கடந்தகால பரீட்சைகளின் வினா விடைகள் அடங்கிய நூல் வெளியீடு

இதன் தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூலத்தினாலான புத்தகங்கள் அடுத்தவாரம் வெளியீடு!

இதுவரையில் 60 ஆயிரம் தொடக்கம் ஒரு இலட்சம் வரையிலான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. புத்தகங்களின் சிறப்பு தன்மை, குறைவான விலை மற்றும் அதன் மீது மாணவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை ஆகியன காரணமாக இவற்றை அநேகமானோர் விரும்பி வாங்குவதனை காணக் கூடியதாகவுள்ளது.

கல்வியமைச்சு நடந்து முடிந்த க. பொ. த. சாதாரணதரம் மற்றும் உயர்தர பரீட்சை வினாத்தாள்களை விடைகளுடன் புத்தகங்களாக அச்சிட்டு விற்பனைக்கு வைத்துள்ளது. இப்புத்தகங்களை கல்வி அமைச்சிலும் ஏனைய புத்தக சாலைகளிலும் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று உத்தியோகப் பூர்வமாக தெரிவித்தார்.

இது தொடர்பாக விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று கல்வி அமைச்சில் நடைபெற்றது. இதன்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

2016 ஆம் ஆண்டளவில் க. பொ. த. சாதாரண தரத்தில் விஞ்ஞானம், கணிதம் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட அனைத்து பாடங்களினதும் பெறுபேறுகளை 80 சதவீதத்திற்கு உயர்த்துவதே எமது இலக்கு.

இதற்கென தேசிய கல்வி நிறுவனம், கல்வி அமைச்சு, பரீட்சைகள் திணைக்களம், அமைச்சின் கணிதப் பிரிவு ஆகியன ஒன்றிணைந்து பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. அந்த வகையில் கடந்த வருட பரீட்சை வினாத்தாளை விடைகளுடன் அச்சிட்டு வெளியிட்டிருப்பதும் அத்திட்டங்களுள் ஒன்றென அமைச்சர் கூறினார்.

கணிதத் துறையில் 1994 ஆம் ஆண்டு 32 சதவீதமாகவிருந்த பெறுபேறுகள் கடந்த வருடம் 55 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதேபோன்று விஞ்ஞானத் துறையில் 1994இல் 31 சதவீதமாகவிருந்த பெறுபேறுகள் 2011 இல் 60 வீதமாக அதிகரித்துள்ளதெனவும் அவர் குறிப்பிட்டார்.

கல்வி அமைச்சின் கணிதப் பிரிவைச் சேர்ந்த மிகவும் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் இணைந்து கடந்த வருட வினா விடையினையும் பரீட்சைக்கு தேவையான மாதிரி வினாத்தாள்கள் உள்ளடங்கிய புத்தகமொன்றையும் அச்சிட்டு வெளியிட்டுள்ளனர். இதன் விலை 235 ரூபா மாத்திரமே.

இதுபோலவே 2011 ஆம் ஆண்டின் க. பொ. த. உயர்தரப் பரீட்சை வினா, விடையடங்கிய புத்தகங்கள் மிகவும் குறைந்த விலைக்கு விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

இதுவரையில் 60 ஆயிரம் தொடக்கம் ஒரு இலட்சம் வரையிலான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. புத்தகங்களின் சிறப்பு தன்மை, குறைவான விலை மற்றும் அதன் மீது மாணவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை ஆகியன காரணமாக இவற்றை அநேகமானோர் விரும்பி வாங்குவதனை காணக் கூடியதாகவுள்ளது.

அடுத்த வாரமளவில் இதன் தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூலத்தினாலான புத்தகங்களும் விற்பனைக்கு வெளியிடப்படுமெனவும் அமைச்சர் கூறினார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s