ஒக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியில் 1000 புதிய சொற்கள் இணைப்பு

oxford dictionaryலண்டன்: உலகப்புகழ்பெற்ற ஒக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியில் மேலும் புதியதாக 1000 சொற்கள் சேர்க்கப்பட்டுள்ளன. 150 வருடங்கள் பழமை வாய்ந்த உலகப் புகழ்பெற்ற ஒக்ஸ்போர்ட் அகராதி நிறுவனம் ஆங்கில மொழியில் 6 இலட்சம் வார்த்தைகளை வைத்துள்ளது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை புதிதாக அறிமுகமாகும் சொற்களை இணைத்துக் கொள்வது வழக்கம். Continue reading ஒக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியில் 1000 புதிய சொற்கள் இணைப்பு

வேட்பு மனுக்கள் இன்று ஏற்பு: வேட்பாளர்கள், கட்சிகளின் முழு விபரங்கள்…

electionகொழும்பு: ஜனவரி 08ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் இன்று ராஜகிரியவிலுள்ள தேர்தல் செயலகத்தில் கையேற்கப்படவுள்ளன.வேட்புமனுக்கள் கையேற்பு இன்று காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணிவரை ஏற்றுக் கொள்ளப்படவுள்ளன. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் செயலகம் பூர்த்தி செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். Continue reading வேட்பு மனுக்கள் இன்று ஏற்பு: வேட்பாளர்கள், கட்சிகளின் முழு விபரங்கள்…

“முத்தலாக் முஸ்லிம் விவாகரத்து முறை ஒழிய புதிய சட்டம் தேவை”

muslim women ladiesசென்னை: முஸ்லிம் கணவன் ஒருவர் மூன்று முறை தலாக் என்று கூறியே மனைவியை விவாகரத்து செய்யக்கூடிய முத்தலாக் முறையை ஒழிக்க சட்டம் வர வேண்டும் என பாரதிய முஸ்லிம் மகளிர் இயக்கத்தின் வருடாந்த மாநாட்டில் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒற்றை சிவில் சட்டம் வருவதை தாங்கள் ஆதரிக்கவில்லை என்றாலும், இஸ்லாமிய விழுமியங்களுக்கு அமையவே முஸ்லிம் சமூகத்தில் மகளிர் நலனை பாதுகாக்க புதிதாக சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என இந்த அமைப்பு வாதிடுகிறது. Continue reading “முத்தலாக் முஸ்லிம் விவாகரத்து முறை ஒழிய புதிய சட்டம் தேவை”

‘சர்வதேச மனித உரிமைகள் தினம்’

azees– இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ்

– பழுலுல்லாஹ் பர்ஹான்

மார்கழி பத்தாம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினமாகும். இவ்வாண்டின் கருப்பொருளாக ‘மனித உரிமைகள்-365’ என பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி வருடத்தில் சகல நாட்களும் மனித உரிமைகள்தான். ஒரு நாட்டில் அனைவர்களுக்கும் சமமான உரிமைகளை அனுபவிக்கும் வாய்ப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படல் வேண்டும். மனித உரிமைகள் அரசாங்கங்கள் விரும்பியவாறு வழங்கும் கொடைகள் அல்ல. Continue reading ‘சர்வதேச மனித உரிமைகள் தினம்’

காத்தான்குடி அப்றா பாலர் பாடசாலையின் 2014 வருடாந்த பாலர் கலை விழா

hizbullah abra– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: காத்தான்குடி அப்றா பாலர் பாடசாலையின் 2014 வருடாந்த பாலர் கலை விழா 07-12-2014 இன்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது. அப்றா பாலர் பாடசாலையின் தலைவர் வை.எல்.எம்.இப்றாஹீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டதோடு கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் கலந்து கொண்டார். Continue reading காத்தான்குடி அப்றா பாலர் பாடசாலையின் 2014 வருடாந்த பாலர் கலை விழா

பாலமுனை இஸ்லாமிய கலாசார வழிகாட்டல் மையத்தின் ஏற்பாட்டில் ஒரு நாள் சன்மார்க்க ஒன்று கூடல்

abdul hameed– பழுலுல்லாஹ் பர்ஹான்

பாலமுனை: மட்டக்களப்பு –பாலமுனை இஸ்லாமிய கலாசார வழிகாட்டல் மையத்தின் ஏற்பாட்டில் ஒரு நாள் சன்மார்க்க ஒன்று கூடல் 06-12-2014 நேற்று சனிக்கிழமை பாலமுனை அம்மார் ஜூம்ஆப் பள்ளிவாயலில் இடம்பெற்றது. பாலமுனை இஸ்லாமிய கலாசார வழிகாட்டல் மையத்தின் தலைவர் அமான் தலைமையில் இடம்பெற்ற இவ் சன்மார்க்க ஒன்று கூடலில் வாய்மையுள்ள முஸ்லிம் எனும் தலைப்பில் அஷ்ஷெய்க் எம்.டி.எம்.அஸ்ஹர் மின்ஹாஜியும்,நவீன பொருளீட்டலில் ஹலாலும் ஹராமும் எனும் தலைப்பில் அஷ்ஷெய்க் எச்.எம்.அஸ்பர் பலாஹியும், Continue reading பாலமுனை இஸ்லாமிய கலாசார வழிகாட்டல் மையத்தின் ஏற்பாட்டில் ஒரு நாள் சன்மார்க்க ஒன்று கூடல்

“சிறுபான்மையிலும் சிறுபான்மையினரான முஸ்லிம்களே ஜனாதிபதி தேர்தலில் ஆட்சியைத் தீர்மானிக்கும் ஆணி வேர்கள்” – அஷ்ஷேய்க். அப்துல் காதர் மசூர் மௌலானா

Mashoor-Moulana[1]கொழும்பு: இலங்கையின் அரசியல் வரலாற்றில் முன்னர் எப்போதுமில்லாத வகையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் முஸ்லிம்களுக்கு அதி முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக அமையப் போகிறது. இந்த ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம்களின் வகிபாகம் என்னவென்பதை அறிய, உள் நாட்டு அரசியல் நோக்கர்கள் உட்பட சர்வதேச நாடுகள் ஆழமாக அவதானித்துக் கொண்டிருக்கின்ற காலகட்டம் இதுவாகும். Continue reading “சிறுபான்மையிலும் சிறுபான்மையினரான முஸ்லிம்களே ஜனாதிபதி தேர்தலில் ஆட்சியைத் தீர்மானிக்கும் ஆணி வேர்கள்” – அஷ்ஷேய்க். அப்துல் காதர் மசூர் மௌலானா

மங்சந்தொடுவாய் ஹிக்மா கல்வி நிறுவனத்தின் பாலர் கலை நிகழ்வு 2014..

-நமது  நிருபர்-

518மஞ்சந்தொடுவாய் ஹிக்மா கல்வி நிறுவனத்தின் பாலர் கலை நிகழ்வு மஞ்சந்தொடுவாய் ஹிழுரியா ஜூம்ஆ பள்ளிவாயல் மதரசா மண்டபத்தினில் திட்ட மிட்டபடி நிறுவனத்தின் தலைவர் ஜனாப் முகம்மது ஹக்கீம் தலைமையில் (07.12.2014 ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது பிரதம அதிதியாக BCAS கல்வி நிறுவனத்தில் பணிப்பாளர், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் கலந்து கொண்டார். Continue reading மங்சந்தொடுவாய் ஹிக்மா கல்வி நிறுவனத்தின் பாலர் கலை நிகழ்வு 2014..

பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் கலந்துகொள்ளவிருந்த நிகழ்வினை தடுத்து நிறுத்த பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா தரப்பினர் முயற்சி

ஊடகப்பிரிவு,
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம்

PMGG-Logo[1]காத்தான்குடி: மஞ்சந்தொடுவாய் பிரதேச பாலர் பாடசாலை நிகழ்வொன்றில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் பிரதம அதிதியாக கலந்துகொள்ளவிருந்த காரணத்தினால், அதனை பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா தரப்பினரால் தடுத்து நிறுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. Continue reading பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் கலந்துகொள்ளவிருந்த நிகழ்வினை தடுத்து நிறுத்த பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா தரப்பினர் முயற்சி

மைத்திரியின் தேர்தல் ஊர்வலத்தில் பங்கேற்ற மஹிந்தவின் மோட்டார் சைக்கிள்கள்!!

motor_bike_002[1]பொலன்னறுவை: அரசாங்கத்தில் உள்ளவர்களுக்கு மஹிந்த ராஜபக்சவின் சலுகைகள் அறிவிக்கப்பட்டாலும் அவர்களில் பலர் எதிர்க்கட்சி பொதுவேட்பாளருக்கு வெளிப்படையாகவே ஆதரவை வெளியிட்டு வருகின்றனர். இலங்கையில் தற்போது ஜனாதிபதி தேர்தலை குறி வைத்து அரச ஊழியர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. Continue reading மைத்திரியின் தேர்தல் ஊர்வலத்தில் பங்கேற்ற மஹிந்தவின் மோட்டார் சைக்கிள்கள்!!

“இரானுவத்தினருக்கும் பிரதேச மக்களுக்கும் இடையில் உடன்பாடு ஒன்று காணப்படுவதற்கான நடவடிக்கையெடுக்கப்பட்டு வருகிறது”

settikulam– செட்டிக்குளத்திலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா

செட்டிக்குளம்: வவுனியா மாவட்டத்தில் செட்டிக்குளம் பிரதேச செயலகப் பிரிவில் முஸ்லிம்களின் பயன்பாட்டிற்கென ஒதுக்கப்பட்ட 12 ஏக்கர் காணி தொடர்பில் இரானுவத்தினருக்கும் பிரதேச மக்களுக்கும் இடையில் உடன்பாடு ஒன்று காணப்படுவதற்கான நடவடிக்கையெடுக்கப்பட்டுவருவதாக செட்டிக்குளம் பிரதேச சபை உறுப்பினர் அப்துல் சருக் தெரிவித்துள்ளார். Continue reading “இரானுவத்தினருக்கும் பிரதேச மக்களுக்கும் இடையில் உடன்பாடு ஒன்று காணப்படுவதற்கான நடவடிக்கையெடுக்கப்பட்டு வருகிறது”

ஆரையம்பதி வாகன விபத்தில் மட்டக்களப்பு தாதியர் கல்லூரி இறுதியாண்டு மாணவி ஸ்தலத்திலேயே பலி

arayampathi– பழுலல்லாஹ் பர்ஹான்

ஆரையம்பதி: காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு–கல்முனை ஆரையம்பதி பிரதான நெடுஞ்சாலையில் 06-12-2014 நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஆரையம்பதி பிரதேசத்தைச் சேர்ந்த மட்டக்களப்பு தாதியர் கல்லூரி இறுதியாண்டு மாணவி கோணேசலிங்கம் விஜிதா வயது 29 என்பவர் ஸ்தலத்திலேயே பலியாகியதுடன் ஒருவர் ஒருவர் காயமடைந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் தெரிவித்தனர். Continue reading ஆரையம்பதி வாகன விபத்தில் மட்டக்களப்பு தாதியர் கல்லூரி இறுதியாண்டு மாணவி ஸ்தலத்திலேயே பலி