தாலிக்கொடி திருடனை பிடிக்க உதவிய ‘Power Windows’

கொழும்பில் வாகன நெரிசல்கள் இருந்தாலும் மின்விளக்கு சமிக்ஞைகள் இயங்கும் சந்திகளில் வாகனங்கள் நிறுத் தப்படும் போது அவற்றை நெருங்கி பிச்சை கேட்போரின் தொல்லை நாளாந்தம் அதிகரித்தவண்ணம் இருக்கின்றது. கைக்குழந்தைகளுடன் பெண்கள் நிறுத்தப் பட்டிருக்கும் வாகனங் களின் ஜன்னலைத் தட்டி பிச்சை கேட்பார்கள்.

வாகன ஓட்டிகள் அவர்களின் கையில் உள்ள பச் சிளம் பாலகர்களைப் பார்த்து பரிதாபப்பட்டு பணம் கொடுப்பார்கள். இந்தப் பால கர்கள் இப்பெண்களின் பிள்ளைகளா? அல்லது வாடகைக்கு எடுக்கப்பட்ட பிள்ளைகளா என்ற சந்தேகம் இப்போது பொலிஸார் மனதில் வலுப்பெற்றுள்ளது. இந்தப் பாலகர்களுக்கு இப்பெண்கள் உரிய முறையில் பாலுணவைக் கூடக் கொடுப்பதில்லை. பாலகர்கள் ஆரோக்கியமாக இருந்தால் எவரும் பரிதாபப்பட்டு உதவி செய்யமாட்டார்கள் என்பதற்காகவே இந்தப் பாலகர்கள் இவ்விதம் துன்பப்படுத்தப்படுகிறார்கள். Read the rest of this entry »

“பிரபாகரன் மிகப்பெரும் வரலாற்றுத் தவறு செய்தார்”: எரிக் சோல்ஹெய்ம்

– BBC/Tamil

இலங்கை இராணுவத்துக்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இடையிலான போரில், 2009 ஆம் ஆண்டின் துவக்கத்தில், போரின் இறுதிக் கட்டத்தில் பெருமளவிலான பொதுமக்கள் கொல்லப்படக்கூடிய மனிதப் பேரவலம் நடக்காமல் தடுக்கும் நோக்கத்தில் சர்வதேச நாடுகள் கூட்டாக ஒரு முயற்சி எடுத்ததாக ஏற்கெனவே செய்திகள் கசிந்திருந்தன.

அந்த முயற்சியில் முக்கிய பங்காற்றிய நோர்வே நாட்டின் முன்னாள் அமைச்சரும், இலங்கையில் அரசுக்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகளை முன்னின்று நடத்தியவர்களில் ஒருவருமான எரிக் சொல்ஹேய்ம், அந்த திட்டம் குறித்து தற்போது வெளிப்படையாக பேசியுள்ளார். Read the rest of this entry »

இலங்கையின் தோல்வி! பட்டாசு ஒலிகளால் மீண்டும் அதிர்ந்த காத்தான்குடி: ஓர் பல்சுவை ஆக்கம்.

-Special Report

நேற்றிரவு முடிவடைந்த நான்காவது உலக இருபது 20 கிண்ண இறுதிப்போட்டியில் உலக இரசிகர்களால் எதிர்வுகூறப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் அணி 36 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்று முதன் முறையாக இருபது20 உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றிக்கொண்டது. இலங்கை 18.4 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது. Read the rest of this entry »