கிழக்கு மாகாண, விவசாய, கால்நடை உற்பத்தி அபிவிருத்தி, கிராமியக் கைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி, மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சின் இரண்டாம், மூன்றாம் நாள் நடமாடும் சேவைகள்

– பழுலுல்லாஹ் பர்ஹான்

DSC_0003கந்தளாய்: கந்தளாயிலுள்ள கந்தளாவ இயற்கை சினைப்படுத்தும் நிலையம் உதவி விவசாய பணிப்பாளர் காரியாலயம், கால்நடை காரியாலயம், விவசாய போதனாசிரியர் காரியாலயம், நெசவு நிலையம், நெசவு பொருட்கள் விற்பனை நிலையம் , வானல கமநல சேவைகள் நிலையம், சேருநுவர கால்நடை விவசாய திணைக்களம் ஆகியவற்றை தரிசித்து மக்கள் குறைபாடுகளை கேட்டறிந்தார்.

இக்கலந்துரையாடலின் போது விவசாயம் கால்நடை சம்மந்தமான பல்வேறு பிரச்சனைகள் பொது மக்களால் முன் வைக்கப்பட்டது. ஆப்பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் முகமாக தனது உத்தியோகத்தர்களுக்கு, பணிப்பாளர்களுக்கு அமைச்சர் பணிப்புரை வழங்கினார்.

இந்த நிகழ்வுகளின் போது விவசாயிகளுக்கு நீர் இரைக்கும் இயந்திரம், மண்வெட்டி, மா அரைக்கும் இயந்திரம், வழங்கியதுடன் பண்ணையாளர்களுக்கு மாட்துத்தொழுவம் அமைக்க 30ற்கு மேற்பட்ட பண்ணையாளர்களுக்கு காசோலையும், ஆட்டுத்தொழுவம் அமைக்க 10ற்கு மேற்பட்ட பண்ணையாளர்களுக்கு 10,000 ரூபா வீதம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வின் போது கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர் ஜயந்த வீரசேகர அமைச்சன் செயலாளர் கே.பத்மநாதன் அமைச்சின் திணைக்கள பணிப்பாளர்கள் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.

மூன்றாம் நாள் நிகழ்வுகள் சனிக்கிழமை காலை ஆரம்பமான போது தம்பலகாமம், முள்ளிப்பொத்தானை, கிண்ணியா, நடுவூற்று, சூரங்கல், குறிஞ்சாங்கேணி, திருகோணமலை நகர் போன்ற இடங்களில் அமைந்துள்ள அமைச்சின் திணைக்களங்களுக்கும் அமைச்சின் அதிகாரிகளோடு  இந்த நடமாடும் சேவை அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தலைமையில் இடம்பெற்றது.

???????????????????????????????

இந்த சேவைகளின் போது சூரங்கல் பிரதேசத்தில் அமைந்துள்ள பால் குளிரூட்டும் நிலையத்துக்கு விஜயம் செய்த குழுவினர் இங்கு நிலவும் குறைபாடுகளை கேட்டறிந்து கொண்டதோடு அதனை தீர்த்து வைப்பதற்குரிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது.

குறிப்பாக இப்பிரதேசத்தில் 45,000க்கும் மேற்பட்ட கறவைகளை வளர்த்து வரும் பால்பண்ணையாளர்கள் தினமும் 3500டு பசும்பாலை இங்கு வழங்கி வருகின்றனர். இதன் மூலம் கிண்ணியா பிரதேசத்திலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு போசாக்கு சக்தியை அதிகரிக்கும் நோக்கில் தினமும் பசும்பால் வழங்கப்படுவதாகவும் கறவைகளை பராமரிப்பதற்காக மேய்ச்சல் தரை இல்லாத குறையையும் அமைச்சருக்கு சுட்டிக்காட்டினார்கள்.

DSC_0003

மேலும் கிண்ணியா நகர சபைக்கு விஜயம் செய்த குழுவினர் நகர சபை தவிசாளர் டாக்டர் எம்.எம்.ஹில்மி தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலிலும் கலந்து கொண்டனர்.கிண்ணியா பிரதேசம் உல்லாச பயணத்துறையில் முன்னேறி வருவதாகவும் உல்லாச பிரயாணிகளை கவரும் வகையில் அபிவிருத்திகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டனர் இதற்கு உடனடித் தீர்வு காண்பதாக முடிவு செய்யப்பட்டது.

மேலும் பூவரசந்தீவு மாதர் அபிவிருத்தி சங்கத்தினர் நடத்தி வரும் பழரச உற்பத்திச் சாலைக்கும் விஜயம் செய்ததோடு திருகோணமலை உப்புவெளியிலுள்ள கால்நடை மிருகவைத்திய நிலையத்துக்கும் விஜயம் செய்து பண்ணையாளர்களது குறைகளை கேட்டுக் கொண்டனர்.

 ???????????????????????????????

இந்த நடமாடும் சேவையின் போது பண்ணையாளர்களுக்கு மாட்டுத் தொழுவம் அமைக்கவும் காசோலைகளை வழங்கியதோடு நீர் இறைக்கும் இயந்திரம் முற்கம்பி கோழிக்குஞ்சுகள், கறவைகளுக்கான மருத்துவ பொருட்கள், பசும்பால பதனிடும் சாதனம், பால் சேகரிக்கும் கொள்கலன், கறவைகளுக்கான புல்லுகள் என்பனவும் வழங்கப்பட்டது.

இந்த வைபவங்களின் போது தம்பலகாமம் பிரதேச சபைத் தலைவர்  எஸ்.எம்.சுஃபியான், கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் ஆரியவதி கலப்பதியின் செயலாளர் ஜயதாஸ வெத்தகெதர, அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் எஸ்.எம்.சறூஜ், அமைச்சரின் மக்கள் தொடர்பு செயலாளர் அனிஸ்டஸ் ஜெயராஜ், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் அபுல்ஹசன் உட்பட கிண்ணியா கிராம அபிவிருத்தி சங்க செயலாளரும் அமைச்சரின் ஊடக இணைப்பாளருமான ஏ.எம்.மஹ்சூம், கிண்ணியா பிரதேச அமைச்சரின் இணைப்பாளர் பாரூக், உட்பட அமைச்சின் திணைக்களப்பணிப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s