நான் உப்பு விக்க போனால் மழை கொட்டோ கொட்டுனு கொட்டுது…

– அபூ அஸ்ஜத்

politics[1]‘நான் உப்பு விக்க போனால்  மழை கொட்டோ கொட்டுனு கொட்டுது…நான் மாவு விக்கப் போனால் புயல் காற்றாக வீசுது…’ இது பழமொழியல்ல திரையுலகப் பாடலின் வரிகள். ஏன் இந்த வரிகள் என்று வாசகர்களாகிய நீங்கள் சிந்திக்கலாம், எல்லாவற்றுக்கும் பதிலும் அதில் உண்டு….வடமாகாண சபை தேர்தல் பேச்சுக்கள் கிளம்பியது தான் மட்டும், வழமைப் போல் அரசியல் கட்சிகள் கச்சைகட்டிக் கொண்டு தமது கட்சிக்கான வேட்பாளர்களை வலை விரித்து தேடும் பணியினை ஆரம்பித்துவிட்டனர்.

வடக்கில் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்பதில் அதிக பட்ச முஸ்லிம்களின் வாக்குகளை பெற்றுக் கொண்ட கட்சி என்று தமக்கு தானே முகவரி சூட்டிக் கொள்ளும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம்,  இதேர்தல் நடத்துவதற்கான சூழல் இன்னும் வடக்கில் கனிந்து வரவில்லை என்று வடக்கில் இரு பாராளுமன்றப் பிரதி நிதித்துவத்தை பெற்றுக் கொண்டதுன், பிரதேச சபைகளின் ஆட்சியினையும் அதிகரித்த முஸ்லிம் தமிழ் சிங்கள ஆளும் எதிரணி உறுப்பினர்களையும் கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸூம் ஏட்டிக் போட்டியாக வெளியிட்டுவரும் கருத்துக்களும் உள்வாங்கப்பட வேண்டியது காலத்தின் தேவையாகும்.

கடந்த காலங்களில் நடை பெற்ற பல தேர்தல்களின் முடிவுகள் பற்றி வாக்காளர்கள் நன்கு அறிந்து கொண்டுள்ளதையும் இந்த கட்சிகள் நன்கு அவதானிக்க வேண்டியதும் முக்கியமாகும். தடி எடுத்தவர்கள் எல்லாம் வேட்டைக்காரர்கள் என்ற பழமொழி இன்று பொய்யா மொழியாக மாறிவிட்ட நிலையில், வடமாகாண சபை தேர்தலுக்கான அறிவிப்பு வெளிவர இருக்கின்றது. வட மாகாணம் என்பது அதிகப்படியான தமிழ் மக்களின் வாக்குகளை கொண்ட மாகாணமாகும். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய ஜந்து மாவட்டங்களும் இம்மாகாணத்தில் உள்ளவையாகும்.

கடந்த 20 வருடங்களுக்கு மேலாக இம்மாவட்டத்தில் நிலவிய தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆட்சி காரணமாக ஜனநாயக ரீதியான தேர்தலு்க்கு இம் மாவட்ட மக்கள் முகம் கொடுக்கவில்லை.அதே போல் இங்குள்ள நிலையினால் பெரும் எண்ணிக்கையிலான தமிழ்இ, முஸ்லிம், சிங்கள மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டிருந்த நிலையினையும் காணலாம்.அதன் பிறகு இடம் தேர்தல்களில் கொத்தணி வாக்கு சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு இம் மாவட்ட மக்கள் வாழும் பிரதேசங்களில் வாக்களிப்புக்கள் இடம் பெற்று வாக்குகள் அம்மாவட்டங்களில் எண்ணப்பட்டு மொத்த இலக்கங்கள் உரிய மாவட்ட செயலகங்களுக்கு அனுபப்பட்ட பின்னர் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்த நிலையினை மாற்றி ஒரே தேசத்தில் எல்லோரும் எல்லா உரிமைகளையும் சமமாக அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கத்மதினால் சமாதானம் ஏற்பட்டுவிட்டது.இதன் பின்னணில் வட மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற கோஷம், உள்ளுரிலும், சர்வதேசத்திலும் உரத்த குரலில் ஒலிக்கப்படுகின்றது.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முக்கிய பெரும் பான்மை கட்சிகள் இந்த தேர்தல் நடத்தப்பட்டால் மீண்டும் புலிகளின் ஆட்சி நடக்கும் என்பதை தெளிவாக அரசாங்கத்துக்கு எடுத்துரைததுள்ள நிலையில், அமைச்சர் ரவூப் ஹக்கீமும் தேர்தல் நடத்தப்பட  வேண்டும், இந்த தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸின் பார்வை அதிகப் படியான முஸ்லிம் உறுப்பினர்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற தலைகளை என்னும் கணிப்பாக அவரது பேச்சுக்கள் அமைந்துள்ளது.

வடமாகாணத்தில் இருந்து பயங்கரவாதம் ஒழிப்பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் பல் வேலைத்திட்டங்களை முன்னெடுத்த போது அதற்கு எதிராக பேசியவரில் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் பங்கும் நிறையவே உண்டு. அன்று மன்னார், வவுனியா உள்ளிட்ட பிரதேசங்களுக்கு செல்ல வேண்டும் எனில் மதவாச்சி சோதனை சாவடியில் இருந்து அரச பாதுகாப்பு தரப்பினரிடத்தில் அனுமதி பெற்று தான் செல்ல ணேவ்டிய நிலை காணப்பட்டது.இதற்கு காரணம்பயங்கரவாதிகளுடன் சிலர் கொண்டிருந்த தொடர்பு. அவர்கள் மூலம் ஏனைய பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் காரணமாகும்.தற்போதைய அமைச்சரும், அன்றைய பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்த ரவூப் ஹக்கீம் அவர்கள் கூட மதவாச்சி சோதனை சாவடியில் தவம் கிடந்த வரலாறும் தெரியாததொன்றல்ல…

இந்த நிலையில் மஹிந்த அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும், தொலைத்துவிட வேண்டும், ரணில் விக்ரமசிங்க ஆட்சியில் இருக்க வேண்டுமம் என்று பாடுபட்ட, திட்டம் தீட்டிய, அதில் தோல்வி கண்ட ரவூப் ஹக்கீம், முன்னால் இரானுவ தளபதி சரத் பொன்சேகாவை அரசியலுக்கு கொண்டுவந்து அவரை ஜனாதிபதியாக  ஆக்க வழங்கிய ஒததழைப்புக்களும், ஆலோசனைகளும் எண்ணிலடங்காதவை.இதம்புள்ள பள்ளிவாசல் விடயத்தை வைத்து கிழக்கு மாகாண சபை தேர்தலில்  முஸ்லிம் மக்களது வாக்குகளில் கணிசமான அளவினை பெற்றுக் கொண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தேர்தல் முடிவில் தமது அமைச்சுப் பதவிக்கும், மாகாணத்தின் அமைச்சுப் பதவிகளுக்கும் முஸ்லிம்களின் வாக்குகளை அடைமானம் வைத்து இன்று ஏமாந்த சோளைக்கிளியாக எதையம் செய்ய முடியாமல் கைசேதப்படும் துரதிஷ்டமான நிலையினை காணமுடிகின்றது. சரியான நேரத்தில் பிழையான முடிவுகளை எடுப்பது தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு என்பதை புதிதாக சொல்லி தெரிய வேண்டிய அவசியமில்லை.

இவ்வாராண பின்னணியினை வைத்துக் கொண்டு, இன்று வடமாகாண சபை தேர்தலில் போட்டியிட விரும்பும்  வேட்பாளர்கள் விண்ணப்பியுங்கள் என்று பஞ்சா பக்கிரி நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிவையினை காணமுடிகின்றது.. அதிகப்படியான முஸ்லிம்களின் வாக்குகளை பெற்ற கட்சி என்று பிதற்றிக் கொள்ளும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அத்திவாரமும் உறுதியானதாக இல்லை.உட்கட்டமைப்பு உறுப்பினர்களும் உறுதியானவர்கள் இல்லை எனவே வெளியில் உள்ளவர்கள் விண்ணப்பியுங்கள் என்று தலைவர் ஹக்கீம் தெரிவித்துள்ளது.எவ்வளவு துாரம் முஸ்லிம் பிரதிநிதிகளை அதிகரித்துக் கொள்ளும் அரசியல் சாணக்கியன் என்ற கேள்வி எழத்தான் செய்கின்றது.பறிக்கப்பட்ட உரிமைகளுக்காக குறிப்பாக முஸ்லிம்களுக்காக குரல் கொடுப்பவரகள் என்று அடையாளப்படுத்தும் இந்த கட்சி இது வரையில் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு செய்துள்ளதை பார்க்க வேண்டும்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவராக அன்று இருந்த மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் அல்-ஹாஜ்.எஸ்.எஸ்.எம்.அபூபக்கர், டாக்டர்.இல்யாஸ்இமர்ஹூம் நுர்தீன் மசூர், றிசாத் பதியுதீன் போன்றவர்களை உருவாக்கினார்.ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் தலைவராக வந்த ரவூப் ஹக்கீம் அவர்கள் இவர்களை இழந்துள்ளார். இதறகு காரணம் அரசியல் முதுமை இன்மை என்பதை தான் காட்டுகின்றன. கடந்த தேர்தலில் போட்டியிட்ட நுர்தீன் மசூர் அவர்கள் எதிர்கட்சியில் வெற்றி பெற்று மூன்றாவது இடத்தை வன்னி மாவட்டத்தில் பெற்று பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானார்.ஆளும் கட்சியில் போட்டியிட்ட றிசாத் பதியுதீன், ஹூனைஸ் பாருக் ஆகியோர் வெற்றி பெற்று பாராளுமன்றம் வந்தனர்.

வடமாகாண முஸ்லிம்களின் விடயத்தில் இவர்கள் மூவரும் ஒத்த கருத்தை கொண்டு செயற்பட்டுவந்த நிலையில் நுார்தீன் மசூர் அவர்கள் மரணமானார் (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்) இந்த இழப்பு என்பது வன்னி மக்களுக்கு பெரும் இழப்பாகும். அத்தோடு வடமாகாண முஸ்லிம்கள் விடயத்தில் நெருக்கத்துடன் செயற்படும் அமைச்சர் றிசாத்இஹூனைஸ் எம்.பி ஆகியோருக்கு எதிர்பாராத பின்னடைவை ஏற்படுத்தியது.மர்ஹூிம் மசூர் அவர்களின் இடை வெளியினை நிரப்ப வந்தவர் தான் முத்தலி பாவா பாருக்.இவரும் ஒரு சட்டத்தரணி மக்கள் பிரச்சினைகளை விட தனது சட்டத்தொழிலுக்கு முன்னுரிமையளித்து செயற்படும் ஒருவர்.

வரலாற்றில் வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றத்தின் பின்னரான தற்போதைய மீள்குடியேற்றம் என்பன வடமாகாண சபை தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தப் போகும் ஒரு சாதானமாக இன்று மாறியுள்ளது.இடம் பெயர்ந்து குறுகிய காலம் முகாம்களில் இருந்த தமிழ் மக்கள் அவர்களது பிரதேசங்களில் வாழக் கூடிய பலவசதிகளுடன் மீ்ள்குடியமர்த்தப்பட்டுள்ளார்கள் என்பதை எல்லோரும் இன்று ஏற்றுக் கொண்டுள்ள உண்மையாகும்.ஆனால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் நிலை கவலைக்கிடமான நிலையில் உள்ளதை இன்று வெளிவரும் ஊடக அறிக்கைகள் மூலம் காணமுடிகின்றது.

இன்னும் அகதி முகாம்களில் வாழும் முஸ்லிம்களை வைத்து கொண்டு வடமாகாண சபையில் அதிகப்பாடியான முஸ்லிம் உறுப்பினர்களை பெறப் போவதாகவும் இந்த பிரதி நிதித்துவத்தை பெற்றுக்  கொள்ள எவருடனும் கூட்டு போவதாக முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துவரும் கருத்து நகைப்புக்கிடமானது.வன்னி மாவட்டத்தில் இருந்து வடமாகாண சபைக்கு  வாக்குகளின் அடிப்படையில் தெரிவாகும் எண்ணிக்கையின் விகிதாசாரம், அங்கு வாழும், பதியப்படும் வாக்களார்களின் எண்ணிக்கையில் தான் தங்கியுள்ளது.அதற்கான தேர்தல் திருத்தங்கள் அங்கீகரிக்கப்பட்ட  போதும், அந்த பதிவில் முஸ்லிம்களின் வகிப்பகம் சரியான முறையில் அமைந்துள்ளதா என்பதை முதலில் பாரக்காமல் உப்புச் சப்பில்லாத வழமையான தேர்தல் சித்து  விளையாட்டினை விளையாட ஆரம்பி்த்துள்ளதன் பின்னணியில் இருக்கும் சக்திகள் குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.

எமது முஸ்லிம்களுக்கு எங்கு அநியாயாம் நடந்தாலும் பரவாயில்லைஇஈட்சியில் இருக்கும் அரசாங்கத்தில் இருந்து ஒரு போதும் விலகப் போவதில்லை என்று உறுதிப்பட அறிக்கைவிட்டுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் வடமாகாண சபை தேர்தலில் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடப் போவதாகத் தான் அவர்களின் நெருக்கமானவர்களிடம் தெரிவித்துள்ளார்.கிழக்கு மாகாணத்தை போன்று வடக்கில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து  போட்டியிடும் எனில் படுதோல்வியினை அடையும் என்பதை அவர் நன்கறிந்ததன் விளைவாகத்தான் எந்தக் கட்சியுடனும் கூட்டு சேர்ந்து போட்டியிடத் தயார் என்று அறிவித்துள்ளதை பார்க்க முடிகின்றது.

தேர்தல் காலம் வரும் போது கினாப்புவிட்டு பார்க்கும் சரித்திரத்தை கொண்ட முஸ்லிம் காங்கிரஸ் இம்முறையும் வடக்கில் அதனை செய்வதற்காகத்தான தேர்தல் திகதி அறிவிக்க முன்னர் இந்த பிரசாரத்தை ஆரம்பித்துள்ளது.வடமாகாணத்தை பொருத்த வரை தமிழ் தேசிய கூட்டமைப்பு தனித்தே போட்டியிடும் இதற்கு ஆரவாக ஜக்கிய தேசிய கட்சி நிற்கும் என்பதை அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு சென்று திரும்பியுள்ள ரணில் விக்ரமசிங்க அவர்களின் விஜயத்தின் வெளிப்பட்ட உண்மையாகும்.

குறிப்பாக வடமாகாணத்தில் தேர்தல் தற்போது நடத்தப்படக் கூடாது, அதற்கு பிரதனா காரணம் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் உரிய முறையில் இடம் பெறவில்லை என்பதை முன் வைத்து அமைச்சர் றிசாத் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் அண்மையில் கருத்தொன்றை வெளியிட்டுள்ளதை இங்கு குறிப்பிட  வேண்டியுள்ளது.அமைச்சர் றிசாத் பதியுதீன் இது குறித்து ஜனாதிபதி மற்றும் முக்கியஸ்தர்களிடத்தில் இவ்விடயம் குறித்து பேசியுள்ள நிலையில், வடக்கில் வாழந்த முஸ்லிம்களின் வாக்குகள் கூட அந்த மாவட்டத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ள தகவல்களையும் கட்சியின் தேசிய அமைப்பாளர் வெளியிட்டிரந்த அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கை பொறுத்த வரை அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஒரு செல்லாக் காசு என்பதை அரசு அறியும்.அதே வேளை அமைச்சர் றிசாதின் ஒத்துழைப்பு அரசுக்கு அவசியம் என்பதை மேலிடம் தெளிவாக புரிந்து வைத்துள்ளது.ஆகையால் வடக்கு தேர்தல் குறித்துத அசைமச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துவரும் கருத்துக்களுடன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உடன்பட்டுள்ளது என்று எவரும் கருதுவார்கள் என்றால் அது பிழையான எடுகோலாகும்.பொதுபலசேனா இன்று முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்டுவரும் விதமும், வடக்கில் முஸ்லிம் அதிகார அலகு ஒன்றை அமைச்சர் றிசாத் ஏற்படுத்த முயற்சிப்பதாக தெரிவித்து அறிக்கையினை வெளியிட்டதன் பிறகுஇதேர்தல் வடக்கில் நடத்தப்பட்டால் மீண்டும் புலிகளின் ஆட்சிக்கு வழி ஏற்படும் என்று அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளமையினையும், சேர்த்து அமைச்சர் றிசாத் தலைமையிலான அ.இ.ம.காங்கிரஸ் கட்சியியின் உடன்பாட்டை பெறலாம் என்று முயற்சிப்பது வெறும் பகற் கனவு என்பதாகவே அமையும் என்பதை கட்சியின் செயலாளர் நாயகம் ஹமீட் கூறியுள்ளார்.

எது எவ்வாறாக இருந்தாலும் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் முதலில் தமது மண்ணில் மீள்குடியேற வேண்டும்.அதற்கு எதிராகவுள்ள பாதுகாப்பு மற்றும் அரச உயர் இனவாத சிந்தனை கொண்ட சில அதிகாரிகளின் மெத்தனப் போக்குகள் அகற்றப்பட வேண்டும்இவடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களில் மீள தமது மாவட்டத்துக்கு திரும்பியுள்ள 26000 க்கும் மேற்பட்ட மக்களது வாக்குகள் உரிய முறையில் பதிவு செய்யப்பட வேண்டும் என்பன போன்ற முக்கிய அம்சங்களை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் அவற்றுக்கு பதிலிருக்கமால் தேர்தலை நடத்தும் பட்சத்தில் முஸ்லிம்களின் வாக்குகள் அதன் பிரயோகம் என்பன தீர்க்கமான முடிவாக மாறலாம் என்ற எழுந்தமான கருத்துக்களும்  தற்போது மேலெழுந்துள்ளன.தேர்தல் திகதி வெளிவருமா ? அல்லது தேர்தல் திகதிக்காக நாம் காத்திருப்போமா ?
தொடரும்…….

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s