Month: May 2013
-
ஜாமிஆ நளீமிய்யா புதிய மாணவர் பிரவேசம் – 2013: பெயர் விபரங்கள்
– பஹ்மியூஸூப் பேருவளை: பேருவளை ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் 2013/2014 ஆம் கல்வியாண்டுக்கான புதிய மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதற்காக ஏப்ரல் 28,29,30 ஆம் திகதிகளில் நளீமிய்யா வளாகத்தில் நடாத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் பின்வரும் 50 மாணவர்கள் இக்கல்வியாண்டில் முதலாம் வருடத்தில் இணைந்து கல்வி கற்பதற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
-
கிழக்கு மாகானத்தில் காணப்படும் உள்ளூராட்சி மன்றங்களில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பான மீளாய்வுக் கூட்டம் திருகோணமலையில்
– பழுலுல்லாஹ் பர்ஹான் திருகோணமலை: கிழக்கு மாகானத்தில் காணப்படும் உள்ளூராட்சி மன்றங்களில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பான மீளாய்வுக் கூட்டம் நேற்று முன்தினம் (30.04.2013) கிழக்கு மாகாண பிரதம செயலாளர் டீ.எம்.சரத் அபேகுணவர்தன தலைமையில் மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் திருகோணமலையில் நடைபெற்றது.
-
மட்டக்களப்பு மாவட்டத்தின் மேற்கு எல்லையிலும்; தமிழர்களுக்கு சொந்தமான காணிகளை சிங்களவர்களினால் அபகரிப்பதற்கான முயற்ச்சிகள் இடம் பெறுகின்றது-த.தே.கூ. மட்டு .பா-உ. பொன். செல்வராசா –எம்பி.
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தின் மேற்கு எல்லையிலும்; தமிழர்களுக்கு சொந்தமான காணிகளை சிங்களவர்களினால் அபகரிப்பதற்கான முயற்ச்சிகள் இடம் பெறுவதாக குற்றம் சுமத்தியுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா அதனை தடுத்து நிறுத்துமாறு அரசாங்க அதிபரை கேட்டுள்ளார்.
-
நீதிமன்றில் சரணடைந்த ஆளுங்கட்சி காத்தான்குடி நகர சபை உறுப்பினர் பாக்கீர் ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மாணவி பாலியல் சேஷ்டை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டு பொலிஸாரினால் தேடப்பட்டு பின்னர் நீதிமன்றில் சரணடைந்து எதிர்வரும் 08ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த காத்தான்குடி ஆளுங்கட்சி நகர சபை உறுப்பினரும் பிரபல பொருளியல் பாட ஆசிரியருமான எம்.எச்.எம்.பாக்கீர் 1இலட்சம் ரூபா சரீரப் பிணையில் இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டுள்ளார்.
-
பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் அசாத் சாலி இன்று கைது!
– விசேட நிருபர் கொழும்பு: அண்மையில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த முன்னாள் கொழும்பு பிரதி மேயர் அஸாத் சாலி, இந்தியாவில் அரசாங்கத்துக்கு எதிராக வெளியிட்டிருந்த கருத்துக்களால் பயங்கரவாததடைச் சட்டத்தின் கீழ் இன்று காலை 6:30 மணியளவில் கொலன்னாவையிலுள்ள அவரது வீட்டில் வைத்து குற்றப்புலனாய்வு உத்தியோகத்தர்களால் கைது செய்யப்பட்டார்.
-
பார்சிலோனா படுதோல்வி! ஐரோப்பா கிண்ண இறுதிப் போட்டிக்கு இரு ஜேர்மனி அணிகள்!!
-MJ லண்டன்: சற்று முன்னர் நிறைவடைந்த ஐரோப்பா கிண்ண கழகங்களுக்கான சம்பியன் (UEFA) இரண்டாவதும் இறுதியுமான அரை இறுதிப் போட்டியில் பார்சிலோனாவை எதிர்த்து பேயர்ன் மியூனிச் எதிர்த்தாடியது.
-
இலங்கையில் நாலா பாகங்களிலும் இருந்து நீண்ட தூரம் பயணம் செய்யும் பஸ்வண்டிகள் நிறுத்தப்படும் ஹோட்டல்களில் சுகாதார சீர்கேடு-பிரயாணிகள் விசனம்
– பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: இலங்கையில் நாலா பாகங்களிலும் இருந்து நீண்ட தூரம் பயணம் செய்யும் பஸ்வண்டிகள் நிறுத்தப்படும் ஹோட்டல்களில் சுகாதார சீர்கேடுகள் காணப்படுவதாக பிரயாணிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.
-
தனது அன்புத் தாயாருடன் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்
-நமது பிராந்தியச் செய்தியாளர் காத்தான்குடி: கடந்த வாரம் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள், காத்தான்குடிக்கு வருகை தந்திருந்தபோது, முதலில் தனது அருமைத் தாயாரை உடல் நலம் விசாரிக்கச் சென்றிருந்தார்.
-
மின்சார கட்டண உயர்வு இல்லை. எதிர் கட்சிகளின் போராட்டத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்கிறது- முஸ்லிம் மக்கள் கட்சி
– பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: 60 அலகுகளுக்குள் மின்சார கட்டண உயர்வு இல்லை என ஜனாதிபதி அறிவித்துள்ளமையானது எதிர் கட்சிகளின் போராட்டத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும் என முஸ்லிம் மக்கள் கட்சி தெரிவித்துள்ளது. இது பற்றி அக்கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளதாவது,
-
ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 3 பிரித்தானிய படையினியர் பலி! 6 பேர் காயம்!!
-MJ காபூல்: இன்று காலை ஆப்கானிஸ்தான், ஹெல்மான் எனும் இடத்தில் வீதிப்பாதுகாப்பில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டவந்த பிரித்தானிய படையினர் மூவர் வீதியில் மறைத்து வைக்கப்பட்ட குண்டு வெடித்ததால் பலியாகியுள்ளனர்.
-
தங்க நாணயங்கள் வாங்கும் முன்…
-OIT: சென்னை: கடந்த 15 நாள்களாக தங்கத்தின் விலை 15 முதல் 20 சதவீதம் அளவிற்கு குறைந்திருக்கிறது. அதனால் இந்தியாவில் உள்ள பல நகைக் கடைகள் மக்கள் வெள்ளத்தில் திக்குமுக்காடிக் கொண்டிருக்கின்றன. தங்கத்தை, தங்க நாணயங்கள் மற்றும் தங்கள் நகைகள் என்று மக்கள் அதிகமாக வாங்குகின்றனர். எனினும் தங்க நாணயங்களை வாங்கும் முன்பு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை:
-
வடக்கில் தமிழ் மக்களது காணிகளை இராணுவம் அபகரிப்பது தொடர்பாக வவுனியா மாவட்ட இன நல்லுறவு ஒன்றியம் மாவை சேனாதி ராஜாவுக்கு அனுப்பியுள்ள கடிதம்
– இர்ஷாத் றஹ்மத்துல்லா வவுனியா: வடக்கில் தமிழ் மக்களது காணிகளை இராணுவம் அபகரிப்பது தொடர்பாக சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டுவருவதற்கு அடுத்த கட்டமாக போராட்டம் நடத்தப் போவதாக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதி ராஜா அவர்களினால் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்து குறித்து வவுனியா மாவட்ட இன நல்லுறவு ஒன்றியமும் கருத்தினை வெளியிட்டு பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதி ராஜா அவர்களுக்கு அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.