
– பழுளுல்லாஹ் பர்ஹான்
காத்தான்குடி: தஹெட்ட கிருல தேசத்துக்கு மகுடம் 2013வேலைத் திட்டத்தின் கீழ் இலங்கைப் போக்குவரத்துச் சபை காத்தான்குடிச் சாலைக்கு பொதுமக்களின் நலன்கருதி புதிய பஸ் வண்டியொன்று இன்று திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக், காத்தான்குடி பஸ் டிப்போ முகாமையாளர் இஸ்மாயில், பொறியியலாளர் றபீக், கணக்காளர் மற்றும் சாலை ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் காத்தான்குடி சாலை முகாமையாளரிடம் உத்தியோகபூர்வமாக புதிய பஸ்வண்டியை கையளித்தார்.


