லண்டனில் தாக்குதல் – ஒருவர் பலி

WOOLWICH COMMUNITY PAGE ON FB[1]லண்டன்: லண்டனில் நடைபெற்ற ஒரு பாரதூர தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு தேசிய அவசரகால குழுக் கூட்டத்தை பிரிட்டிஷ் அரசு கூட்டியுள்ளது. லண்டனில் நடந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் இருவர் காயமடைந்துள்ள நிலையில் கோப்ரா என்று அழைக்கப்படும் அவசரக் குழுவின் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

இதை சந்தேகத்துக்குரிய இஸ்லாமிய பயங்கரவாதத் தாக்குதலாக காவல்துறை பார்ப்பதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பயங்கரவாத தாக்குதல்

இது ஒரு பயங்கரவாத தாக்குதல் என்பதற்கான வலுவான சான்றுகள் இருப்பதாக கூறியுள்ள பிரிட்டிஷ் பிரதமர் இத் தாக்குதல் தனக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

WOOLWICH COMMUNITY PAGE ON FB[1]

வாள் போன்ற ஒரு ஆயுதத்தைப் பயன்படுத்திய இருவர் மற்றொருவரை தாக்கியதாக நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். அதன் பிறகு தாக்குதலுக்குள்ளானவரின் உடலை அருகில் இருக்கும் இராணவ முகாமுக்கருகே வீசிச் சென்றனர். கொல்லப்பட்டவர் ஒரு படை சிப்பாய் என்று உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘அல்லாஹூ அக்பர்’ என்று கத்தியபடியே இரு நபர்கள் தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது. தாக்குதல் வீடியோ பதிவு செய்யப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் தாக்குதல் நடத்திய இருவரையும் சுட்டுள்ளனர். அந்த இருவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். தென் கிழக்கு லண்டனில் உள்ள உலிச் என்ற பகுதியில் இந்த தாக்கதல் சம்பவம் நடந்துள்ளது.

பிரித்தாணிய பிரதமர் பிரான்ஸில் இருந்து அவசரமாக நாடு திரும்புகிறார். மேலதிக விசாரணைகள் துரிதமாக இடம்பெறுகின்றன.

BBC

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s