Month: May 2013
-
கண்ணகிபுரத்தில் வெள்ள நீரை வெளியேற்ற விசேட திட்டம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் கண்ணகிபுரம் கிராமம் வருடாவருடம் வெள்ளத்தினால் அதிகம் பாதிக்கப்படுகின்ற ஒரு கிராமமாகும். இக் கிராமத்தில் மழை காலம் மற்றும் வெள்ள காலங்களில் கிராமங்களில் தேங்கி கிடக்கின்ற நீர் வடிந்தோடுவதற்கான இயற்கையான வடிகான்கள் இருந்தும் அது செயலற்றதன் விளைவாக அவ் வெள்ள நீர் வடிந்தோடாமல் கிராமத்திலே தேங்கி கிடப்பதனால் அக் கிராம மக்கள் பெரும் கஸ்டத்திற்கு முகம் கொடுத்து வந்திருக்கின்றார்கள்.
-
குடும்ப அரசாங்கத்தை ஒழித்துக்கட்ட திறைமறைவில் பாரிய முயற்சிகள்
– கொழும்பிலிருந்து அபூ இஸ்ஸத் கொழும்பு: நாடு தற்பொழுது இருக்கும் நிலையில் கொழும்பு அரசியலில் பாரிய மாற்றங்கள் நிகழும் வாய்ப்புக்கள் இருப்பதாக நம்பப்படுகிறது.
-
இலங்கை உல்லாசப் பயணத்துறை அபிவிருத்தி தொடர்பாக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் சார்ஜா உல்லாச அதிகார சபையின் பணிப்பாளர் அலி அல் நொமனுடன் இன்று பேச்சு வார்த்தை
– பழுலுல்லாஹ் பர்ஹான் சார்ஜா: அரேபியன் போக்குவர்த்து சுற்றுலாக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக டுபாய் சென்ற பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் சார்ஜா உல்லாச அதிகார சபையின் பணிப்பாளர் முஹம்மட் அலி அல் நொமன் மற்றும் பொதுப் பணிப்பாளர் காலித் ஜஸிம் அல் மித்பா ஆகியோரை நேரடியாக சந்தித்துக் கலந்துரையாடினார்.
-
அசாத் சாலியின் கைது ஒரு தனிநபருக்கு எதிரானதல்ல: இலங்கை முஸ்லிம்களுக்கான புகலிட முன்னணியின் அறிக்கை
கொழும்பு: பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஆசாத் சாலியின் கைதானது, ஒரு தனிமனிதனுக்கு எதிரானதல்ல. இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்தின் சுயாதீனமான அரசியல் குரலை அடக்கி நசுக்குவதற்கு இலங்கை அரசு இப்போது பயங்கரவாத தடைச் சட்டத்தினை ஆசாத் சாலி மீது மீது பிரயோகித்துள்ளது.
-
பாராளுமன்ற அமர்வுகள் விரைவில் நேரடி ஒளிபரப்பு
கொழும்பு: பாராளுமன்ற அமர்வுகளை நேரடியாக ஒளி, ஒலிபரப்பு செய்வதற்கான நடவடிக்கை விரைவில் ஆரம்பிக்கப்படும். இங்கு பேசப்படும் சகல விடயங்களையும் நேரடியாகக் காணவும் கேட்கவும் மக்களுக்கு உரிமையுள்ளது. இதனூடாக எம்.பி.க்கள் நடந்து கொள்ளும் விதம் குறித்து மக்களுக்கு அறிய முடியுமென சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
-
அஸாத் சாலியின் மகள் ஆமினாவின் அறிவிப்பும், ஜூனியர் விகடனின் குற்றச்சாட்டுக்களும்!
கொழும்பு: பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள அசாத் சாலி உண்ணாநோன்பைக் கைவிட்டுவிட்டதாக அரசாங்கம் கூறுவதை அவரது குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.
-
காத்தான்குடி சன்றைஸ் விளையாட்டுக்கழக வீரருக்கு ஒரு வருடகாலத் தடை!
– விசேட நிருபர் காத்தான்குடி: காத்தான்குடி விக்டரி விளையாட்டுக் கழகமும், காத்தான்குடி பரீட் பவுண்டேஸனும் இணைந்து கடந்த வாரம் விக்டரி மைதானத்தில் மின்னொளியில், விக்டரி விளையாட்டுக் கழகத்தின் ஸ்தாபகர் மர்ஹூம் மஹ்ரூப் ஹாஜியார் வெற்றிக்கிண்ண உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி ஒன்றினை மிக விமர்சையாக நடாத்தியது.
-
முஸ்லிம்களுக்கு இழைத்ததை தவறென்று தமிழ்த் தரப்பு ஏற்க வேண்டும்: சுமந்திரன்
மட்டக்களப்பு: இலங்கையின் வடமாகாணத்திலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றி இன சுத்திகரிப்பு செய்தது தவறு என்பதை ஏற்றுக்கொள்ளும் பட்சத்திலேயே தமிழ்த் தரப்பு மற்றவர்களிடம் நியாயம் கோர முடியும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
-
டுபாய் போக்குவரத்து சுற்றுலாக்கூடக்கண்காட்சியின் இலங்கைக்கான காட்சிக்கூடத்தினைப் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இன்று திறந்துவைத்தார்
– பழுலுல்லாஹ் பர்ஹான் டுபாய்: அரேபிய நாடுகளுக்கும் ஆசிய நாடுகளுக்கும் இடையில் இடம் பெறுகின்ற போக்குவரத்து சுற்றுலாக் கூட்டம் வருடம் தோறும். இடம்பெற்றுவருகின்றது. இம்முறை டுபாய் நாட்டில் இன்றுமுதல் தெடர்ந்து மூன்று நாட்கள் இடம்பெற இருக்கும் இக்கூட்டத்தில் விசேட கண்காட்சி ஒன்றும் இடம்பெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
-
குடும்ப வறுமையால் பணிப் பெண்ணாக வெளிநாடு செல்ல முயற்சித்த முஸ்லிம் பெண்ணுக்கு –கா-குடி-164 ஏ மகளீர் சங்கம் தொழில் உதவி
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கீச்சம் பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த 24 வயது முஸ்லிம் பெண்னொருவர் குடும்ப வறுமையால் பணிப் பெண்ணாக வெளிநாடு செல்ல முயற்சித்துள்ளார்.
-
மோசமான உடல்நிலை காரணமாக அஸாட் சாலி மீண்டும் வைத்தியசாலையில்! மக்கள் அச்சம்!!
-AK-77 கொழும்பு: கடந்தவாரம் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் தனது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்ட முன்னாள் கொழும்பு பிரதி மேயர் அஸாட் சாலி, மோசமான உடல்நலக்குறைவின் காரணமாக மீண்டும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.
-
முள்ளியவளையில் ஏற்பட்டுள்ள காணிப்பிரச்சினைக்கு எந்தவொரு சமூகத்திற்கும் பாதிப்பில்லாத வகையில் சுமூகமாகவும் இணக்கமாகவும் தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்: ரவூப் ஹக்கீம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் முல்லைத்தீவு: முள்ளியவளையில் ஏற்பட்டுள்ள காணிப்பிரச்சினைக்கு எந்தவொரு சமூகத்திற்கும் பாதிப்பில்லாத வகையில் சுமூகமாகவும் இணக்கமாகவும் தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நீதியமைச்சரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.