3இரசாயன பசளை வகைகளின் இறக்குமதிக்கு உடனடி தடை

ALL05_02[1]புரோபனில் (Propanyl) காப்ரில் (Carboryl) க்ரோபைரிபொஸ் (Chloropyriphos) ஆகிய மூன்று இரசாயனப் பசளை வகைகளினதும் இறக்குமதியை உடனடியாகத் தடை செய்வதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

அதேநேரம், ரிப்பிள் சுப்பர் பொஸ்பேர்ட் (trippple Super Phospate- TSP) என்ற இரசாயனப் பசளையின் பாவனையைக் குறைப்பதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

வடமத்திய மாகாணம் உட்பட நாட்டின் சில பிரதேசங்களில் பரவியுள்ள சிறு நீரகப் பாதிப்புக்கு இப்பசளை வகைகள் பெரிதும் பங்களிப்பு செய்து வருவது உறுதிப்படுத் தப்பட்டிருப்பதையடுத்தே அரசாங்கம் இந் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

வட மத்திய மாகாணம் உட்பட நாட்டின் சில பிரதேசங்களில் சிறுநீரக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளவர்களின் சிறு நீர் மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்திய போது அவர்கள் இப்பாதிப்புக்கு முகம்கொடுப்பதற்கு இந்த இரசாயனப் பசளைகள் பெரிதும் பங்களிப்பு செய்வது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை அடிப்படையாகக் கொண்டே மேற்படி மூன்று இரசாயனப் பசளைகளின் இறக்குமதியை உடனடியாக தடை செய் வதற்கும் கெட்னியம் என்ற இரசாயனப் பதார்த்தம் அதிகம் காணப்படும். ரிப்பிள் சுப்பர் பொஸ்பேட் பாவனையைக் குறைப் பதற்கும் அனைத்து அமைச்சுகளை உள்ளடக்கிய குழு முடிவு செய்து இருக்கின்றது.

அதே நேரம் விவசாய இரசாயனப் பொருட்களுக் காக சுகாதாரப் பாதுகாப்புக்கென 10 வீத செஸ் வரி விதிக்கவும் இவ்வரி மூலம் கிடைக்கும் நிதியை சிறுநீரகப் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளவர்களின் நலன்களுக்காக செலவிடவும் கிறுமி நாசினி கள் தொடர்பான ஊடக விளம்பரங்களை தடை செய்வதற்கும் இந்த உபகுழு முடிவு செய்துள்ளது.

இதேவேளை, இச்சிறுநீரகப் பாதிப்புக்கு உள்ளானவர்கள் அதிகம் வாழும் பிரதேசங்களிலுள்ள சகல ஆஸ்பத்திரிகளை அபிவிருத்தி செய்வதற்கு விஷேட வேலைத் திட்டத்தை ஆரம்பிப் பதற்கும், இப்பாதிப்புக்கு உள்ளாகியுள்ள வர்களுக்கு எதுவித குறைபாடுகளுமின்றி சிகிச்சை அளிப்பதற்கும் சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதேநேரம், இப்பாதிப்புக்கு அதிகள விலானோர் உள்ளாகியுள்ள மாதவாச்சி உள்ளிட்ட பிரதேசங்களுக்கு 350 மில்லியன் ரூபா செலவில் சுத்தமான குடிநீர் வசதியைச் செய்து கொடுப்பதற்கும், இப்பாதிப்புக்கு உள்ளானவர்கள் வாழும் பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை வழங்கவும் முடிவு செய்துள்ளது.

-தினகரன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s