குவைத் K-Tic நடாத்தும் மாபெரும் பட்டிமன்றம்

kticபேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம..

அறிஞர்களும், பேச்சாளர்களும் மட்டுமே பங்கேற்கும் பட்டிமன்ற நிகழ்வுகளுக்கு மாற்றமாக பொதுமக்கள் மட்டுமே பங்கேற்று தங்களின் எண்ணங்களையும், கருத்துக்களையும் பகிர்ந்து கொள்வதற்காக குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic), இன்ஷா அல்லாஹ்… எதிர்வரும் மே மாதம் நடுப்பகுதியில் “சிறப்பு பட்டிமன்றம்” நிகழ்ச்சியை குவைத்தில் முதல் முறையாக ஏற்பாடு செய்துள்ளது.
நாள்: 17.05.2013 வெள்ளிக்கிழமை – ஹிஜ்ரீ 1434 ரஜBப் பிறை 7
நேரம்: இரவு 7:30 மணி முதல் இஷா தொழுகையைத் தொடர்ந்து இரவு 9:30 மணி வரை…
இடம்: K-Tic தமிழ் ஜும்ஆ ஃகுத்பா பள்ளிவாசல்,
அல் மிக்தாத் பின் அம்ரூ (ரழி) பள்ளிவாசல், 
ஃபர்வானிய்யா கிரவுன் பிளாஸா ஹோட்டல் எதிரில், ஏர்போர்ட் (55ம் எண்) சாலையும், 6வது சுற்றுச் சாலையும் இணையும் பாலத்திற்கு அருகில்,
ஃகைத்தான், குவைத்.

தலைப்புவெளிநாட்டு வாழ்க்கையில்… நாம் பெற்றது அதிகமா? இழந்தது அதிகமா?

பங்கேற்போர்: குவைத் வாழ் தமிழ் முஸ்லிம் மக்கள்
பட்டிமன்றத்தில் பங்கேற்பதற்கான விதிமுறைகள்:
  • குவைத் வாழ் தமிழ் முஸ்லிம் ஆண்கள் மட்டும் கலந்து கொள்ளலாம்.
  • வயது வரம்பு கிடையாது.
  • பெயர் & தலைப்பு போன்றவற்றை முன்பதிவு செய்ய வேண்டும்.
  • வாரந்தோறும் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 19 & 26 மற்றும் மே 3 & 10) நடைபெறும் பட்டிமன்ற பயிலரங்கில் கலந்து கொள்ள வேண்டும்.
  • 5 முதல் 8 நிமிடங்கள் வரை உரையாற்றலாம்.
  • தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே பட்டிமன்றத்தில் உரையாற்ற அனுமதி வழங்கப்படும். சிறுமிகளுக்கு விதிவிலக்கு உண்டு.
  • நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.
  • முன்பதிவு செய்யுமிடம்: K-Tic தமிழ் ஃகுத்பா பள்ளிவாசல், ஃகைத்தான், குவைத்.
  • முன்பதிவு செய்ய கடைசி நாள் : 03.05.2013 வெள்ளிக்கிழமை ஜும்ஆ வரை… இன்ஷா அல்லாஹ்…
குறிப்பு: பெண்களுக்கு தனியிட வசதியும், அனைவருக்கும் இரவு உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த அரிய வாய்ப்பை குவைத் வாழ் தமிழ் இஸ்லாமிய சகோதரர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
அனைவரும் குடும்பத்துடன் வருக…! அன்பர்களையும் அழைத்து வருக…!! அல்லாஹ்வின் அளவிலா அருள்மழையில் நனைக….!!!
 
நன்றி! வஸ்ஸலாம்.
 

 

தகவல் தொடர்பு & ஊடகப் பிரிவு,

 

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic),

 

குவைத்.

 

துரித சேவை அலைபேசி: (+965) 97 87 24 82

 

மின்னஞ்சல்: q8_tic@yahoo.com / ktic.kuwait@gmail.com

 

இணையதளம்: www.k-tic.com

 

யாஹூ குழுமம்: http://groups.yahoo.com/group/K-Tic-group

 

கூகுள் குழுமம்: http://groups.google.com/group/q8tic
—————————-
வாரந்தோறும் K-Tic தமிழ் பள்ளிவாசலில்….
 
ஜும்ஆத் தொழுகைக்கு முன் காலை 10 மணி முதல்…
 
1. திருக்குர்ஆன் பயிற்சி வகுப்பு: திருக்குர்ஆனை முறையாக ஓதுவதற்கும், மனனம் செய்வதற்கும் ஆண்களுக்கும், சிறுவர், சிறுமியருக்கும் இலவசமாக நடத்தப்படும் வாராந்திர திருக்குர்ஆன் பயிற்சி வகுப்பு இது.
 
2. மார்க்க விளக்க வகுப்பு: வணக்க வழிபாடுகள், கொடுக்கல் வாங்கல்கள், வாழ்வியல் நடைமுறைகள், பிரார்த்தனை(துஆக்)கள் மற்றும் இறைநினைவு(திக்ரு)கள் ஆகியவற்றை தெளிவான முறையில் கற்றுக் கொடுக்கும் கல்வியகம் இது.
ஜும்ஆத் தொழுகைக்குப் பிறகு…

1. சிறப்பு சொற்பாழிவுகள்… வாரந்தோறும் சங்கத்தின் உலமா பெருமக்கள் சமயம், சமூக கட்டமைப்பு, சமுதாய முன்னேற்றம், கல்வி, பொருளாதாரம் என பல்வேறு தலைப்புகளில் சிறப்புரையாற்றும் நிகழ்ச்சி.
 
2. மார்க்க விளக்க நிகழ்ச்சி: வணக்க வழிபாடுகள், கொடுக்கல் வாங்கல்கள், வாழ்வியல் நடைமுறைகள், பிரார்த்தனை(துஆக்)கள் மற்றும் இறைநினைவு(திக்ரு)கள் ஆகியவற்றில் ஏற்படும் சந்தேகங்களை தெளிவான முறையில் நிவர்த்தி செய்யும் நிகழ்ச்சி இது.
3. வாரந்தோறும் வசந்தம்… ஒவ்வொரு வாரமும் ஒரு கேள்வி கேட்கப்படும். அடுத்து வரக்கூடிய வெள்ளிக்கிழமைக்குள் சரியான பதிலை நேரிடையாகவோ அல்லது அலைபேசி வாயிலாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ தெரிவிக்க வேண்டும். வாரந்தோறும் திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸ்(நபிமொழி)கள் உள்ளே புதைந்து கிடைக்கும் துஆக்கள், திக்ருகள், வரலாற்று நாயகர்கள் போன்றவற்றை பொதுமக்கள் தாங்களாகவே தோண்டியெடுக்கும் அற்புத நிகழ்ச்சியாக இது இருக்கும்.
 
4. வேலைவாய்ப்பு தகவல்கள் அறிவிப்பு… வேலை தேடுவோருக்கும், வேலை அளிப்பவருக்கும் இடையே தொடர்புகளை ஏற்படுத்தும் ஓர் இணைப்புப் பாலம்.
 
5. மரணச் செய்தி அறிவிப்பு.. குவைத்தில் மரணத்தைத் தழுவும் நம் சமுதாய சகோதர, சகோதரிகள் குறித்த அறிவிப்பு 
 
6. மரணமடைந்தவர்கள், நோயாளிகள், கடனாளிகள், அல்லல்படுவோர் போன்றோருக்கான சிறப்பு துஆ மஜ்லிஸ்.
 
வெள்ளிக்கிழமைகளின் பொன்னான நேரங்களை சமுதாய மக்கள் பயனடையும் முறையில் செலவழிக்க நமது சங்கம் பல்வேறு வகைகளில் முயற்சி செய்து வருகின்றது இன்ஷா அல்லாஹ்…
——————-
K-Tic தமிழ் பள்ளிவாசலில்… ஸுன்னத் வல் ஜமாஅத் மார்க்க அறிஞர்கள் / ஆலிம் பெருமக்களின் சொற்பாழிவு DVDக்கள், திருக்குர்ஆன் அரபி மற்றும் தமிழ் மொழிபெயர்ப்பு DVDக்கள், அல்லாமா ஆ.கா. அப்துல் ஹமீது பாகவீ (ரஹ்) அவர்களின் திருக்குர்ஆன் தமிழ் மொழியாக்கம், இனிய திசைகள், நர்கிஸ், சிந்தனைச் சரம், சமநிலைச் சமுதாயம், சமூக நீதி முரசு மாத இதழ்கள் மற்றும் பல்வேறு இஸ்லாமிய நூல்கள் கிடைக்கும்.
——————————————————————————————————-
Web & Media Wing,
Kuwait Tamil Islamic Committee (K-Tic)
Kuwait.
Hotline : (+965) 97 87 24 82
Official Website : www.k-tic.com
ktic

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s