- முகமட் ஜலீஸ், ஐக்கிய இராச்சியம்
குர்ஆன், பைபிள் ஆகிய வேதங்களில் கூறப்படும் நபி இப்றாஹீம் (ஆப்றஹாம்) அலை, நபி யாக்கூப் (ஜேகொப்) அலை அவர்கள் காலம் முதல் நபி மூஸா (மோஸஸ்) அலை அவர்களின் காலம் வரையான 4 பரம்பரைகளில் யூதர்களின் வலராறு இவ் உலகில் ஆரம்பமானது.
மத்திய கிழக்கில் எகிப்தில் இறைத்தூதராக வாழ்ந்து, ஜோர்டனில் மறைந்த நபி மூஸா அலை அவர்களின் மறைவிற்குப் பின்னர், மத்திய கிழக்கில் தனக்கென ஓர் சாம்ராஜ்யத்தை அமைத்து வாழ்ந்து வந்த யூதர்கள், நபி முகம்மது (ஸல்) அவர்களின் காலம் வரை வாழ்ந்து வந்தனர்.
மதீனாவில் விவசாயம், பண்ணை, மற்றும் பிடவை வியாபாரங்களிலும் செல்வாக்குச் செலுத்தி வந்தனர். மக்கா வெற்றியின் பின்னர் காபிர்களும், யூதர்களும் சவூதி அரேபியாவிவிருந்து முற்றாக அகற்றப்படட்னர். அதன் பின்னர் பாரசீக வளை குடாவுக்குள் நுழைந்து அங்கும் வசித்து வந்த யூதர்கள், பலஸ்தீனுக்குள் நுழைகின்றனர்.
ஜெரூஸலம் எனும் புனித நகரத்தை சூழ தனக்கான குடிகளை அமைத்து தங்களது பரம்பரை தொழில்களான விவசாயம், பண்ணை, பிடவை போன்ற வியாபாரங்களை மேற்கொண்டு வந்தனர்.
ஜெரூஸலம் கி.பி. 635ல் அப்பாசியர்களினரதும் உமையாக்களினரதும் ஆட்சியில் 1300 வருடங்கள் தொடர்ந்து முஸ்லிம்களின் ஆட்சியில் இருந்து வந்தது. முஸ்லிம்களின் புனிதஸ்தலங்களில் ஒன்றான பைத்துல் முகத்தஸ்-மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாயல் முஸ்லிம்களின் கீழ் இருந்து வந்தது.
முஸ்லிம்களின் படையெடுப்பால் யூதர்கள் ஐரோப்பா நாட்டுக்குள் நுழைந்தனர். ஐரோப்பாவுக்குள் நுழைந்த யூதர்கள் தங்களது மறைந்து கிடக்கும் திறமைகளை வளப்படுத்தி, வெளிப்படுத்தினர். பல நூற்றாண்டுகள் சிந்திகாத தொழிநுட்பங்களையும் அறிவியல்களையும் கற்று தனக்கான ஓர் கல்விச் சமூகத்தை உலகளவில் வளர்த்தனர்.
யூதர்களின் திறனையறிந்த அமெரிக்கா, தங்களது நாட்டில் யூதர்களுக்கு அடைக்களம் கொடுத்து அவர்களிடமிருந்து அறிவைப்பெற நாட்டம் கொண்டது.
இதற்கிடையில் இரண்டாம் உலகப்போரில் ஜேர்மனில் வாழ்ந்த யூதர்கள் படுகொலை செய்யப்பட்டு அழிக்கப்பட்டு வந்தனர்.
இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா-பிரிட்டன் கூட்டணி வெற்றி பெற்றதும் உலக ஜாம்பவான்களாக அன்று முதல் இன்றுவரை குறித்த இரு நாடுகளும் உலகில் செல்வாக்குச் செலுத்தி வருவதும் நாம் அறிந்த விடயம்.
ஜேர்மனியில் தப்பிப் பிழைத்த யூதர்கள் தங்களது பூர்வீக நிலத்துக்கு திரும்பி வந்தனர். 1947ல் பிரமாண்டமான யூதர்கள் ஜெருஸலத்தில் குடியிருந்தனர். பலஸ்தீன் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, ஒன்று பலஸ்தீன் எனவும் மற்றையது இஸ்ரேல் எனவும் பிரிக்கப்படு உலக வரைபடத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.
முஸ்லிம்களின் பலமற்ற அக்கால கட்டத்தில் ஓர் முஸ்லிம் நாட்டுக்குச் சொந்தமான பூமி இஸ்ரேலுக்கு சொந்தமாகிறது. அவற்றின் பினனணியில் மேற்படி இரு நாடுகளும் இருந்தன.
இஸ்ரேலின் கொடியில் வெள்ளை நிறம், இரு நீல நிறக்கோடுகள் மற்றும் நட்சத்திரம் என்பவை காணப்படும். அவற்றுள் இரு நீலக் கோடுகளாவன இரு பிரதான நதிகளை இலக்கு வக்கப்பட்டிருக்கின்றன. இஸ்ரேலின் எல்லைகளும் இவ்விரு நதிகள் செல்லும் தூரம் வரைக்கும் விரிவுபடுத்தப்படும். நீர் வளமில்லாத இஸ்ரேலின் இலக்கு, நீர் வளத்தைப் பெறுவதுமொன்றாகும்.
ஒன்று டைக்ரஸ் மற்றையது யூப்பிரடீஸ். இவை இரண்டும் ஈராக், சிரியா, துருக்கி, ஆகிய நாடுகளை ஊடறுக்கும் பிரமாண்ட நதிகளாகும். இறுதிநாளின் அடையாளங்களில் ஒன்றாக இந்நதிகளில் ஒன்றில் தங்கமலை விளையும் என்பதும் எதிர்வு கூறப்பட்டதொன்றாகும்.
வெள்ளை நிறம் இஸ்ரேல் நாட்டையும், நட்சத்திரம் யூதர்களைக் குறிப்பதாகவும் அமைகின்றது.
யூதர்களின் மதிநுட்பத்தால் இன்று அமெரிக்கா மறைமுகமான அடிமையாய் இஸ்ரேலில் தங்கி இருக்கின்றது. அமெரிக்கா-நாஸா விண்வெளி ஆராய்ச்சியிலும், அமெரிக்க உலவுப் பிரிவிலும் யூதர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
இஸ்ரேலில் 5,703,700 யூதர்கள் வாழ்கின்றனர். இஸ்ரேலுக்கு அடுத்தாக அமெரிக்காவில் 5,275,000 யூதர்களும், பிரான்ஸ், கனடா, இங்கிலாந்து, ரஷ்யா முறையே 483,500, 375,000, 29,2000 யூதர்களும் வாழ்கின்றனர். இதைவிட ஏனைய நாடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர். உலகில் மொத்தமாக 13,428,300 யூதர்கள் வாழ்கின்றனர்.
முஸ்லிம்களுக்கு குர்ஆன் வேதம் என்பது போல், யூதர்களுக்கு தௌராத் வேதமாகும். எனினும் அசல் தௌராத் இல்லாமல் அவற்றில் மாற்றம் செய்யப்பட்ட வேதத்தையே இன்றும் பின்பற்றி வருகின்றனர்.
‘டெல் அவிவ்’ தலை நகரமாக இருந்தாலும் ஜெரூஸலமே முதல் நகரமாகக் கருதப்படுகிறது. ஜெரூஸலத்தில் 788,200 இஸ்ரேலியர்களும், டெல் அவிவ் இல் 404,000 இஸ்ரேலியர்களும் வசித்து வருகின்றனர். இஸ்ரேலின் மொத்த சனத்தொகை 7,941,900. இவற்றுள் 75.4% யூதர்களும், 20.6 % அரபியர்களும், 4% ஏனையோர்களுமாக வாழ்கின்றனர்.
உத்தியோகபூர்வ மொழிகளாக ஹீப்ரு, அரபி என்பன உபயோகிக்கப்படுகின்றன. ‘நியூ செகேல்’ என்பது நாணயத்தின் பெயராகும். இஸ்ரேலின் மொத்த நிலப்பரப்பில் நீர் ஆக 2% வீதமே இருப்பது குறிப்பிடத்தக்கது.
கல்வி அறிவு 97.1 வீதமாக இருக்கின்றது. இஸ்ரேலில் இருக்கும் அரபிகள் தங்களது பிள்ளைகளை அரபியில் கற்பிப்பதற்கு அரபு மொழி பாடசாலைகளுக்கு அனுப்புகின்றனர். சர்தேச ஆங்கில மொழி பாடசாலைகளும் இயங்கி வருகின்றன.
இஸ்ரேல் உலகில் உயர் வாழ்க்கைச் செலவு அதிகரித்த நாடுகளில் ஒன்றாக இருக்கின்றது. 2011ல் உந்நாட்டு உற்பத்தி ஏற்றுமதியில் உலகில் 41வது ஓர் பெரிய ஏற்றுமதி நாடாகவும் இருந்து வருவதுடன், மத்திய கிழக்கில் அதியுயர் வாழ்க்கைக்கு முதல் தர நாடாகவும் விளங்குகின்றது.
‘மொஸாட்’ என்பது நாட்டின் புலனாய்வுப் பிரிவாகவும், ‘சின் பெட்’ என்பது உந்நாட்டு பாதுகாப்பு பிரிவாகவும், ஆமேன் என்பது இராணுவப் புலணாய்வுப் பிரிவாகவும் செயற்பட்டு வருகின்றன.
IDF (Isreal Defense forces) எனும் இஸ்ரேலியப் பாதுகாப்புப் படையினரே யுத்த களங்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றனர். இவற்றின் கீழ் முப்படைகளும் உள்ளடங்கும். IDF இற்கு அமெரிக்கா, செக்கோஸ்லவாக்கியா, தென் ஆபிரிக்கா, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஆயுத தளபாடங்களை வழங்கி வருகின்றன.
பலஸ்தீனர்களாக இருந்தாலும் அரபியர்களாக இருந்தாலும் இஸ்ரேல்-பலஸ்தீன் எல்லைக்குள் வாழ்பவர்களுக்கு இஸ்ரேல் கடவுச்சீட்டே (Passport) வழங்கப்படும். இது இவ்வாறிருக்க, என்னதான் சர்வதேச அந்தஸ்த்தை இஸ்ரேல் கொண்டிருந்தாலும், மலேசியா கடவுச்சீட்டில் நேரடியாக இஸ்ரேலுக்குச் செல்ல முடியாது. சர்வதேச கடவுச்சீட்டு, மற்றும் உலக தரமிக்க ஓர் நாடாக மலேசியா இருப்பினும், ‘இஸ்ரேலுக்கு அனுமதி இல்லை’ என்பது மலேசியா கடவுச்சீட்டில் அச்சிடப்பட்டுள்ள வாசகம்.
எத்தனை கோடிகள் கொடுக்க பேரம் பேசப்பட்டாலும் மலேசியா முஸ்லிம்களுக்கு மரியாதையளிக்கும் வகையில் அவற்றை அசைக்க முடியாமல் இன்றுவரை கடைப்பிடித்து வருவதானது, அது மலேசியாவுக்கான தனி அந்தஸ்த்தை உலகில் ஓங்கச் செய்திருக்கின்றது.