Month: May 2013
-
என்னடா நடக்குது அங்கே ?
-MJ பேனா எடுத்தவனின் கைகைய முறிப்பதும் குரல் கொடுத்தவனின் வாழ்வை சிறைப்படுத்துவதும் ஜனநாயக சோசலிச இலங்கை நாட்டின் புதிய கொள்கைகள்!
-
‘காரணமின்றி 2 மணிநேரம் தடுத்துவைத்த காவல்துறை மன்னிப்பு கோரவேண்டும்’
கொழும்பு: இலங்கையில் யுத்தத்தின் பின்னர் கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள சமாதான சூழலை சீர்குலைக்கும் வேலைகளில் ஈடுபடவேண்டாம் என்று நாட்டின் தலைமை நீதியரசர் மொஹான் பீரிஸ் காவல்துறையை எச்சரித்துள்ளார். நிந்தவூரைச் சேர்ந்த முஸ்லிம் பிரஜை ஒருவர் தாக்கல் செய்திருந்த மனுவொன்றை பரிசீலித்தபோதே தலைமை நீதியரசர் இந்தக் கருத்தைக் கூறினார்.
-
தனது குடும்பத்தினர் கொண்டு சென்ற உணவையும், சிறைச்சாலை உணவையும் அஸாட் சாலி உண்பதற்கு மறுத்தார்!
கொழும்பில் அரசாங்கத்துக்கு அழுத்தம்! -AK77 கொழும்பு: நேற்று காலை குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, நாலாம் மாடிக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஸாத் சாலி, கடுமையான விசாரணைகளுக்கு முகம் கொடுத்த நிலையில், தனக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் அநீதியான விசாரணைக்கு எதிராக உண்ணாவிரத்தை மேற்கொண்டிருந்தார்.
-
வலது குறைந்தோரை மேம்படுத்தும் வலைப்பின்னல் கலந்துரையாடல்
– ரைஸ் மட்டக்களப்பு: கிழக்கு மாகாணத்திலுள்ள வலது குறைந்தோரை உள்ளடக்கிய மேம்பாட்டுக் கல்வி (Inclusive Education) வழங்குதல் மற்றும் வலது குறைந்தோரை இலக்குக் குழுக்களாக கொண்ட அமைப்புக்களுக்கிடையிலான வலைப்பின்னலை ஏற்படுத்தல் போன்ற நோக்கத்திற்காக கிழக்குமாகாணத்தில் உள்ள வலது குறைந்தோருக்கு சேவை வழங்கும் அமைப்புக்களுக்கிடையிலான கூட்டம் அண்மையில் மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் காரியாலயத்தில் இடம் பெற்றது.
-
‘மஹிந்த அரசின் அடாவடித்தனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகின்றது’: அஸாத் சாலியை விடுதலை செய்யுமாறு கொழும்பில் ஆர்ப்பாட்டம்!
– கொழும்பிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா கொழும்பு: கொழும்பு மாநகர சபையின் முன்னால் பிரதி மேயரும், தேசிய ஜக்கிய முன்னணியின் தலைவருமான ஆசாத் சாலியினை விடுதலை செய்யுமாறு கோறி இன்று வெள்ளிக் கிழமை ஜூம்ஆ தொழுகையினையடுத்து கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம் பெற்றது.
-
காலஞ் சென்ற சிரேஷ்ட ஊடகவியலாளர் (மர்ஹூம்) ஏ.எல்.பழுலுல்லாஹ்வின் புதல்வன்; அகில இலங்கை சமாதான நீதவானாக சத்தியப்பிரமானம்
– அபூ அய்யாஷ் காத்தான்குடி: காலஞ் சென்ற சிரேஷ்ட ஊடகவியலாளர் (மர்ஹூம்) ஏ.எல்.பழுலுல்லாஹ்வின் புதல்வன் அஷ்ஷெக் அல்ஹாபிழ் மௌலவி பழுலுல்லாஹ் பாஸி பஹ்ஜான் (அப்பாஸி) இன்று வெள்ளிக்கிழமை காலை மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரீ.எல்.மனாப் முன்னிலையில் அகில இலங்கை சமாதான நீதவானாக சத்தியப்பிரமானம் செய்து கொண்டார்.
-
குவாண்டனமோ சிறையில் தொடரும் போராட்டம்
-OIT நியூயோர்க்: அமெரிக்காவால் கியூபா அருகே குவாண்டனமோ சிறைச் சாலையில் அடைக்கப்பட்டிருக்கிற பயங்கரவாத சந்தேகநபர்களின் போராட்டம் உண்ணாநிலைப் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில் குவாண்டனமோ சிறைச் சாலைகளுக்கு சந்தேக நபர்களை அனுப்புவதைத் தவிர்க்கவே ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகளை ஒபாமா நிர்வாகம் படுகொலை செய்வதாக திடுக்கிடும் குற்றச்சாட்டை புஷ் ஆட்சிக்கால வழக்கறிஞர் ஜோன் பெல்லிங்கர் திடுக்கிடும் தகவலை வெளியிட்டிருக்கிறார்.
-
அசாத் சாலி அரசுக்கு சவாலான நபரல்ல!
கொழும்பு: அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தல், இனவாதம், இனங்களிடையே குழப்பம் ஏற்படுத்தல் அடங்கலான பல குற்றச்சாட்டுகளின் பேரிலே கொழும்பு மாநகர சபை முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத் தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலைய பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்ல தெரிவித்தார்.
-
தலை கொடுத்த தளபதியாம் ஆஸாத் சாலி
– மதியன்பன் பெறுப்புள்ள தலைமைகள் வாய்கள் பொத்தி பொந்துக்குள் எலிகளெனப் புகுந்த வேளை இறுக்கமுடன் சமூகத்திற்காய் குரல் எழுப்பி இனவாத சக்திகளின் முகத்தின் திரையை அறுத்தெடுத்த நம் தலைவன் ஆஸாத் சாலி
-
அஸாத் சாலியின் விடுதலைக்காக துஆ பிரார்த்தனையில் ஈடுபடுங்கள் – அகில இலங்கை உலமா கவுன்சில்
-பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் அஸாத் சாலியின் விடுதலைக்காக அனைத்து முஸ்லிம்களும் பொறுமையடன் துஆ பிரார்த்தனையில் ஈடுபடும் படி அகில இலங்கை உலமா கவுன்சில் கேட்டுக்கொண்டுள்ளது.
-
WWS தொழிலாளர் நலன்புரிச் சங்க புதிய நிருவாக தெரிவு
– ரைஸ் கிண்ணியா: தனியார் நிருவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் ஒன்றுகூடல் தொழிலாளர் தினமான நேற்று புதன்கிழமை கிண்ணியா பொதுநூலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது. உழைப்பிற்காக தன் வியர்வையை நிலத்தில் சிந்தி உழைக்கின்ற தொழிலாளர்களின் உரிமைகள் நசுக்கப்படுகின்ற போது அங்கு உரிமைக்கான போராட்டம் ஆரம்பமாகிறது. அந்த வகையில் தொழிலாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட உரிமைக்கான ஒன்றுகூடலின் போது புதிய நிருவாகத் தெரிவும் இடம்பெற்றது.
-
அதிகாரப் பகிர்வினூடாக மாகாண சபையைப் பலப்படுத்த வேண்டும்-மு.முதல்வர் சி.சந்திரகாந்தன்
– பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: இன, மத, மொழி பேதங்களுக்கப்பால் அதிகாரப் பகிர்வினூடாக மாகாண சபையைப் பலப்படுத்தி அதன் மூலம் சிறுபான்மையினத்தவரின் அரசியல் அதிகாரங்களும் கிடைக்க வழி ஏற்படுத்தப்படவேண்டும் என்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் குறிப்பிட்டார்.