Month: May 2013
-
ஒருமுறை ஹஜ் யாத்திரை செய்தவருக்கு 10 வருடங்களின் பின்பே மீண்டும் அனுமதி!
காத்தான்குடி: இலங்கையிலிருந்து ஏற்கனவே ஹஜ்ஜுக்கு சென்ற ஒருவர் பத்து வருடங்களுக்கு பின்பே அவர் மீண்டும் ஹஜ்ஜுக்கு செல்ல முடியுமென முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எச்.எம். சமீல் நளீமி தெரிவித்தார்.
-
‘லண்டனில் இருந்து கோயிலுக்கு வந்தவர் இலங்கையில் கைது’
லண்டன்: இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் திங்களன்று நடைபெற்ற வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக லண்டனில் இருந்து வருகை தந்திருந்த குடும்பஸ்தர் ஒருவர் பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
-
மீன்பிடிக்க ஆற்றிற்குச் சென்ற மீனவரை காணவில்லை-சுழற்காற்றினால் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் மக்கள் யூகம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடியில் ஆற்றில் இன்று வியாழக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவரைக் காணவில்லையென காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.
-
கொழும்பில் தொடர்ந்தும் மூடப்பட்ட நிலையில் இறைச்சிக்கடைகள்
-AF 47 கொழும்பு: வெசாக் விடுமுறையை முன்னிட்டு மூடப்பட்டிருந்த கொழும்பு நகரிலுள்ள அதிகமான இறைச்சிக்கடைகள் இன்றும் திறக்கப்படாத நிலையில் காணப்பட்டதாக கொழும்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
சீனா- இலங்கை ஒப்பந்தங்கள் கைச்சாத்து!
பீஜிங்: தற்போது நடைமுறையில் உள்ள அபிவிருத்தித் திட்டங்களுக்கு மேலும் நிதி வழங்கும் முகமாகவும் புதிய அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பிக்கும் நோக்கிலும் பல ஒப்பந்தங்கள் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டன.
-
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் பொதுக்கூட்டம் நாளை
– PMGG ஊடகப் பிரிவு காத்தான்குடி: நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் மாதாந்தம் தொடர்ச்சியாக நடாத்திவரும் மக்கள் சந்திப்பு தொடர்பில் இந்த மாதத்திற்கான மாதாந்த மக்கள் சந்திப்பும் பொதுக்கூட்டமும் நாளை வெள்ளிக்கிழமை (31.05.2013) மாலை 06.45 மணிக்கு கடற்கரை வீதி பொதுமைதான முன்றலில் நடைபெறவுள்ளது.
-
செவ்வாய் கிரகத்தில் எலி புரளி!
– OIT டோக்கியோ: செவ்வாய் கிரகத்தில் எலி போன்ற ஒரு உயிரினம் இருப்பதாக ஜப்பானைச் சேர்ந்த இணையத்தளம் ஒன்று வெளியிட்ட படத்தால் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செவ்வாயில் மனிதர்கள் வாழ்வது சாத்தியமா… ஏற்கெனவே உயிரினங்கள் வாழ்கின்றனவா என்பது குறித்த ஆராய்ச்சி பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.
-
ஜயலத் ஜெயவர்தன எம்.பி. மரணம்
கொழும்பு: முன்னாள் அமைச்சரும், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளருமான டொக்டர் ஜயலத் ஜயவர்தன இன்று காலமானார். இருதய நோயினால் பாதிக்கப்பட்டிருந்த டொக்டர் ஜயலத் ஜயவர்தன சில காலமாக சிகிச்சை பெற்று வந்தார்.
-
பொதுபலசேனாவை ‘மெத் செவன’ மத்திய நிலையத்திலிருந்து அகலுமாறு நீதிமன்றம் உத்தரவு!
காலி: சிங்கள பௌத்த தேரர்களைக் கொண்ட இனவாத அமைப்பான பொதுபல சேனாவினால் காலி – வங்சாவல பகுதியில் நடத்திச் செல்லப்பட்ட ‘மெத் செவன’ எனப்படும் சமயரீதியான மத்திய நிலையத்திலிருந்து அகன்று செல்லுமாறு நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது.
-
காத்தான்குடி மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்க 83வது பொதுச் சபைக் கூட்டம்
– MTM. ஷரீக் ஆசிரியர் 2013.05.30 இலவசக் கல்வியின் தந்தை CWW கன்னங்கரா அவர்களினால் கிழக்கிலங்கையில் முஸ்லீம்களுக்காக உருவாக்கப்பட்ட மத்திய கல்லூரிகளில் ஒன்றான எமது காத்தான்குடி மத்திய கல்லூரியின் 83வது வருட பழைய மாணவர் சங்க பொதுச் சபைக் கூட்டம் கீழ்வரும் விபரப்படி நடைபெறவுள்ளதால் அனைத்து பழைய மாணவர்களையும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
-
நல்லாட்சிக்கான மக்கள் இயக்க உறுப்பினர்களின் கவனஈர்ப்புப் போராட்டம்…
விசேட நிருபர். காத்தான்குடி: காத்தான்குடி நகரசபையில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் சார்பாக (சுயேட்சைக்குழு-01) பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள், சூறாசபை உறுப்பினர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கவனஈர்ப்புப் போராட்டம் ஒன்றினை இன்று காலை 8.00 மணிக்கு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் இஸ்லாமிய கலாசார மண்டபத்திற்கு முன்னால் முன்னெடுத்தனர்.
-
இலங்கையின் முதலாவது தொடர்பாடல் செய்மதியை சீனா வழங்கும்!
பீஜிங்: இலங்கைக்கும் அதன் அயல் நாடுகளுக்கும் தொலைத்தொடர்பு மற்றும் ஒலி- ஒளிபரப்புச் சேவைகளை வழங்கும் முதலாவது தொடர்பாடல் செய்மதியை இலங்கைக்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் நேற்று சீனாவில் கைச்சாத்தடப்பட்டது.