– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: காத்தான்குடி மூன்றாம் குறிச்சி ஊர்வீதியில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் குலபா-இர் ராஷிதீன் பள்ளிவாயலில் இயங்கும் அல்-குர்ஆன் மத்ரஸாவில் இருந்து கடந்த ஆண்டு அல்-குர்ஆன் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பரிசளிப்பு வைபவம் இன்ஷா அல்லாஹ் 05.04.2013 வெள்ளிக்கிழமை அன்று மாலை 4 மணிக்கு பள்ளிவாயலில் இடம்பெறும் என பள்ளிவாயல் நிருவாக சபை உறுப்பினரும், விழா ஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்தவருமான மௌலவி. அல்ஹாஜ்.எம்.ஏ.எம்.மஸ்ஊத் அஹ்மத் (ஹாஷிமி) தெரிவித்தார்.
பள்ளிவாயலின் தலைவர் அல்ஹாஜ் ஏ.எல்.பதுருத்தீன் தலைமையில் இடம்பெறும் இவ் விழாவின் பிரதம அதிதியாக மௌலானா மௌலவி. அல்ஹாஜ். எம்.ஏ. அப்துல்ல்லாஹ் (ரஹ்மானி) ஹஸரத் அவர்களும், கொளரவ அதிதிகளாக மௌலவி. அல்ஹாஜ் எஸ்.எம். அலியார் (பலாஹி)-தலைவர், ஜம்மிய்யதுல் உலமா காத்தான்குடி அவர்களும், மௌலவி.அல்ஹாஜ்.ஏ.ஜி.எம். அமீன் (பலாஹி) பேஷ் இமாம், முஹைதீன் மெத்தைப் பள்ளிவாயல் அவர்களும், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிராந்திய பொறுப்பாளர் அஷ்.ஷெய்க்.ஏ.எல்.எம். ஜுனைதீன் (நளீமி) மற்றும் பல உலமாக்களும், ஊர்பிரமுகர்களும், பள்ளிவாயல் நிருவாகிகளும், பெற்றோர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
