காத்தான்குடி அல்மனார் இஸ்லாமிய அறிவியற்கல்லூரிக்கு எதிர்வரும் வருடத்திற்குரிய (2013) புதிய மாணவர்கள் அனுமதிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
கடந்த காலங்களைப் போலல்லாது இம்முறை மார்க்கக் கல்வியையும் பாடசாலைக் கல்வியையும் எமது கல்லூரியிலேயே கற்பதற்கான முழுமையான வசதிகள் செய்யப்பட்டு மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர்.
‘சிறந்த அறிவும் சீரிய ஒழுக்கமும் கொண்ட மாணவர் சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு இவ்வாறான முழுநேரக் கற்பித்தல் முறையே சிறந்ததென புத்திஜீவிகள், கல்வியியலாளர்கள் ஆகியோருடன் நடைபெற்ற கலந்துரையாடலில் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.’
இதற்கமைய பின்வரும் தகைமைகளைக் கொண்ட மாணவர்கள் சேர்த்துக் கொள்ளபப்படவுள்ளனர்.
1. விண்ணப்பதாரி அனுமதி பெறும் வருடத்தில் (2013) தரம் 9 இல் கற்பவராக இருப்பதோடு பாடசாலைக் கல்வியைத் தொடர்பவராகவும் இருத்தல் வேண்டும்.
2. அனுமதி பெறும் போது 15 வயதுக்குட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பப்படிவங்களை கல்லூரியில் Rs.100/-செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம்.
மேலதிக விபரங்களுக்கு :
அல்மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரி,
த.பெ. இலக்கம் : 13,
கடற்கரை வீதி,
புதிய காத்தான்குடி
அதிபர் : 0773784832
அலுவலகம்: 0652245797/0652248165