Day: June 16, 2013
-
தப்புச் செய்வோர் தண்டிக்கப்படுவர், சட்டம் தெரியாதெனக் கூறுவது ஏற்புடையதல்ல -இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு புலனாய்வு அதிகாரி அப்துல் அஸீஸ்
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: எமது பகுதிகளில் அனேகமான குற்றச் செயல்கள் இடம்பெற்று வருவதையும், அது சிறுவருக்கெதிரான குற்றமாகவும் மற்றொரு வகையில் இளைஞர், யுவதிகளால் புரியப்படும் குற்றமாகவும் காணப்படுகிறது. தப்புச் செய்வோர் தண்டிக்கப்படுவர், சட்டம் தெரியாதெனக் கூறுவது ஏற்புடையதல்ல என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புலனாய்வு அதிகாரி அஸீஸ் தெரிவித்தார்.
-
A9 வட பகுதி மக்களின் சொர்க்கத்திற்கான வாயில்: வரி செலுத்தாமல் சகலரும் பயணிக்கலாம்
கிளிநொச்சி: தென் பகுதியை விடவும் யுத்தம் காரணமாக அழிவுற்ற வடக்கு, கிழக்குப் பிரதேசங்களை மீளக் கட்டியெழுப்புவதில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் விஷேட கவனம் செலுத்தி வருகின்றார் என்று பாரம்பரிய கைத்தொழில் மற்றும் கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கிளிநொச்சியில் தெரிவித்தார்.
-
13ஆவது அரசியல் அமைப்பு அதிகாரங்களையோ பலவீனப்படுத்தும் எம்முயற்சியையும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஆதரிக்காது:பிரசாந்தன்
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக அறிமுகஞ் செய்யப்பட்ட மாகாண சபை முறைமையும் அதனோடு இணைந்த 13ஆவது அரசியல் அதிகாரங்கள் தொடர்பில் தற்போது எழுந்துள்ள சர்ச்சைகள், விமர்சனங்கள் குறித்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஆழ்ந்த கவனம் செலுத்தி வருகிறது.
-
மட்டக்களப்பில் மத மோதல்- எட்டு பேர் காயம்
வாழைச்சேனை: இலங்கையின் கிழக்கே இருமதப் பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல்களில் எட்டு பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
தென்னிலங்கை முஸ்லிம்கள் சிங்கள இனவாதத்தின் கொடுமைகளுக்கு முகம் கொடுப்பதற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸூம் காரணம்!
– பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: இன்று தென்னிலங்கை முஸ்லிம்கள் சிங்கள இனவாதத்தின் கொடுமைகளுக்கு முகம் கொடுப்பதற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசை வடக்கு கிழக்ககிலிருந்து தென்னிலங்கை நாம் கொண்டு சென்றமையும் பிரதான காரணம் என்பதை நாம் ஏற்கத்தான் வேண்டும் என முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் குறிபபிட்டார்.
-
(சிடோ) சமூக மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி ஒன்றியத்தினால் காத்தான்குடியில் புதிய வாசிகசாலை திறப்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் வழிகாட்டலில் (சிடோ) சமூக மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி ஒன்றியத்தினால் காத்தான்குடி முதலாம் குறிச்சி ஊர் வீதி மார்க்கட் சதுக்கத்தில் புதிய வாசிகசாலை ஒன்று 16-06-2013 ஞாயிற்றுக்கிழமை வைபவரதியாக திறந்துவைக்கப்பட்டது.
-
வடமாகாணசபைத் தேர்தலில் மக்கள் சரியான பிரதிநிதிகளை தெரிவு செய்யும் போது மென்மேலும் அபிவிருத்தி காணமுடியும்
– பழுலுல்லாஹ் பர்ஹான் கிளிநொச்சி: வடமாகாண சபைத் தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறும் பட்சத்தில் வடபகுதி மக்கள் சரியான பிரதிநிதிகளை தெரிவு செய்யும் போது மென்மேலும் அபிவிருத்தி காண முடியுமென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார்.
-
இரணைமடு …
யாழ். குடாநாட்டை தென்னிலங்கையுடன் விமான மார்க்கமாக இணைப்பதற்கு பலாலி விமான நிலையம் இருக்கின்றது. முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய வட மாகாணத்தின் பிரதான மாவட்டங்களை தென்னிலங்கையுடன் இணைப்பதற்கான இரணைமடு விமான இறங்குதரையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று காலை சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்தார்.
-
ஹஸ்ஸன் ரூஹானி வெற்றி
தெஹ்ரான்: ஈரானிய ஜனாதிபதி தேர்தலில் மரபுவாத ஆதரவாளரென்றாலும் மிதவாதியாக அறியப்படும் ஹஸ்ஸன் ரூஹானி வெற்றிபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமையன்று நடந்த தேர்தலில் ரூஹானி ஒரு கோடியே எண்பத்தைந்து லட்சம் வாக்குகளைப் பெற்றுள்ளதாக உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
-
காதலர்களை தண்டிக்க காவல்துறையினருக்கு உரிமையில்லை – டலஸ் அழப்பெரும
மாத்தறை: இலங்கையில் வளர்ந்துவரும் நாகரிகத்தில் காதல் இன்றியமையாதது! இதன்காரணமாக அண்மைக்காலமாக காதல் ஜோடிகள் கைது செய்யப்படுதல், காதலர்களின் பெற்றோர்கள் கொல்லப்படுதல், விபச்சாரம் மேலோங்கி விபச்சார விடுதிகள் முற்றுகையிடப்படுதல், காதலர்களின் தற்கொலைகள்… இவ்வாறு நாகரிகத்தின் வளர்ச்சி இலங்கையை பாதித்து வருகின்றது.