இனிமையான குணம், இனவாதமற்ற சிந்தனைக்கு கிடைத்த சன்மானம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு விசுவாசமான குடும்ப மாக இருந்து மூதூர் தொகுதியிலுள்ள மக்களிடையே கைசின்னத்தை வேரூன்ற வைத்த ஏ. எல். அப்துல் மஜீதின் (முன்னாள் அமைச்சர்) புதல்வரான நஜீப் ஏ. மஜீதின் கட்சி விசுவாசத்திற்கு கிடைத்த பரிசே கிழக்கு முதலமைச்சர் பதவியாகும்.

தான் எதிர்கொண்ட சகல தேர்தல்களிலும் கட்சி விசுவாசத்தைப் பேணி வந்த நஜீப் ஏ மஜீப் எந்த மேடைகளிலும் இனவாதம் பேசியதில்லை. 1989 ம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிட அழைக்கப்பட்ட போதும் கட்சியின் மீது தனக்கிருந்த விசுவாசத்தால் சு. கட்சியிலே போட்டியிட விரும்பினார். Read the rest of this entry »

விஞ்ஞானம், கணித பட்டதாரிகள் 1000 பேருக்கு இன்று ஆசிரிய நியமனம்

விஞ்ஞானம் மற்றும் கணித பட்டதாரிகள் ஆயிரம் பேருக்கு இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் இன்று ஆசிரிய நியமனங்கள் வழங்கப்படும்.

இந்நிகழ்வு இன்று மாலை 4.30 மணிக்கு அலரி மாளிகையில் நடைபெற ஏற்பாடாகி யுள்ளதென கல்விய மைச்சர் பந்துல குணவர்தன தெரிவித் தார். தெரிவு செய்யப்பட்டுள்ள ஆயிரம் விஞ்ஞானம் மற்றும் கணித பட்டதாரி களுக்கு, தாங்கள் கடமையாற்றப்பட வேண்டிய பாடசாலையின் பெயருடன் கூடியதாகவே நியமனங்கள் வழங்கப்பட வுள்ளமை குறிப்பிடத்தக்கது. Read the rest of this entry »

2500 குழந்தைகளுக்கு புலமைப்பரிசில் ஜனாதிபதி வழங்கினார்

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து வெளிநாடுகளில் தொழிலுக்குச் சென்றுள்ள பெற்றோரின் 2500 குழந்தைகளுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று புலமைப் பரிசில் வழங்கினார். Read the rest of this entry »

கிழக்கு மாகாணசபையின் கன்னி அமர்வு

கிழக்கு மாகாணசபையின் கன்னி அமர்வு இன்று காலை திருகோணமலையிலுள்ள மாகாண சபை மகாநாட்டு மண்டபத்தில் சம்பிரதாய பூர்வமாக இடம்பெற்றது.

சபையின் செயலாளரினால் சபையில் ஆளுநரின் சபை கூட்டுவதற்கான கடிதம் வாசிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. Read the rest of this entry »