ரைஸ்
கிண்ணியா: கிண்ணியா சூரங்கல்லிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற வேன் ஹபரணை வீதியில் யானையில் மோதி வேன் விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் ஹபரண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அனைவரும் கந்தளாய் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். வேன் உரிமையாளரும் அதனை செலுத்தி வந்த சாரதியுமான முகம்மது நளீம் என்பவர் பலத்தகாயங்களுடனும் ஏனைய நால்வருக்கும் சிறுசிறு காயங்கள் ஏற்பட்டதாகவும் அறிய முடிகின்றது.
குறித்த விபத்து நேற்று மாலை 06.00 மணியளவில் ஹபரண காட்டு வழியாக பிரயாணம் செய்து கொண்டிருக்கும் போது வீதியினை கடக்க முயன்ற ஒரு யானை மீது மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்துக்குள்ளான வேன் முழுமையாக சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.