூறினார்கள். ( அல்உம்மு : 1 ஃ 234 ) இக்கருத்து நபி அவர்களின் சுன்னாவுக்கு முரண்பட்டுள்ளதால் குராஸான் நாட்டு ‘ஷாபியி அறிஞர்கள் இமாமின் கருத்தை நிராகரித்து ஸுன்னாவை வலியுருத்தினார்கள்.  ( நிஹாயதுல் மத்லப் : 2 ஃ 614 லி இமாமில் ஹரமைன் அல் மஜ்மூஃ; ‘ர்ஹ் முஹத்தப் லின் நவவி 5ஃ 5 )

05.பெண்கள் திடலுக்குச் சென்று பெருநாள் தொழுகைiயில் ஈடுபட பணிக்கப்பட்டுள்ளனர். ஆனால் மாதவிடாய் பெண்கள் திடலுக்கு சமூகமளித்து தொழும் இடத்தை விட்டு ஒதுங்கி இருக்க வேண்டும். ‘ இரண்டு பெருநாட்களிலும் மாதவிடாய் பெண்களையும் கன்னிப் பெண்களையும் வெளியேற்றி அழைத்து வருமாறு கட்டளையிடப்பட்டோம். அவர்கள் முஸ்லிம்களின் ஒன்று கூடலிலும் அவர்களின் பிரார்த்தனையிலும் கலந்து கொள்வார்கள்.தொழும் இடத்தை விட்டு ஒதுங்கி இருப்பார்கள் என உம்மு அதிய்யா ரழி அவர்கள் அறிவிக்கின்றார்கள் (புஹாரி : 351 முஸ்லிம் : 2051 )

06. பெருநாள் தொழுகைக்கு முந்திய பிந்திய சுன்னத்தான தொழுகைகள் கிடையாது, ‘  நபி ஸல்லள்ளாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் நோன்பு பெருநாளில் இரண்டு ரக்அத் தொழுதார்கள். அதற்கு முன்னும் , பின்னும் எதையேனும் தொழவில்லை என இப்னு அப்பாஸ் (ரழி) அறிவிக்கின்றார்கள் ( புஹாரி : 964 முஸ்லிம் :884 )

07. பெருநாள் தொழுகைக்கு அதானோ,இகாமத்தோ வேறு எந்த அழைப்போ கிடையாது. ‘ நோண்புப் பெருநாளில் தொழுகைக்கு பாங்கு சொல்லப்பட்டதில்லை. என இப்னு அப்பாஸ்   (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ( புஹாரி : 959 ,5249  முஸ்லிம் : 886 )

08. பெருநாள் தொழுகை இரண்டு ரக்அத்துக்களைக் கொண்டதாகும். இதில் முஸ்லிம்கள் மத்தியில் கருத்து வேறுபாடு கிடையாது. இதற்கு இப்னு அப்பாஸ் ரழி அவர்களின் ஹதீஸ் சான்றாகும். ( புஹாரி :964 முஸ்லிம் :884)

09. முதலாவது ரக்அத்தில் பாதிஹா சூறா ஓதுவதற்கு முன் ஏழு தக்பீர்களும் இரண்டாவது ரக்அத்தில் ஐந்து தக்பீர்களும் சொல்ல வேண்டும்.  இந்தத் தக்பீர்களை அபூ ஹுரைறா (ரழி)     இப்னு அப்பாஸ் (ரழி) போன்ற ஸஹாபாக்கள் கூறியுள்ளார்கள். இதுவே மதீனா நகரில் முற்காலம் தொட்டு இருந்து வந்துள்ளது. (அல் முவத்தஃ 1 ஃ 180 இல : 433 முஸன்னப் இப்னி அபீ i’பஹ் : 5703)  இத்தக்பீர்களை  நபி ஸல்லள்ளாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக பல ஹதீஸ்களில் காணப்படுகின்றது. ஆனால் அவைகள் அனைத்தும் பலவீனமானதாகும். இதனால் அஹ்மத் பின் ஹன்பல் அவர்கள் பெருநாள் தொழுகையின் தக்பீர்களுக்கு ஆதாரமான ஹதீஸ் இல்லை எனக் கூறியுள்ளார்கள். (பத்ஹுல் பாரி இப்னு ரஜப் 6 ஃ 178 ,அல்லுஆபா 2 ஃ 283)இவ்விடயத்தில் ஸஹாபாக்கள் கூற்று முன்மாதிரியாக கொள்ளப்படுகின்றது.இக்காலம் வரைக்கும் முஸ்லிம்களின் நடைமுறையும் அவ்வாறே உள்ளது.

 

10. ஒவ்வொரு தக்பீரைச் சொல்லும்போதும் கைகளை அவிழ்த்துக் கட்டுவதற்கோ  தக்பீர்களுக்கிடையில் திக்ர்கள் சொல்வதற்கோ ஆதாரங்கள் கிடையாது. எனவே அவைகளைத் தவிர்ந்து கொள்வது சிறந்தது.

11. பெருநாளும் ஜும்ஆ தினமும் ஒரே நாளில் ஏற்பட்டால் பெருநாள் தொழுகையையும் ஜும்ஆ தொழுகையினயும் தொழ வேண்டும். ஜும்ஆ தொழுகையை விட முடியாது. அவ்வாறு விடுவதற்கு நபி ஸல்லள்ளாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் சலுகை வழங்கினார்கள் என அறிவிக்கும் ஹதீஸ் அனைத்தும் பலவீனமானவையாகும். மதீனாவைச் சுற்றியுள்ள குக்கிராமங்களிலிருந்து சமூகமளித்தவர்களுக்கு உஸ்மான் (ரழி) அவர்களின் சலுகை வழங்கினார்கள். .(புகாரி :5572) தற்போது கிராமங்களில் ஜும்ஆ தொழுகை நடாத்தப்படுவதால் உஸ்மான் (ரழி) அவர்களின் சலுகை  அவசியமற்றதாகி விட்டது.

12. பெருநாள் இரவில் விN’ட வணக்கங்கள் எதுவும் கிடையாது. இவ்விரவில் நடாத்தப்படும் திக்ர் மஜ்லிஸ்கள் ,பிரார்த்தனைகள் வழி கெட்ட பித்அத்துகளாகும். பெருநாள் இரவில் நின்று வணங்கவேண்டும் என வந்த ஹதீஸ்கள் பொய்யானவையாகும். இமாம் ‘hபிஈ (றஹ்) அவர்கள் அவரது ஹதீஸ் ஆசிரியராகிய ‘ இப்றாஹீம் பின் முஹம்மத் பின் அபீ யஹ்யா’ என்பவர் ஊடாகப்பெற்ற சில அறிவிப்புக்களை அடிப்படையாகக் கொண்டு பெருநாள் இரவு வணக்கத்தை ஆதரித்துள்ளார்கள். எனினும் இந்த இப்றாஹீம் பொய்யர் என ஹதீஸ் கலை அறிஞர்களினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். ( தஹ்தீபுல் அஸ்மாயி வல்லுகாத் லின் நவவி 1 ஃ 141 ) ‘hபிஈ (றஹ்) அவர்கள் அவரது நூற்களில் இந்த இப்றாஹீமின் ஹதீஸ்களை ஆதாரமாக எடுத்துக்கொண்டதை இஸ்ஹாக் பின் ராஹவைஹி (ரஹ்) அவர்கள் வன்மையாக கண்டித்துள்ளார்கள். இமாம் இஸ்ஹாக் பின் ராஹவைஹி ரஹ் அவர்கள் இமாம் ‘hபிஈ (ரஹ்) அவர்களுடன் விவாதத்தில் ஈடுபட்டபோது , ‘hபிஈ அவர்கள் இப்றாஹீம் பின் முஹம்மத் பின் அபீ யஹ்யாவின் ஹதீஸ்களை ஆதாரமாக முன்வைத்தார். அப்போது உலகத்தில் யாராவது இப்றாஹீமை ஆதாரமாக கொள்வார்களா? எனக் கூற கடுமையாக விமர்சித்தார்கள்.( தஹ்தீபுல் கமால் 2ஃ188 }

13. பெருநாள் உரை நிகழ்த்தும் இமாம், மிம்பர் இல்லாமல் நின்ற வண்ணம் குத்பா உரை நிகழ்த்துவது நபி அவர்களின் முன்மாதிரியாகும். ‘ நபி அவர்கள் நோன்பு பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் திடலுக்குச் செல்பவர்களாக இருந்தார்கள். அவர்கள் ஆரம்பமாக  தொழுகையைத் நடாத்துவார்கள். தொழுது முடித்து மக்களை முன்னோக்குவார்கள். இதை அபூ ஸயீதினில் குத்ரிய்யி (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புஹாரி : 956 முஸ்லிம் : 2090) இந்த ஹதீஸின் அறிவிப்பின் ஒன்றில் ‘ தனது இரு கால்களில் நின்றவராக பிரசங்கம் செய்தார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ( அஹ்மத் : 11263 ) இன்னுமொரு அறிவிப்பில் ஒட்டகத்தில் ஏறியவர்களாக பிரசங்கம் நிகழ்த்தினார்கள். எனக் கூறப்பட்டுள்ளது.            ( இப்னு அபீபா  : 5904)

 14. மக்களை விட்டும் தனித்து வேறு ஒரு நாளில் பகிரங்கமாக பெருநாள் கொண்டாடுவது பின்வரும் நபி அவர்களின் வழிகாட்டலுக்கு முரணான வழிகெட்ட பித்அத்தாகும். ‘ எந்த நாளில் மக்கள் நோன்பை நிறைவு செய்து,   பெருநாள் கொண்டாடுகிறார்களோ அதுவே ஈதுல் பித்ருடைய நாளாகும். என நபி அவர்கள் அறிவித்ததாக ஆயி’h ரழி அவர்கள் அறிவிக்கின்றார்கள். ( திர்மிதி : 802 ) பெருநாள் என்பது கூட்டு வணக்கமாகும். தனிப்பட்ட வணக்கம் அல்ல.ஒரு நாட்டில் சட்ட ரீதியான அல்லது சம்பிரதாய தலைமைத்துவம் தீர்மானிக்கும் பிறையைக் கடைப்பிடிக்க அந்நாட்டு மக்கள் கடமைப் பட்டுள்ளனர்.தனித்து பெருநாள் கொண்டாடுவது நகரங்களில் ,கிராமங்களில் ,குடும்பங்களில் அனாவசியமான பிளவை ஏற்படுத்தும். (மேலதிக விபரங்களுக்கு பிறை பற்றிய தெளிவு பெறுவது எவ்வாறு? எனும் எமது நூலை வாசிக்கவும்.)

வெளியீடு :

கலாநிதி A.L.அஹ்மத் அஸ்ரப் ( Ph.d. அல்-அஸ்ஹர் )    

தாருல் ஹதீத் இனைப் பேராசிரியர்          

நஜ்ரான் பல்கலைக் கழகம்               

07-08-2013

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s