காத்தான்குடி: காத்தான்குடியின் மூத்த கழகங்களுள் ஒன்றாகவும் முன்னணிக் கழகங்களுள் ஒன்றாகவும் திகழும் சன்றைஸ் விளையாட்டுக்கழகத்தின் 2013ம் வருடத்துக்கான புதிய நிர்வாகசபைத் தெரிவு அண்மையில் காத்தான்குடி கடற்கரையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சன்றைஸ் விளையாட்டுக்கழகத்தின் மூத்த உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் மற்றும் நடப்பு வீரர்களும், கலந்து சிறப்பித்தனர்.
இவ் வருடாந்த பொதுச்சபைக் கூட்டத்தில் பல புதிய தெரிவுகள் இடம்பெற்றன. அதன்படி,
தலைவர்: என்.எம். ஸாஹிர்
செயலாளர்: எம். இன்ஸாட்
பொறுளாளர்: எம்.ஐ.எம். பைஸர்
முகாமையாளர்: டீன் பைரூஸ்
ஆகியோர் ஏகமனதாக சபையோரால் தெரிவு செய்யப்பட்டனர்.
மிகச்சிறப்பாக இடம்பெற்ற இவ்வருடாந்த பொதுச்சபைக் கூட்டத்தில் இராப்போசன விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், காத்தான்குடி கடாபி ஹோட்டல் உரிமையாளர் எம். அஸ்மி என்பவரால் இக்கழகத்துக்காக சீறுடைகளும் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.