exam resultபழுளுல்லாஹ் பர்ஹான்

மதுரை காமராசர் பல்கலைகழக தொலைநிலை கல்வி பட்டப்படிப்புக்கான கடந்த வருடம் நவம்பர் 2012ம் ஆண்டு இடம்பெற்ற சகல வருட மாணவர்களுக்குமான பரீட்சை முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. இப்பட்டப்படிப்புகளில் இளமானி (BA, BSc, BBA, BCA, B.Com) முதுமானி (MA, MSc, M.Com, MBA, MCA, MLM) மற்றும் பட்டப்பின் டிப்ளோமா கற்கைநெறிக்கான முடிவுகள் யாவும் வெளியிடப்பட்டுள்ளதாக மதுரை காமராசர் பல்கலைகழகத்தின் மட்டக்களப்பு கிளைக்கான இணைப்பாளர். கலாநிதி குணநாதன் தெரிவித்தார்.

இம்முடிவுகளை www.mkudde.org எனும் இணையத்தளமுகவரிக்கு சென்று பரீட்சார்த்திகள் தங்களது பதிவு இலக்கத்தினை உட்செலுத்தி பார்வையிடமுடியும்.

சர்வதேச அங்கீகாரம் பெற்ற இப்பல்கலைக்கழகமானது இலங்கைப்பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் பெற்ற முதல்தர பல்கலைக்கழகமாக திகழ்கின்றது. இலங்கையிலேயே பதிவுகள் வகுப்புக்கள் பரீட்சைகள் பட்டமளிப்புகள் யாவும் இடம்பெறுகின்றன. ஆண்டு தோறும் முறையே ஏப்ரல் நவம்பர் மாதங்களில் காலக்கிரமமாக வருடப்பரீட்சை முறையில் இரண்டு தடவைகள் பரீட்சைகளை நடாத்தி வருகின்றது. தொலைக்கல்வி மூலமாக உயர்படிப்புக்கு சேவை செய்யும் இப்பல்கலைக்கழகமானது மதுரை காமராசர் பல்கலைகழக தொலைநிலை கல்வி இயக்கத்தின் இலங்கைக்கான நேரடிக்கிளையாகவும் உள்ளது.

இப்பல்பலைக்கழகத்தில் இருந்து பட்டதாரிகளாக வெளியேறிய பட்டதாரிகள் பலர் இவ்வருடமும் இலங்கை அரசசேவையில் நியமனம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. புதிய மாணவர்கள் பதிவினை மேற்கொள்ளவும் பரீட்சை முடிவுகள் சம்பந்தமாக தொடர்பு கொள்ள விரும்புபவர்கள் இணைப்பாளர். கலாநிதி ஓ.கே.குணநாதன் மதுரை காமராசர் பல்கலைகழக தொலைநிலைகல்வி அலுவலகம் (ஆதவன் அச்சகம் அருகாமையில்) இல.19 வெயிலி வீதி, அரசடி, மட்டக்களப்பு என்ற முகவரிக்கு கடிதம் மூலம் அல்லது 0094 776041503 தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்படுகிறார்கள்.