ஷவ்வால் பிறை பார்த்தல் தொடர்பாக அன்புப் பொது மக்களுக்கு காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் அன்பான வேண்டுகோள்

அஷ்செய்ஹ் CMM. அமானி

அன்புடையீர்,

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ

எம்மை எதிர்நோக்கி வரும் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளைத் தீர்மானிக்கும் முகமாக எமதூரிலும் எமதூரை அண்மித்த கிராமங்களிலும் ஷவ்வால்; பிறையைப் பார்த்து அறிவிக்குமாறு காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா சகல பொது மக்களையும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றது. Read the rest of this entry »

அவசர பொலிஸ் அழைப்புக்கு குறுந்தகவல் சேவை!

பொலிஸ் தலைமையகத்தில் 119 என்ற அவசர தொலைபேசி சேவைக்கு மேலதிகமாக எஸ்.எம்.எஸ். குறுந்தகவல் சேவையொன்றை பொலிஸ் தலைமையகம் விரைவில் ஆரம்பிக்கவுள்ளது.

பொலிஸ் திணைக்களத்தின் 146 வது வருட பூர்த்தியை முன்னிட்டு இந்த புதிய சேவையை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 03ம் திகதி பொலிஸ்மா அதிபர் என்.கே. இளங்ககோன் ஆரம்பித்து வைப்பாரென பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார். Read the rest of this entry »

அட்டாளைச்சேனை சம்வம்: அதாவுல்லாஹ், எஸ்.எஸ்.பி. பின்னணியில்: ஹக்கீம்

-MMS

நேற்று முன்தினம் அட்டாளைச்சேனையில் இடம்பெற்ற தேர்தல் கலவரத்திற்குப் பின்னணியில் அமைச்சர் அதாவுல்லாஹ்வும் அமபாறை எஸ்.எஸ்.பி பிரேமலால் ரனகல ஆகியோரம் இருப்பதாக நீதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்திருக்கின்றார். Read the rest of this entry »

ஆவரத்தன அட்டவணை தரப்படவில்லை! மாணவர்கள் கவலை

-MMS

இவ்வருடத்துக்கான க.பொ.த உ-த பரீட்சை ஆரம்பித்த நாள் தொடக்கம் விஞ்ஞான பிரிவுக்கான பாடங்களில் சில தவறுகள் இடம்பெற்று வந்ததை மாணவர்களும் ஆசிரியர்களும் தெரிவித்திருந்தனர்.  இந்தவகையில்  இன்றுகாலை நடைபெற்ற உயர்தர விஞ்ஞானப்பிரிவின் புதிய பாடத்திட்டத்திற்கான இரசாயனவியல் பாடத்தின் முதலாம் பகுதி வினாப் பத்திரத்தில் ஆவர்த்தன அட்டவணை தரப்படும் என அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ள போதும் ஆவர்த்தன அட்டவணை தரப்படவில்லை என மாணவர்கள் தெரிவிக்கின்றனர். Read the rest of this entry »

சூரியனுக்கு அண்மையில் இன்று காத்தான்குடியில் தென்பட்ட மர்மப் பொருள்

– MBM றிப்தி

இன்று காலை தொடக்கம் சூரியனைச் சுற்றி சில மர்மப்பொருட்கள் தென்பட்டது. ஒவ்வொரு நேரத்துக்கும் ஒவ்வொரு விதமாக இவை காட்சிதந்தன.  மட்டக்களப்பு மாவட்டத்தில் பல இடங்களிலும் இன்று காலை தொடக்கம் இவை தென்பட்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தவகையில் இன்று காலை 11 மணியளவில் காத்தான்குடியில் சூரியனுக்கு அருகில்  (படம்) இவ்வாறு காட்சி தந்தது. இவை விண்கற்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

பொலிஸார் பக்கச்சார்பாக செயற்படுகின்றனர்: நீதி அமைச்சர்

இலங்கையில் பொலிஸார் பக்கச்சார்பாக செயற்பட்டு வருவதாக நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் குற்றம் சுமத்தியுள்ளார்.

அம்பாறை அட்டாளைச்சேனைப் பகுதியில் எனது வாகனத் தொடரணி மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த இப்தார் நிகழ்வை குழப்புவதற்கு பிரதேச பொலிஸ் உயர் அதிகாரி ஒத்துழைப்பு வழங்கினார். குறித்த பொலிஸ் உயர் அதிகாரி பக்கச்சார்பான முறையில் செயற்பட்டார். Read the rest of this entry »