இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் (U.A.E.) நடைபெற்று வந்த சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டிகளில் 4:0 என்ற ரீதியில் பாகிஸ்தானை வெற்றிகொண்டு Bank Al-Falah வெற்றிக் கிண்ணத்தை இங்கிலாந்து அணி பெற்றுக் கொண்டது.
நேற்று டுபாயில் நடைபெற்ற நான்காவது போட்டியில் கெவின் பீட்டர்சனின் மற்றுமொரு சதம் இங்கிலாந்தின் வெற்றியை இலகுபடுத்தியிருந்தது மற்றுமொரு சிறப்பம்சமாகும். தொடர் ஆட்ட நாயகனாக இங்கிலாந்து அணியின் தலைவர் அலஸ்ரயர் கூக் தெரிவு செய்யப்பட்டார்.
வெற்றிப் பரிசுகளாக வெற்றிக் கிண்ணமும் 250,000 அமெரிக்க டொலர் காசோலையும் வழங்கப்பட்டன. இரு அணிகளுக்குமிடையில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 3:0 என்ற ரீதியில் பாகிஸ்தான் இங்கிலாந்தை வெற்றியீட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இரு அணிகளுக்குமிடையிலான இருபதுக்கு இருபது (மூன்று போட்டிகள் கொண்ட அடுத்த தொடர் எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெற உள்ளது.