இன்டர்நெட் வந்தபிறகு ‘உளவு’ வேலைகள் சகஜமாகிவிட்டன. கூகிள் மேப் போன்ற மென்பொருட்கள் வீதி, வீடு, மொட்டை மாடி, என எல்லா இடங்களிலும் இரகசியக் கண் வைத்து கவனிக்கின்றன. யார் எங்கே போகிறார் என்றெல்லாம் கூட அது கண்டுபிடித்து விடுகிறது.
அதே போல தான் செல்போன். கையில் ஒரு செல்போன் இருந்தால் போதும். ஒரு நபர் எங்கே இருக்கிறார். எப்போது அந்த இடத்துக்கு வந்தார். எங்கேயெல்லாம் போனார் என சர்வ சங்கதிகளையும் கண்டு பிடித்து விடலாம். வெளிநாடுகளில் காவல் துறையினருக்கு துப்புத் துலக்கு வதில் இப்போதெல்லாம் அதிகம் பயன்படுவது செல்போன்தான்! குற்றவாளிகளை வலை வைத்துப் பிடிக்க அது வசதியாக இருக்கிறது.
இதையெல்லாம் தாண்டியும் ‘நாம் கவனிக்கப்படுவோம்’ என்ற தொழில் நுட்பம் நமது வீட்டின் அறைகளுக்குள் நுழைந்து நம்மைக் கண்காணிக்கும் என்கிறார் அமெரிக்காவிலுள்ள சி.ஐ. ஏ. இயக்குனர் டேவிட் பீட்ரஸ்.
-தினகரன்