பகிரங்க விவாதத்துக்கு வருமாறு சமுர்த்தி அதிகாரிகள் சங்கம் சவால்!

திவிநெகும திணைக்களத்தை உருவாக்குவது தொடர்பான சட்டமூலம் குறித்து எதிர்க்கட்சிகள் போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றன. முடிந்தால் இச்சட்டமூலம் தொடர்பில் பகிரங்க விவாதத்துக்கு வருமாறு அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர் சங்கம் சவால் விடுத்துள்ளது.

மக்களின் கோரிக்கைக்கு இணங்கவே சமுர்த்தி அதிகாரசபை, தெற்கு அபிவிருத்தி அதிகாரசபை, மலையக அபிவிருத்தி அதிகாரசபை ஆகியவற்றை இணைத்து திவிநெகும திணைக்களத்தை உருவாக்கும் சட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருப்பதாக அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர் சங்கத்தின் பிரதம செயலாளர், மேல்மாகாண சபை உறுப்பினர் எஸ்.ஏ.டீ.ஜகத் குமார தெரி வித்தார். Read the rest of this entry »

புல்மோட்டையில் ஜனாதிபதி

மூன்று தசாப்தகால யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ள அபிவிருத்திப் பயணத்தை பின்நோக்கி இட்டுச்செல்ல எந்தவொரு சக்திக்கும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

புல்மோட்டையில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு ஜனாதிபதி மேலும் கூறியதாவது: Read the rest of this entry »

நிந்தவூரில் கோர விபத்து : 6 பேர் பலி

நிந்தவூர் அட்டப்பள்ளம் பகுதியில் இன்றிரவு (28.08.2012) 8.35 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

அக்கரைப்பற்றிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற பஸ்ஸும் அக்கரைப்பற்று நோக்கிச்சென்ற முச்சக்கர வண்டியும் நேருக்கு நேராக மோதியதிலேயே இந்த உயிரிழப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. Read the rest of this entry »