குழந்தை வளர்ப்பில் பெண்களின் பங்கு

mm[1]இஸ்லாமிய மார்க்கத்தில் நம் குழந்தைகளை எப்படி பராமரிக்க வேண்டும்? எப்படி வார்த்து எடுக்க வேண்டும்? எப்படி கல்வி கற்க பயன்படுத்த வேண்டும்? எப்படி உபதேசம் செய்ய வேண்டும்? எப்போது அடிக்க வேண்டும் போன்ற அனைத்திற்கும் நல்ல வழிகாட்டல்கள் உள்ளன.

முதலில் தாய் இஸ்லாமிய சட்ட திட்டங்களை தெரிந்து கொண்டிருக்க வேண்டும் இஸ்லாமிய வாழ்க்கை தெரியாவிட்டால், தான் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அதில் ஒன்று அல்லாஹ் திருமறையில் கூறுகிறான் இம்ரானின் மனைவி தான் ஒரு பெண் குழந்தையை பெற்று எடுத்ததும் விரட்டப்பட்ட ஷைத்தானிடம் பாதுகாப்பு தேடினார் (அல்குர்ஆன் 3: 35-36).

நபி(ஸல்) அவர்கள் பேரக் குழந்தைகள் ஹஸன்(ரலி), ஹுசைன்(ரலி) அவர்களுக்கு ஒவ்வொரு ஷைத்தானை விட்டும், நஞ்சுள்ள பிராணியை, தீண்டக்கூடிய ஒவ்வொரு பார்வையை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடினார்கள். நூல்: புகாரி பாகம் 4 பக்கம் 119. ஆகவே ஒரு தாய் தன் குழந்தைகளுக்காக முதலில் துஆ செய்வது அடுத்து தன் குழந்தையை தான் தொழும் போது பக்கத்தில் வைத்து கற்றுத்தர வேண்டும்.

உங்கள் குழந்தையை ஏழு வயதை அடைந்தால் தொழும்படி ஏவுங்கள் 10 வயது அடைந்தால் அடித்தாவது தொழ வையுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல் அஹ்மத். லுக்மான்(அலை) அவர்கள் தன் மகனுக்கு, மகனே! தொழுகையை நிலை நாட்டுவாயாக (அல்குர்ஆன் 31:17) என்று உபதேசம் முதலில் செய்தார்கள்.

குழந்தைக்கு கல்வி

குழந்தைகள் முதலில் கற்கும் கல்வி தாயிடமே. அந்த தாய் எதை சொல்லி தருகிறாளோ அதுவே பசு மரத்தாணி போல் உள்ளத்தில் பதிந்து விடும். ஒரு தாய் நினைத்தால் தன் குழந்தையை எப்படிப்பட்டவர்களாகவும் உருவாக்க முடியும் இது தாயின் கடமையும் கூட. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒவ்வொருவரும் உங்களின் பொறுப்புகளைப் பற்றி விசாரிக்கப்படுவீர்கள் ஒரு பெண் தன் கணவனின் வீட்டிற்கும், அவனின் குழந்தைகளுக்கும் பொறுப்பாளி ஆவாள். அறிவிப்பாளர் உமர்(ரலி) அவர்கள் புகாரி 2554.

ஆகவே, தாய் குழந்தைகளுக்கு முதலில் மார்க்க கல்வியை கற்று தரவேண்டும் அதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இதில் தான் மறுமை வெற்றி உண்டு தினமும் காலை மாலை குர்ஆன் பாடம் சொல்லி கொடுக்க வேண்டும் இரவில் தூங்கும் போது குழந்தைகளுக்கு (முன்னோர்கள்) பாட்டி கதை சொல்வார்கள் தற்போதுள்ள குழந்தை சினிமா, சீரியல், கிரிக்கெட் இன்னும் பல. இதை தவிர்த்துவிட்டு குழந்தைகளுக்கு நபி(ஸல்) அவர்களின் போதனைகளை அழகிய முறையில் எடுத்துச் சொல்ல வேண்டும்.

உதாரணமாக குகைவாசிகள் ஹதீஸ் உள்ளது. மூவர் பாறைக்குள் நுழைந்து கொண்டார்கள் பாறை மூடியது அப்போது ஒவ்வொருவடைய பிரார்த்தனையால் வெளிவே வந்தார்கள் அதில் ஒருவர் தன் தாய்க்கும், தந்தைக்கும் செய்த பணிவிடையால் பாறை விலகியது. இந்த ஒரு செய்தியை மட்டும் வைத்து அழகாக சொல்லலாம். அப்படியே குழந்தைகள் உள்ளத்தில் பதிந்து விடும். பிறகு பாருங்கள் அந்த குழந்தை தாய் தந்தையருக்கும் செய்ய வேண்டிய முதல் கடமையை சிறு வயது முதல் அறிந்து கொள்வார்கள். இஸ்லாத்தில் முதல் வணக்கம் அல்லாஹ்வுக்கு அடுத்த தாய் தந்தையர்களுக்குதான் என்று 17:23 என்ற வசனத்தில் அல்லாஹ் எச்சரிக்கின்றான்.

அடுத்து குழந்தைகள் மார்க்க கல்வி பயில சரியாக செல்கிறார்களா பள்ளிக்கூடம் சரியாக போகிறார்களா நல்ல நண்பர்களோடு பழகுகிறார்களா? காசை வீண்விரயம் செய்யாமல் நல்ல செலவு செய்கிறார்களா? என்று பல அம்சங்களை கவனிக்க வேண்டும் மேலும் நேற்றைய படிப்புக்கும் இன்றைய படிப்புக்கு குழந்தையிடம் என்ன வித்தியாசம் உள்ளது என்று கவனிக்க வேண்டும். புதிய நண்பர்கள் உருவாகும் போது அவர்களுடைய பழக்கங்களையும் ஆராய வேண்டும் முதலில் தொழுகை உள்ளதா? என்று கவனிக்க வேண்டும் எந்த அளவிற்கு குழந்தையை கவனிக்கிறீர்களோ அந்த அளவிற்கு குழந்தையின் வெற்றியை காண்பீர்கள்.

குழந்தைகளிடம் பாசம்

மேலும் குழந்தைகள் மேல் பாசமும், நேசமும், அன்பும், அரவணைப்பும் அவசியம் தேவை. நபி(ஸல்) அவர்கள் தம் பேரக்குழந்தைகளோடு கொஞ்சி குலாவியதும் தொழுகையில் உமாமா(ரலி) அவர்களை தோளில் தூக்கி வைத்துக் கொண்டு தொழுவும் செய்து உள்ளார்கள் என்பதை ஹதிஸ் மூலம் நாம் அறிகிறோம். நபி(ஸல்) அவர்கள் சிறுவர்களுக்கு சலாம் சொல்லி உள்ளார்கள் ஏன் அந்த தெருவில் விளையாடிய குழந்தைகளுக்கு முதலில் சலாத்தை கொண்டு அந்த குழந்தைகளிடம் பாசத்தை பெற்றுள்ளார்கள். அல்லாஹ் திருமறையில் 4:86 என்ற வசனத்தில் சலாம் என்ற வாழ்த்து கூறப்பட்டால் அதைவிட அழகிய முறையில் பதில் வாழ்த்து கூறுங்கள். ஆகவே குழந்தைகளுக்கு சலாத்தை கற்றுக் கொடுக்க வேண்டும்.

அண்டைவீட்டாரின் குழந்தைகளிடம் அன்பு

மேலும் தாய்மார்களும் தந்தைமார்களும் குழந்தைகளுக்கு புகட்டவேண்டிய பெரிய பொறுப்பு அண்டை வீட்டாரை பற்றி. அண்டை வீட்டாரிடம் நபி(ஸல்) சொத்தில் பங்கு கொடுப்பார்களோ என்று என்னும் அளவிற்கு பாசம் வைத்துயிருந்தார்கள் என்று அன்னை ஆயிஷா(ரலி) மூலமாக நாம் காண்கிறோம். நீங்கள் அண்டை வீட்டோடு நல்ல நட்பு வைத்து இருந்தால் நம் குழந்தையும் அண்டை வீட்டில் உள்ள குழந்தைகளோடு நல்ல நட்பு வைப்பார்கள் அவர்களோடு பழுகுவார்கள் தூரத்து நண்பர்களiவிட பக்கத்து வீட்டு நண்பர்கள் மேலானவர்கள் இதில் இரண்டு கூலியையும் பெறலாம் இதில் பெரிய படிப்பனை உண்டு.

வரலாறு

ஒரு தாய் குழந்தை வளர்ப்பில் பெரும் பங்கு வரலாற்றில் காணப்படுகின்றது உம்மு சுலைம்(ரலி) தனது கணவர் ஊரில் இல்லாதபோது இஸ்லாத்தை ஏற்றார்கள் ஏற்ற இஸ்லாம் சரியான மார்க்கம் என்று புரிந்து கொண்ட அன்னை உம்மு சுலைம்(ரலி) அவர்கள் தனது மகன் அனஸ்(ரலி) அவர்களை இஸ்லாத்தின் பால் வளாத்து எடுக்கிறார்கள் அவர்களால் நமக்கு கிடைக்க பெரும் பொக்கிஷம் 2286 ஹதிஸ்கள் கிடைக்கின்றன. இப்படி ஒவ்வொரு தாயும் தன் குழந்தைகளை உருவாக்கினால் இன்று ஏற்பட்டுயிருக்கின்ற ஏகப்பட்ட பிரச்சினைகளுக்கு வருங்காலத்தில் தீர்வு சொல்லக்கூடிய மாணவர்களாக ஆசிரியர்களாக உருவாகுவார்கள்.

மற்றொரு வரலாறு ஒரு தாய் எந்த அளவிற்கு உறுதியாக குழந்தைகளை வளர்த்து உறுதியுடன் இருக்க வேண்டும் என்பதற்கு ஓர் எடுத்துகாட்டு அன்னை ஆயிஷா(ரலி) அவர்களின் சகோதரி அஸ்மா(ரலி) அவர்களின் மகனார் அப்துல்லாஹ் பின் ஜுபைர்(ரலி) அவர்கனை கொடுங்கோலன் கழுகு மரம் ஏற்றிய போது அஸ்மா(ரலி) அவர்கள் ஆற்றிய உரையில் ஒவ்வொரு தாய்மார்களுக்கும் படிப்பினை பல இருக்கின்றன இது போன்ற வரலாறுகளை நாம் தெரிந்து கொண்டு தாய் தன் குழந்தை மார்க்க லட்சியத்திற்காகவும் குழந்தைகளை வார்த்து எடுக்க வேண்டும்.

கண்ணியம்

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் உங்களிடம் கண்ணியத்துடன் நடந்து கொள்வது உங்கள் குழந்தைகளின் உங்கள் குழந்தைகளைச் சமமாக நடந்து கொள்வது உங்களின் கடமை. நூல் அபூதாவூத். ஆகவே தாய் அனைத்து குழந்தைகளிடமும் பாசத்தோடும் அன்போடும் நடந்து கொள்ள வேண்டும்.

படிப்பினை

1. குழந்தைகளுக்கு அல்குர்ஆனும் அண்ணலாரின் நபிமொழிகளையும் வாழ்க்கை காட்டியாக எடுத்து சொல்ல வேண்டும்.

2. மூட நம்பிக்கைகளை குழந்தைகளுக்கு நம்பிக்கை ஊட்டாதீர்கள் மிளகாய் சுற்றி போடுவது பூனை குறுக்கே சென்றால் போகாதே என்று சொல்வது அறிகால் இடித்தால் போகாதே இன்னும் பல

3. ஒழுக்கத்தை உயராக மதித்து குழந்தைகளுக்கு நல்ல பண்புகளை கற்று கொடுப்பது

4. மார்க்க புத்தகங்கள்  வரலாறுகள் படிக்க பார்க்க ஆர்வ முட்டுங்கள்

5. தாய் தன் குழந்தைகளிடம் பொறுமையை கண்டிப்பாக கையாள வேண்டும்.

6. தாய் தன் குடும்பத்தில் உள்ள அலமாரியை அழகு பொருட்களால் அலங்கரிக்காமல் சிறந்த நூலகங்களாக உங்கள் அலமாரியை ஆக்குங்கள் அது உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் உங்களை நாடிவரும் விருந்தினர்களுக்கு பயன் உள்ளதாக ஆக்குங்கள்.

7. பிள்ளைகளுக்கு சிறந்த உதாரணமாக நீங்களே வாழ்ந்து காட்டுங்கள் இதன் மூலம் வருங்காலத்தில் உங்கள் குழந்தைகளிடம் அன்பை பெருவீர்கள்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் ஆதமுடைய மகன் மரணித்து விட்டால் அவனது அமல்கள் அனைத்துமே துண்டிக்கப்படுகின்றன ஆனால் மூன்றைத் தவிர 1. தர்மம் 2. கல்வி 3. அவர்களுக்காக துஆ செய்யக்கூடிய நல்ல குழந்தை என்றார்கள் அறிவிப்பாளர் அபூஹுரைரா(ரலி) நூல் முஸ்லிம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் இஸ்லாத்தின் போதனைகளை எமது வாழ்வில் கடைபிடித்து ஈருலகிலும் நலம் பெற நம் அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக!.

(1430 சுவனப்பாதை நடத்திய மாபெரும் எழுத்துலகப் புரட்சிப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற கட்டுரை)

-சுவனப்பாதை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s