Month: May 2013
-
70 இலட்சம் ரூபா சம்பளப்பணம் கொள்ளை!
கொழும்பு: தனியார் தொழிற்சாலை ஒன்றுக்கு சொந்தமான ஏழு மில்லியன் ரூபா பணம் இனந்தெரியாத ஆயுததாரிகளால் கொள்ளையடித்துச் செல்லப்பட்டுள்ளது. ஜா – எல, ஏக்கல பிரதேசத்தில் நேற்றுப் பட்டப் பகலில் துணிகரமாக கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் புத்திக சிறிவர்தன தெரிவித்தார்.
-
இலங்கையில் ஒன்றுகூடல் சுதந்திரம் இல்லை என்று குற்றச்சாட்டு
ஜெனீவா: இலங்கையில் ஒன்றுகூடலுக்கான சுதந்திரம் இல்லை என்று ஐஎம்ஏடிஆர்(இமாதார்) எனப்படும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையத்திடம் எழுத்துபூர்வமாக தெரிரிவித்துள்ளது.
-
பாசிக்குடா கடற்கரையை அழகு படுத்த நடவடிக்கை
கொழும்பு: சுற்றுலாப் பயனிகளின் வசதி கருதி கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறைக்கு பிரசித்தி பெற்ற பாசிக்குடா கடற்கரையை அழகுபடுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் வள நிலைய அதிகாரி ஏ.ராமச்சந்திரன் தெரிவித்தார்.
-
வட மாகாணசபைத் தேர்தல் ஒத்தி வைக்கப்படக் கூடிய சாத்தியம்
கொழும்பு: வட மாகாணசபைத் தேர்தல் ஒத்தி வைக்கப்படக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. வட மாகாணசபைத் தேர்தல்கள் ஒரு மாத காலத்திற்கு ஒத்தி வைக்கப்படலாம் என அரச வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்களின் கன்னித்தன்மை சோதனைக்கு மாற்று வழிகள்
– OIT டெல்லி: பொதுவாக பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படும் பெண்களுக்கு, கன்னித்தன்மையை சோதிக்க கை விரல்களை பயன்படுத்துவது டொக்டர்கள் வழக்கம். ஆனால் தற்போது இதற்கு தடை விதித்து வேறு விதமான முறைகளில் சோதனைகள் மேற்கொள்ள சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
பிக்குவின் கொலை: 1983 ஜூலைக் கலவரத்தின் பின்னணியில் முஸ்லிம்களை இலக்கு வைக்க மற்றுமொரு சதி!
-AF 47 கொழும்பு: கடந்த வெள்ளிக்கிழமை கண்டியில் தீப்பற்றி படு கொலை செய்யப்பட்ட பிக்குவின் மரணத்தின் பின்னர், தாங்கள் செய்த நாடகத்தின் உண்மையை சர்வதேசம் இன்று தெளிவாக அறிந்துகொண்டிருக்கும் நிலையிலும், செய்வதறியாது இக்கொலையின் ஏற்பாட்டாளர்கள் தட்டுத்தடுமாறியிருக்கும் நிலையிலும், அடுத்தகட்ட நடிவடிக்கைகள் துரிதமாக மேற்கொண்டு, உண்மையை மறைக்க கடும் பிரயத்தனங்களை சம்பந்தப்பட்டவர்கள் எடுத்து வருகின்றனர்.
-
26 ஆங்கில எழுத்துக்களையும் பயன்படுத்தி உருவாக்கிய சிறிய சொற்றொடர்
ஆங்கிலத்திலுள்ள 26 எழுத்துக்களும் வரும் வகையில் வசனமொன்றை அமைத்தால் எப்படியிருக்கும். அவ்வாறு அமைக்கப்பட்ட மிகச்சிறிய சொற்தொடர் என்ன தெரியுமா?
-
தம்புள்ளை: ஒரே நாளில் காலி செய்யச் சொல்வதாக மக்கள் புகார்
தம்புள்ளை: இலங்கையில் தம்புள்ளை நகருக்கு அருகிலுள்ள பாதெனிய நகரில் பௌத்த புனிதப் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட ஒரு இடத்தில் வாழ்பவர்கள், மாற்றுக் காணியோ அல்லது நஷ்ட ஈடோ வாங்கிக்கொண்டு அப்பிரதேசங்களில் இருந்து காலிசெய்ய வேண்டும் என்ற ஒரு உடன்பாடு சில காலம் முன்பு எட்டப்பட்டிருந்தது.
-
சட்டத்தரணி ஹூனைஸ் பாருக், இலங்கைக்கான நோர்வே நாட்டின் உயர் ஸ்தானிகரிடத்தில் வேண்டுகோள்
– இர்ஷாத் றஹ்மத்துல்லா கொழும்பு: வடமாகாண சபை தேர்தலுக்கு முன்னர் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், 18 வயதை பூர்த்தியடைந்த அனைவரினதும் வாக்குரிமை என்பவைகளை உறுதிப்படுத்தியதன் பின்னரே அது நடத்தப்பட வேண்டும் என்பதே வடமாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களின் கோறி்க்கையாகும் என்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், சட்டத்தரணி ஹூனைஸ் பாருக், இலங்கைக்கான நோர்வே நாட்டின் உயர் ஸ்தானிகரிடத்தில் எடுத்துக் கூறியுள்ளார்.
-
ஜோர்தான் பணிப்பெண் மரணம்: ‘நீதி விசாரணை வேண்டும்’
கொழும்பு: ஜோர்தானில் துப்பாக்கிச் சூட்டில் பலியான இலங்கைப் பணிப் பெண்ணின் மரணம் தொடர்பாக விசாரனை நடாத்தி நீதி வழங்க வேண்டும் என்று மட்டக்களப்பு வாழைச்சேனையில் பேரணியொன்று நடத்தப்பட்டுள்ளது.
-
பிரித்தானியா வாழ் இலங்கை முஸ்லிம்களுக்கான 10வது மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்வு!
– MJ லண்டன்: பிரித்தானியாவில் உள்ள சிறிலங்கா இஸ்லாமிய போரம் ஏற்பாடு செய்துள்ள இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கான 10வது மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்வு எதிர்வரும் ஜூன் மாதம் 15ம் மற்றும் 16ம் திகதிகளில் லெஸ்டர் நகரில் இடம்பெற உள்ளது.