காபூலில் தொடரும் கலவரங்கள்.
புனித குர்ஆன் பிரதிகள் காபூலில் எரிக்கப்பட்டதை அடுத்து அங்கு இரண்டாவது நாளாக கலகம் தொடர்ந்து வருகிறது. இது வரைக்கும் பதினொரு பேர் காயமடைந்திருப்பதாக அங்கு செயற்படும் ஊடகங்கள் அறிவித்திருக்கின்றன.
.காபூலில் உள்ள நேட்டோ படைத்தளத்தில் இந்த குர்ஆன் பிரதிகள் அங்குள்ள படையினரால் எரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ‘லியோன் பனேட்டா’ நடந்த சம்பவத்திற்கு பொது மன்னிப்புக் கோரியுள்ளார். எனினும் இச்சம்பவமானது ‘அமெரிக்காவுக்கு சாவு’ எனவும் ‘கர்ஸாயிக்கு சாவு’ எனும் கோஷங்களுடன் தொடர்ந்து அங்கு கலவரங்கள் தொடர்வதாக செய்தி ஊடகங்கள் அறிவித்திருக்கின்றன.