Day: June 5, 2013
-
மாகாணங்கள் இணைவதை ரத்து செய்ய இலங்கை யோசனை ?
கொழும்பு: இலங்கை அரசு 13வது அரசியல் சட்டத்தைத் திருத்துவதற்கான சில பிரேரணைகளை விவாதித்து வருவதாக் கூறப்படும் நிலையில், இது குறித்து ஆளும் கூட்டணிக் கட்சிகள் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு நடத்திய ஒரு கூட்டத்திலும் விவாதிக்கப்பட்ட்தாகத் தெரிகிறது.
-
மட்டக்களப்பு அமானா வங்கியின் இரு வெற்றிடங்களுக்கான விண்ணப்பம் கோரல்
மட்டக்களப்பு அமானா வங்கி-தகாபுல் பிரிவுக்கு பின்வரும் இரு வெற்றிடங்களுக்காக தகுதியுள்ளோரிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. மேலதிக விபரங்களுக்கு இப்பிரிவின் முகாமையாளர் எம். உவைஸ் அவர்களைத் தொடர்பு கொள்ளுமாறு விண்ணப்பதாரிகள் கேட்கப்படுகின்றனர்.
-
36வருட ஆசிரியர் சேவையில் இருந்து ஓய்வு
– பஹ்மியூஸூப் திருகோணமலை: திருகோணமலை இக்பால் நகர் தி/முஹம்மதியா முஸ்லிம் வித்தியாலயத்தில் கடமையாற்றிய திருமதி ஜே.சீ.தில்லைராசன் தனது 36வருட ஆசிரியர் சேவையில் இருந்து ஓய்வு பெருவதை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரியாவிடை நிகழ்வு பாடசாலை அதிபர் ஜனாப் ஹிதாயத்துல்லாஹ் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.
-
சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களின் திட்டங்களை பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்ரின் ரொபின்சொன் நேரில் சென்று பார்வை
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியின் கீழ் அக்ரெட் (ACTED) நிறுவனத்தினால் இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட திருகோணமலை, முல்லைத்தீவு, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ்
-
காத்தான்குடி பிரதேசத்தில் எவ்வித முன் அறிவித்தலுமின்றி அடிக்கடி மின்சாரம் துண்டிப்பு-பொது மக்கள் விசனம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் எவ்வித முன் அறிவித்தலுமின்றி மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்படுவதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
-
முஹம்மதியா நூல் நிலையக் கட்டிட அடிக்கல் நாட்டு விழா
– பஹ்மியூஸூப் திருகோணமலை: திருகோணமலை இக்பால் நகர் தி/முஹம்மதியா முஸ்லிம் வித்தியாலயத்தின் 25 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள புதிய நூல் நிலைய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த வாரம் பாடசாலை அதிபர் ஜனாப் ஹிதாயத்துல்லாஹ் தலைமையில் நடைபெற்றது.
-
சாய்ந்தமருது ஸ்ரீ லங்கா யூத் நிலையத்தினால் ஏற்பாடு செய்திருந்த சிரமதான நிகழ்வு
– ரிஸ்கான் முகம்மட் சாய்ந்தமருது: உலக சுகாதார தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது ஸ்ரீ லங்கா யூத் நிலையத்தினால் ஏற்பாடு செய்திருந்த சிரமதான நிகழ்வில் நிலையப் பொறுப்பதிகாரி SMA. லத்தீப் தலமையில் இன்று இடம் பெற்றது.
-
7வதும் இறுதியுமான ஐ.சி.சி. சம்பியன் கிண்ணப்போட்டி நாளை ஆரம்பம்: நுழைவுச் சீட்டுக்கள் தீர்ந்ததால் இரசிகர்கள் அவதி!
– MJ லண்டன்: 1998ம் ஆண்டிலிருந்து இரு வருடங்களுக்கு ஒருமுறை சர்வதேச கிரிக்கட் சம்மேளனத்தினால், நடாத்தப்பட்டு வரும் ஐ.சி.சி. சம்பியன் கிண்ண கிரிக்கட் தொடர் நாளை லண்டன் மற்றும் கார்டிப் நகரங்களில் ஆரம்பமாகிறது.
-
முஸ்லிம்களின் விவாகரத்து நடைமுறை குறித்த வழக்கு
சென்னை: முஸ்லிம் பெண்கள் விவாகரத்து செய்யப்படுவதற்கு சான்றிதழ் தரும் அதிகாரம் காஜிகளுக்கு இல்லை என்று அறிவிக்கக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
-
சாய்ந்தமருது வொலிவேரியன் கிராமத்தின் வீடமைப்புத் திட்டத்தில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் நடவடிக்கை
-றிஸ்கான் முகம்மட் சாய்ந்தமருது: சாய்ந்தமருது வொலிவோரியன் வீட்டுத்திட்டத்தில் பொருளாதார அமைச்சின் கீழ் சாய்ந்தமருது பிரதேச மக்களுக்காக கட்டப்படுகின்ற வீடுகளை பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் பார்வையிட்டார்.
-
கல்குடா அக்குறாணை பாரதி வித்தியாலயத்தின் அடிக்கல் நாட்டுவிழா
– பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: கல்குடா வலயத்திலுள்ள அக்குறாணை பாரதி வித்தியாலயத்தின் அடிக்கல் நாட்டுவிழா நேற்று செவ்வாய்க்கிழமை பாடசாலையின் அதிபர் எஸ்.சிவனேசராசா தலைமையில் இடம்பெற்றது.
-
சகல பாடசாலைகளிலும் சகலரும் கற்கக்கூடிய நிலை பலப்படுத்தப்படும்!
கொழும்பு: தமிழ், சிங்களம், முஸ்லிம் என இன ரீதியாக பாடசாலைகளை ஆரம்பிக்கும் நடவடிக்கைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் பந்துல குணவர்தன நேற்றுப் பாராளுமன்றத் தில் தெரிவித்தார்.